டைப்பிஸ்ட் கோபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய நடிகர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox person |name = கோபலரத்தினம் |k..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:25, 7 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

கோபலரத்தினம் (Gopalarathinam) இவர் தமிழ் திரைப்படத்துறையில் டைப்பிஸ்ட் கோபு என அறியப்பட்டவர். இயற்கையில் நாடக நடிகரான கோபாலரத்தினம் 6,00 மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.[1][2][3]

கோபலரத்தினம்
செயற்பாட்டுக்
காலம்
1955 - தற்போது வரை
அறியப்படுவதுதிரைப்பட நகைச்சுவை நடிகர்

நடிப்புத் தொழில்

திருச்சி மாவட்டம், மணக்கால் கிராமத்தில் பிறந்த கோபாலரத்தினம்[1], சென்னை இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருந்த போது, 1955-இல் தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேஷ் நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்தார்.

1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது.[1]1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.

பின்னர் ஒய். ஜி. மகேந்திரன் நாடகக் குழுவில் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார். 2002ல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. [4]இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். [5]

நடித்த சில திரைப்படங்கள்

தொலைக்காட்சித் தொடர்கள்

  • வசூல் சக்கரவர்த்தி
  • வீட்டுக்கு வீடு லூட்டி
  • மிஸ்டர். பிரைன்
  • துப்பறியும் சாம்பு[6]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைப்பிஸ்ட்_கோபு&oldid=2626811" இலிருந்து மீள்விக்கப்பட்டது