வானமே எல்லை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்யும் ஐந்து கதாபாத்திரங்களைப் பற்றிய கதை.
 
தீபக் ([[ஆனந்த் பாபு]]) நீதிபதியாக பணியாற்றும் தனது தந்தையின்மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டுள்ளான். தீபக்கின் நண்பன், தீபக்கின் தந்தை லஞ்சம் பெற்று தீா்ப்புகளை வழங்குகிறவா் என்ற உண்மையைச் சொல்லும்போது நம்ப மறுத்து சண்டையிடுகிறான். அவனே தன் தந்தை லஞ்சம் வாங்குவதை நேரில் கண்டதும் அதிா்ச்சியடைகிறான். வசதியாக வாழவும், தீபக்கின் சகோதரிகள் திருமணத்திற்காகவும் லஞ்சம் வாங்க வேண்டியிருப்பதாக தீபக்கின் தாய் அதை நியாயப்படுத்துகிறாள். அதை ஏற்றுக்கொள்ள முடியாத தீபக் லஞ்சப்பணத்தின் மூலம் வாங்கிய தன் இருசக்கர வாகனத்தை எரித்துவிட்டு தன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான்.
 
கெளதம் ([[பிருத்விராஜ் (தமிழ் நடிகர்)|பிருத்விராஜ் )]] பணக்காரத்தந்தையின்பணக்காரத் தந்தையின் ([[கொச்சி ஹனீஃபா]]) ஒரே மகன். தாயை இழந்தவன். அவன்அவனது தந்தையின் அலுவலவத்தில் கணினி இயக்குபவராகப் பணியாற்றுபவள் சுகுணா(விசாலி கண்ணதாசன்). கெளதமும், சுகுணாவும் காதலிக்கிறாா்கள். தன் மகனுக்கு பணக்கார வீட்டுப்பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் தந்தை, மகனின் காதலை எதிா்க்கிறாா். கெளதம் தன் காதலில் உறுதியாக இருக்கிறான். அவா்களது காதலைப் பிரிக்க அவன் தந்தை அதிரடியான முடிவெடுக்கிறாா். விதவையான சுகுணாவின் தாயை கெளதமின் தந்தை திருமணம் செய்துகொள்கிறாா். சுகுணா சகோதரி உறவானதை ஏற்க முடியாத கெளதம் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். வீட்டைவிட்டு வெளியேற விரும்பாத சுகுணா தன் காதலைக் கெடுத்த தாயும், இரண்டாவது தந்தையும் வெறுப்படையும்படி நடந்து பழிவாங்குகிறாள்.
 
கற்பகம் ([[மதுபாலா (தமிழ் நடிகை)|மதுபாலா )]] வயதான பணக்காரரை அவள் தந்தையின் வற்புறுத்தலால் விருப்பமின்றி திருமணம் செய்துகொள்கிறாள். முதலிரவன்று வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலைக்கு முயற்சி செய்யும் இடத்தில் சுபத்ராவைக் ([[ரம்யா கிருஷ்ணன்]]) காப்பாற்றுகிறாள்.
வரிசை 62:
 
== திரைப்படத்தின் சிறப்புகள் ==
நகைச்சுவை நடிகர்களான தாமு மற்றும் மதன்பாப் இருவரும் அறிமுகமான முதல் படம். பசுபதி கதாபாத்திரத்தில் நடித்த கௌதம் சுந்தர்ராஜன், பாலச்சந்தரின் அழகன் திரைப்படத்தில் அறிமுகம் ஆகியிருந்தாலும் தன் திரைவாழ்வில் "மறக்கமுடியாத திரைப்படம் " எனக் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் சிகரம் பாலசந்தர் தான் இயக்கிய படங்களில் தனக்குப் பிடித்த 10 படங்களில் ஒன்றாக இப்படத்தைக் குறிப்பிட்டுள்ளார்.{{சான்று தேவை}}
 
== இசை ==
"https://ta.wikipedia.org/wiki/வானமே_எல்லை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது