பேச்சு:தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பக்கச்சார்புக்குப் பெயர் நடுநிலைமை அல்ல: முறிந்த இணைப்பு திருத்தம்
வரிசை 119:
{{ping|5anan27}}, மறுபடியும் ஒருபுறம் செண்டால் அடித்து மறுபுறம் கத்தியால் குத்துகிறீர்கள். நீர்த்துப் போகவில்லை. அரசியல் சூழ்நிலைகள் மாறினாலும் வடமொழி ஆண்டுகளை தமிழ் ஆண்டுகளாக ஏற்காதவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நீங்கள் இழிவுபடுத்துகிறீர்கள். வடமொழி ஆண்டை தமிழாண்டுகளாக ஏற்றுக்கொண்டோரின் தமிழுணர்வுதான் நீர்த்துப் போயுள்ளது. உங்களைப் போன்றவர்களால் தமிழ் வடமொழியின் காலடியில் மண்டியிட வைக்கப்பட்டுள்ளது. இதற்கு செந்தமிழ்த் தெய்வமான முருகனே கூலி கொடுப்பான் என்று சொல்லி நான் முடித்துக்கொள்கிறேன். --[[பயனர்:Rchennai12|rchennai12]] ([[பயனர் பேச்சு:rchennai12|பேச்சு]]) 17:52, 27 ஏப்ரல் 2017 (UTC)
 
::முதலில் ஒன்றை அறியுங்கள் ஐயா. வடமொழி சம்வத்சரப் பெயர்களை தமிழாண்டுகள் என்று [[பேச்சு:தமிழ்அறுபது ஆண்டுகள்#தலைப்பு மாற்றம், மீண்டும்|நான் ஏற்கவேயில்லை]]. அப்படி ஏற்காதவர்களைக் குறிப்பாகச் சொல்லி எங்கும் இழிவுபடுத்தவும் இல்லை. என் மீது வீண்பழி சுமத்துகிறீர்கள். உண்மையான நடுநிலையாளருக்கு, இக்கட்டுரை சொல்லவருவது என்னவென்று தெளிவாகவே புரியும். ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வந்தேறிய அறுபது சம்வத்சரப் பெயருக்காகவும், நூறாண்டுகளுக்குள் அபிதான சிந்தாமணியில் வந்த கண்ணன் - நாரதன் கதைக்காகவும், அதற்கும் முன்பு எப்போதோ இருந்து நீடிக்கும் தமிழ்ச் சூரிய நாட்காட்டியின் வரலாற்று வகிபாகத்தை - தமிழ் இனத்துக்கு அதன்மீதுள்ள உரிமையை, முற்றாக மறுதலித்துப் புறக்கணிப்பவர் நீங்கள். கிடைக்கின்ற இடைவேளையெல்லாம் வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து, தன்னார்வமாக நான் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது, தமிழுணர்வு நீர்த்துப்போனதாலும் தமிழை வடமொழிக்கு மண்டியிடச்செய்யும் உள்நோக்கத்திலும் தான் என்பது உண்மையானால், தமிழ்த்தெய்வம் மீது ஆணையிட்டுள்ள தங்கள் தீச்சொல் பலிக்கட்டும். நன்றி. --[[பயனர்:5anan27|5anan27]] ([[பயனர் பேச்சு:5anan27|பேச்சு]]) 16:59, 27 ஏப்ரல் 2017 (UTC)
 
==தனிநபர் வலைப்பூ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழ்ப் புத்தாண்டு" page.