பேச்சு:தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பக்கச்சார்புக்குப் பெயர் நடுநிலைமை அல்ல: முறிந்த இணைப்பு திருத்தம்
வரிசை 76:
 
தை முதல் தேதி சமய ரீதியாக பொதுவானது என்பதில் உள்ள பிழை என்னவென்றால் அந்த தை முதல் நாள் கணக்கிடப்படுவதே இந்துக்களின் பஞ்சாங்கத்தின்படி தான்.
தமிழ்ப் புத்தாண்டை மாற்றுவதைக்காட்டிலும் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதே நாம் திரூவள்ளுவருக்குதிருவள்ளுவருக்கு செய்யும் சிறப்பாக அமையும். [[பயனர்:Shaan|Shaan]] 16:23, 16 ஏப்ரல் 2010 (UTC)
://தமிழ்ப் புத்தாண்டை மாற்றுவதைக்காட்டிலும் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதே நாம் திருவள்ளுவருக்கு செய்யும் சிறப்பாக அமையும்.// இந்தக் கருத்தையே நானும் ஆதரிக்கிறேன். திருவள்ளுவர் இயற்றியது கதையோ காவியமோ அல்ல. சமூக நீதி, வளர்ச்சிக்கான அறிவுரைகள் கொண்ட நூல். ஆகவே திருவள்ளுவரை சிறப்பிக்க நினைப்பவர்கள் அவரது அறிவுரைகளைப் பின்பற்றி சட்டங்கள் இயற்றி அவற்றின்படி நடக்க வேண்டும். அதை விடுத்து திருவள்ளுவர் ஆண்டு என்று கொண்டாடுவதாலோ, திருவள்ளுவருக்கு பெரிய சிலை வைப்பதாலோ, திருக்குறளை பேருந்துகளில் எழுதி வைப்பதாலோ திருவள்ளுவரை சிறப்பிப்பதாக கொள்ள முடியாது. டாஸ்மாக் கடைகளை மூடி "கள்ளுண்ணாமை"யை கொண்டுவந்தாலே திருக்குறளில் சொல்லப்பட்ட பெரும்பாலான அறிவுரைகளை நடைமுறைப்படுத்துவது எளிதாகிவிடும். தமிழ் வருடப்பிறப்பு பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்ட ஒன்று. தமிழ் நாட்டில் இசுலாமியர்கள் இது பற்றி ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக கிறீஸ்தவ மதத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவதாலும், இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்ற நிலையை சுட்டிக்காட்டி இந்நாட்டு மக்களின் பல வழக்கங்கள் ஒதுக்கப்பட்டு வருவதாலும் தமிழ் நாட்டுத் தமிழ் மக்கள் "ஆங்கிலப் புத்தாண்டு" என்று ஜனவரி ஒன்றாம் நாளை புத்தாண்டாகக் கொண்டாடத் தலைப்பட்டுள்ளனர். இந்துக் கோவில்கள் கூட ஆகம விதிகளுக்கு எதிராக நள்ளிரவில் நடை திறந்து பூசைகள் செய்கின்றனர். இலங்கைத் தமிழர்களும் பெரும்பாலும் கிறீஸ்தவ நாடுகளில் தஞ்சம் புகுந்து அந்நாடுகளையே வதிவிடமாகக் கொண்டு விட்டதால் அவர்களது போக்கும் கிறீஸ்தவ சம்பிரதாயங்களுடன் ஒத்துப் போவதைக் காண முடிகிறது. அவர்களில் பலர் ஜனவரி, பெப்ரவரி ... என்ற ஆங்கில மாதங்களை தை, மாசி,.. எனப் பெயரிட்டு எழுதுவதையும் நான் கண்டிருக்கிறேன். ஆகவே தமிழ்ப் புத்தாண்டு எப்போது என்ற விவாதத்தை விடுத்து, அவரவர் தங்களது குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாகக் கடைபிடிக்கப்படும் வழக்கனகளை கைக்கொள்ளலாம். தமிழர்களில் ஒரு சாரார் பிராமணர்களை எதிர்ப்பதை கொள்கையாகக் கொண்டுள்ளனர். பிராமணர்களைப் பொறுத்தவரை இந்த மாதிரி சர்ச்சைகளால் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் குடும்ப வழக்கம் என்று ஒன்றுண்டு. அரசு எந்த நாள் எப்போது என்று மாற்றி மாற்றி அறிவித்தாலும், அவர்கள் தங்கள் குடும்பக் கடமைகளை தங்கள் பஞ்சாங்க வழக்கத்தின்படியே செய்து கொள்வார்கள். தமிழர்களும் திருக்குறளை தமது நெறியாகக் கொண்டு அதன்படி வாழ முதலில் முன்வரவேண்டும்.--[[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 13:12, 6 சனவரி 2019 (UTC)
 
==தமிழ்ப் புத்தாண்டு விளக்கப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "தமிழ்ப் புத்தாண்டு" page.