உப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2277922 கி.மூர்த்தி உடையது. (மின்)
வரிசை 47:
== தயாரிப்பு முறைகள் ==
=== கடல் நீர் உப்புகள் ===
உப்பு பொதுவாக [[கடல்]] [[நீர்|நீரிலிருந்து]] உப்பு பெறப்படுகிறது. கடல் நீரைப் பாத்திகளில் பாயச் செய்து காயவிடுவார்கள். கடல்நீர் வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியாகப் போய்விடும். அடியில் உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். இந்த உப்புப் படிவுகளைக் கொண்ட பாத்திகள் [[உப்பளங்கள்]] என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.இத்தகைய உப்பளங்கள் கடற்கரையை ஒட்டிய கடற்கழிகளை அடுத்து அமைந்திருக்கும். தமிழ் நாட்டில் தூத்துக்குடிப் பகுதியிலும் சென்னையை அடுத்த [[கோவளம்]] கடற்கரைப் பகுதியிலும் உள்ள உப்பளங்களுள் தரமான உப்பு மிகுதியாகப் பல இடங்களிலும் தயாரிக்கப்படுகிறது.
=== தரை உப்புகள் ===
வட இந்தியாவில் பல பகுதிகளிலும் உலகின் வேறுபல இடங்களிலும் தரைப் பகுதிகளில் சுரங்கம் அமைத்து உப்பை வெட்டியெடுத்துச் சேகரிக்கிறார்கள்.
வரிசை 53:
சில இடங்களில் உப்புநீர்க் கிணறுகள் தோண்டி உப்பு தயாரிக்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற இடங்களில் இத்தகைய உப்பு நீர்க் கிணறு முறையில் உப்பு தயாரிக்கப் படுகிறது.
=== ஏரி உப்புகள் ===
சில உப்பு நீர் ஏரிகளில் இருந்தும் உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள [[சாம்பர் உப்பு ஏரி|சம்பர் ஏரியும்]] பாலஸ்தீனத்தில் உள்ள [[சாக்கடல்]] ஏரியும் உப்பு நீர் ஏரிகளாகும். சாக்கடல் ஏரியிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 116 கோடி டன் உப்பு எடுக்கலாம் என கணக்கிட்டுள்ளனர்.<br />
சூரிய வெப்பம் அதிகம் இல்லாத நாடுகளில் உப்புநீரைக் காய்ச்சி உப்பு தயாரிக்கிறார்கள். கடல் நீரைக்கொண்டு தயாரிக்கும் உப்பை மேலும் சுத்தப்படுத்தி "மேசை உப்பு" (''Table Salt'') ஆகப் பொடித்துப் பயன்படுத்துகிறார்கள்.
 
== உப்பு வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது