தனித்தமிழ் இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
மறைமலையடிகளுக்கு முன் தனித்தமிழ்க் கொள்கைக்கு அரண் சேர்க்கும், [[மொழியியல்]] ஆராய்ச்சி [[இராபர்ட் கால்டுவெல்]] என்னும் வெளிநாட்டாரால் செய்யப்பட்டிருந்தது. [[கிபி]] [[1838]] இல் திருநெல்வேலிக்கு வந்த அவர் 50 ஆண்டுக்காலம் அங்குத்தங்கிக் [[கிறித்தவம்|கிறித்தவ]]ச் சமயப்பணி ஆற்றினார். அவர் தமிழ் மொழியை வட மொழியுடனும் [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] போன்ற திராவிட மொழிகளுடனும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தார். அவருடைய ஆய்வு அதுவரை இருந்த மொழியியல் நம்பிக்கைகளை உடைத்தெறிந்தது.
 
"வடமொழியே பிறமொழிகளுக்குத் தாய், அதிலிருந்தே மற்றமொழிகள் தோன்றின, அது தேவமொழி" என்னும் கருத்துக்களும்கருத்துகளும் நம்பிக்கைகளும் வலிமையாகப் பரப்பப்பட்டிருந்தன. தமிழ் மொழி, வடமொழியின் துணை இல்லாமல் இயங்க இயலாது என்ற நம்பிக்கை வேர் ஊன்றியிருந்தது. ஆனால், கால்டுவெல்லின் ஆராய்ச்சி பல உண்மைகளை வெளிப்படுத்தியது.
 
வடமொழிக் குடும்பத்திலிருந்து தமிழ் வேறுபட்டது. அது, திரவிடதிராவிட மொழிக் குடும்பத்தின் தாய்மொழி. அதிலிருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகள் தோன்றின. தமிழ் வடமொழியின் துணை இல்லாமல் தனித்தியங்கும் தன்மை வாய்ந்தது என்றும், தமிழ், வடமொழியின் கலப்பை எந்த அளவுக்கு நீக்குகிறதோ அந்த அளவுக்குத் தூய்மை அடைந்து சிறந்து விளங்கும் என்றும் அவர் கண்டுபிடித்து [[1856]] இல் ஒரு நூல் எழுதினார். அது, [[திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)|திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்]] என்னும் நூலாகும்<ref>{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/p102/p1021/html/p1021553.htm | title=5.3 தனித்தமிழ் இயக்க உரைநடை | publisher=[[தமிழ் இணையக் கல்விக்கழகம்]] | accessdate=1 சூன் 2014}}</ref>. "சிறந்தது எதற்கும் பார்ப்பன மூலங் கற்பிக்கும் தன்மை வடமொழிப்புலவர்களின் இயற்கை", என்னும் உண்மையையும் அவர் வெளியிட்டிருந்தார்.
[[பெ. சுந்தரம் பிள்ளை |மனோன்மணியம் சுந்தரனாரும்]] அத்தகையதொரு மொழியியல் கருத்தைத் தாம் இயற்றிய [[மனோன்மணியம்]] நாடகநூலின் தமிழ்த்தெய்வ வணக்கப் பாடலில் கூறியிருந்தார். அதில் "கன்னடம், களிதெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழ் என்னும் ஒரே வயிற்றில் தோன்றிய மொழிகள்" என்று கூறினார். "வடமொழி அழிந்து போன மொழி என்றும் தமிழ் என்றும் இளமையாக வாழும்மொழி" என்றும் பாடிய அவர் கருத்தும் மறைமலையடிகளுக்கு முன்னோடிக் கருத்துக்களாககருத்துகளாக இருந்தன.
 
== சென்னை ஒற்றுமைக்கழகம் ==
வரிசை 25:
அப்போது சென்னை ஒற்றுமைக் கழகம் என்னும் அமைப்பை முனைவர் நடேசன் (முதலியார்)ஏற்படுத்தினார். திராவிடர் சங்கம் என்ற ஓர் அமைப்பையும் அவர் நிறுவினார். அவர் நோக்கம் திராவிடர் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. அவருடைய முயற்சியில் சர்.பி.டி. தியாகராய(செட்டியா)ர், தாரவாத் நாராயண் நாயர் போன்றோர் ஒத்துழைப்பை அளித்தனர்.
 
1916 ஆம் ஆண்டில் "தென்னிந்திய மக்கள்மன்றம்" அமைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் "தென்னிந்திய நலவுரிமைச்சங்கம்" என்றானது. அவ்வாண்டில் சென்னைச் சட்டமன்றத்திலிருந்து தில்லிச் சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. அதில் பி.ஏன்என்.சர்மா,வி.எசு.சீனிவாச சாத்திரி ஆகிய பார்ப்பனர் இருவர் வெற்றி பெற்றனர். ஆனால் அதில்போட்டியிட்ட பார்ப்பனர் அல்லாத டாக்டர் டி.ஏன்என். நாயர் தோல்வியடைந்தார். அவருடைய தோல்வியே புதிய இயக்கம் தோன்றவும் வழி வகுத்தது.
 
1920 இல் பார்ப்பனரல்லாதார்க்குத் தனியே அரசு வேண்டும் என்ற எண்ணம் மிகுதியாயிற்று.
இவ்வாறு தோன்றிய உணர்வில் பதவி எண்ணம் பெரிதாக இருந்ததே ஒழிய மொழி உணர்வும் வரலாற்று உணர்வும் நாட்டு உணர்வும் பெரிதாக இடம் பெறவில்லை. மதச்சடங்கோ வடமொழியோ நால்வர்ணக் கொள்கையோ முற்றாக எதிர்க்கப் படவில்லை.
 
இந்நிலையில்தான் [[மறைமலையடிகள்]] தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழிகளில் புலமை வாய்ந்தவர், ஆதலால்; ஆரியர்களின் மறை, உடன்கீழிருக்கை முதலியவற்றை நன்கு ஆய்ந்து உணர்ந்திருந்தார். அத்துடன் நில்லாது, இதழ்களில் எழுதியும், சொற்பொழிவுகள் செய்தும், அறிஞர்களிடத்திலும், பொதுமக்களிடத்திலும் அக்கருத்துக்களைப்அக்கருத்துகளைப் பரப்பிவந்தார்.
 
1905 ஆம்ஆண்டுக்கு முன்பிருந்தே தமிழர், ஆரியர்பற்றிய ஆராய்ச்சிகளில் அவர் ஈடுபட்டு உழைத்து வந்தார். அவ்வாண்டு [[பாண்டித்துரைத் தேவர்]] தோற்றுவித்த 4 ஆம் தமிழ்க்கழக(சங்க)விழாவில் பேசிய அவர், தனது வலிமையான சொற்பொழிவு வாயிலாகவும் தனித்தமிழ் இயக்கக் கருத்துகளை வெளிப்படுத்தினார். ஆரியர்க்குத் தமிழர் கடமைப்பட்டிருக்கவில்லை, அவர்களுக்கு முற்பட்ட சிறந்த நாகரிகம் தமிழ்மக்கள் நாகரிகம் என்ற உண்மையை அவருடைய உரையில் நன்கு வெளிப்படுத்தினார். அங்கு வந்திருந்த அப்போதைய அரசவைப் புலவர் இரா.இராகவ அய்யங்கார்க்கு அவரின் கருத்துக்கள்கருத்துகள் பிடிக்காமல் போயின என்பதும் வரலாறு. வேதம் பலவற்றைத் தமிழர்களே உருவாக்கினர் என்னும் கருத்தையும் மறைமலையடிகள் வெளிப்படுத்தி வந்தார்.
 
== மறைமலையடிகளுக்குத் தனித்தமிழ் எண்ணம் எவ்வாறு ஏற்பட்டது? ==
வரிசை 61:
அவரின் முயற்சிகள் தொடர்ந்து பல மாற்றங்களை நிகழ்த்தின. அவர் நடத்திய மாத இதழ் ஞான சாகரம் - அறிவுக்கடல் என்றாயிற்று; அவர் நடத்திய சன்மார்க்கசங்கம் - பொதுநிலைக்கழகம் என்றாயிற்று;
 
ஆரியத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலிய கோட்பாடுகள் முதன்முறையாகத் தமிழ் நிலத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டன.அவற்றைத் தம் குடும்பத்தில் பயன்படுத்தி எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார். அவருடைய கருத்துக்கள்கருத்துகள் மத மூடநம்பிக்கைகளையும் வேள்வி நிகழ்த்தல், ஆரியவழிபாடு முதலியவற்றையும் எதிர்த்தன. மரக்கறிஉணவுமுறையை அடிகள் வலியுறுத்தினார்.ஆரியர்களின் தவறான போக்குகளை அவர் சான்றுகளுடன் எடுத்துக்காட்டினார்.
 
தனித்தமிழ்க்கொள்கையை உருவாக்கிய மறைமலையடிகளுக்கு அவர்காலத்தில் சிறிது எதிர்ப்பும் இருந்தது. புலவர்கள் சிலரும் மொழியியலாளர் சிலரும் அந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினர். எனினும் அவர் அக்கொள்கையைச் செழுமைப்படுத்த ஆர்வத்துடன் உழைத்து வந்தார். பல துறைகளில் நூல்கள் இயற்றி வெளியிட்டார். புதினம், நாடகம், பாடல், ஆராய்ச்சி அறிவியல், சமயம், மெய்ப்பொருள் என்னும் பலதுறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்தன. அவை சரியான தொடக்கத்தைத் தந்தன. அவர் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் அடிப்படைப் புரட்சியைத் தரவல்லது. எல்லாத்துறைகளிலும் ஊடுருவி அயன்மையை நீக்கக் கூடியது. ஆரியர் மட்டுமன்றிப் பிற அயலாரும் அவ்வியக்கத்தால் விலக்கப்பட்டனர்.
வரிசை 68:
ஆனால் தமிழ் நாட்டின் நிலை புதுமையானதாகவும் புதிரானதாகவும் அமைந்திருந்தது. இங்கே பிற்காலச்சோழர் காலத்திலிருந்தே இனக்கலப்பு நிகழ்ந்து குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இனக்கலப்பாளர் பலர் தங்களைத் தூயதமிழராகக் காட்டிக்கொண்டனர். தமிழை ஆர்வத்துடன் கற்றனர். தமிழின் பெயரால் அதன் வாழ்வையும் வளர்ச்சியையும் முடிவுசெய்யும் ஆற்றல் நடுவங்களில் அவர்களின் வல்லமை மிகுதியாய் அமைந்து போய்விட்டது. உண்மையான தமிழர்கள் கல்வியிற் சிறந்து விளங்காமையாலும் தமிழைக்கல்லாமையாலும் அதை மேம்படுத்தும் திறமற்றவராய்த் தாழ்ந்து விட்டனர். இனக்கலப்பாளர் ஆளும் இனமாகித் தமிழாட்சி என்னும் பெயரில் எல்லா நன்மைகளையும் அடைந்து வருவாராயினர்.
 
மறைமலையடிகள் இயக்கம் தொடங்கியபோது இக்கருத்துக்களில்இக்கருத்துகளில் நயன்மைக் கட்சி சிறிது கவனம் செலுத்தியது. எனினும் இயக்கம் நடத்தவில்லை. பார்ப்பன வல்லாண்மை குருகுலத்தில் வெளிப்பட்டபோதுதான் ஆரியம் எதிர்க்கப்பட வேண்டும் என்னும் எண்ணம் பேராய(காங்கிரசு)க் கட்சியில் இருந்தவர்களும் உணர்ந்தனர். சேரன்மாதேவியில் வ.வே.சு அய்யர் நால்வண்ணவெறியுடன் நடந்துகொண்டதும் வரதராசுலு நாயுடு அதை எதிர்த்ததும் 1925 அளவில் நிகழ்ந்தன.
 
== பெரியாரின் விலகல் ==
அதைத்தொடர்ந்து [[ஈ. வெ. ராமசாமி|ஈ.வே.ரா. பெரியார்]] அங்கிருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய பின்னரே திராவிட இயக்கம் முகிழ்க்கத் தொடங்கியது.
 
பார்ப்பனர்களுக்கு அவர் எதிர்ப்புத்தெரிவிக்க மறைமலையடிகளின் ஆராய்ச்சியே பயன்பட்டது. அக்காலத்தில் மேடையில் பேசும்போது “பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்“ என்னும் மறைமலையடிகளில் நூலைக் கையில் வைத்துக் கொண்டு பேசுவது அவர் வழக்கம். அவருடைய இயக்கத்தாரும் அவருடைய கருத்துக்களையேகருத்துகளையே எடுத்துப் பரப்பி வந்தனர்.
 
மறைமலையடிகளைப் பின்பற்றியே தமிழ்த்திருமணம், தமிழர் மதம் ஆகிய கொள்கைகளைப் பெரியார் பரப்பினார். ஆரிய ஏமாற்று, மூடநம்பிக்கைகள், மதச்சடங்குகள், முதலியவற்றையும் பெரியார் மக்களிடத்தில் பரப்பினார்.
 
== தி.மு.க ==
அவரிடமிருந்து பிரிந்து உருவான [[தி.மு.க|தி.மு.க.]] அதே கருத்துக்களைப்கருத்துகளைப் பெரிய ஆளவில்அளவில் மக்களிடத்தில் பரப்பியது. மக்களிடத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. தி.மு.க வினர் வடமொழியிலிருந்த தம்பெயர்களைத்தம் பெயர்களைத் தனித்தமிழில் மாற்றிக்கொண்டனர். தமிழ்த் திருமண நிகழ்ச்சிகளை நடத்தினர்.
 
ஆரியர்க்கும் அவர்க்குத் துணைபோகும் பேராயத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போக்கு மக்களிடத்தில் நன்றாகப் பரவியது. பண்பாட்டு மீட்பும் தமிழ்க் காப்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படத்தொடங்கின. தமிழறிஞர் மறைமலையடிகளின் எண்ணத்தைப் பொதுமக்களின் எண்ணங்களாக மாற்றி வாழ்க்கை முறை அடியோடு மாறுவதற்குத் தந்தை பெரியாரும் [[அறிஞர் அண்ணா]]வும், தி.க. வும் திமு.கவும்க.வும் கரணியராய் அமைந்தனர்.
 
தி.மு.க. ஆட்சியைக்கைப்பற்றும் வலிமை அடைந்தபோது தனித்தமிழ் நன்கு வளர்ந்தது. புதிய சொற்கள் வழக்கத்துக்கு வந்தன. தன்மதிப்புத் தமிழ்த்திருமணங்கள் சட்டக்காப்பைப் பெற்றன. தமிழ்வழிக்கல்விக்கு ஊக்கம் தரப்பட்டது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் முழக்கம் ஓங்கி ஒலித்தது. [[உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|உலகத்தமிழ் மாநாடு]] நடத்தப்பட்டது. தமிழ் என்னும் உணர்வு பொது மக்களிடத்தில் நன்றாகப்பரவியது.
 
மறைமலையடிகள் காலத்தில் அவரைப் போன்ற ஆற்றலுடன் வேர்ச்சொல் ஆய்ந்த [[தேவநேயப் பாவாணர்]] மொழியியல் வளர்ச்சிப்பணியைச் செய்தார். சொற்பிறப்பியல் அகரமுதலி தமிழுக்குப் பலவகையான நன்மைகளும் செய்யும் என்ற எண்ணத்தை அவர் அறிஞர்களிடத்தில் உருவாக்கினார். அவர்க்கு அன்பர் பலர் தோன்றினர். அவருடைய மாணவர் துரை.மாணிக்கம் என்ற [[பெருஞ்சித்திரனார்]] தனித்தமிழ்ப்பணிகளில் ஆர்வம் கொண்டு பலவகைப்பணிகளை ஆற்றினார். [[தென்மொழி (இதழ்)|“தென்மொழி“]] என்னும் மாத இதழ் குறிப்பிடத் தக்க தனித்தமிழ்ப் பணிகளைச் செய்தது. பாவாணரைத் தலைவராய்க் கொண்டு உலகத்தமிழ்க்கழகம் என்னும் அமைப்பைப் பெருஞ்சித்திரனார் பரவலாக்கினார். தனித்தமிழ் உணர்ச்சி தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பேசப்படும் அளவில் பணிகள் சில நடைபெற்றன. அவற்றுள் குறிப்பிடத் தக்க பணி பெயர்ப்பலகைத் தமிழாக்கப்பணியாகும். இப்பணியைக் கோவையில் நித்தலின்பனார் சேரர் கொற்றத்தால் செய்தார். [[புதுச்சேரி|புதுச்சேரியில்]] (க.தமிழமல்லன்) தனித்தமிழ்க்கழகம், தமிழ்காவற்குழுதமிழ்க்காவற்குழு ஆகியவற்றை அமைத்து அவற்றின் வாயிலாக நண்பர்கள் துணையுடன் செய்தார்.
 
== மு.தமிழ்க்குடிமகன் ==
"https://ta.wikipedia.org/wiki/தனித்தமிழ்_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது