கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 102:
| quote = }}</ref>
பாடத் திட்டங்களில், பாலுறவைப் பற்றி சரியான புரிதல் மாணவர்களுக்கு வர தேவையான கருத்துக்களைச் சேர்க்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் துணை நிறுவனங்கள் பல பரிந்துரை செய்துள்ளன. <ref>{{Cite book|url=http://unesdoc.unesco.org/images/0026/002607/260770e.pdf|title=International technical guidance on sexuality education: An evidence-informed approach|last=|first=|publisher=UNESCO|year=2018|isbn=978-92-3-100259-5|location=Paris|pages=}}</ref>
 
==முன்னேற்றத்திற்கான இலக்குகள்==
[[File:Education index UN HDR 2007 2008.PNG|thumb|World map indicating [[Education Index]] (according to 2007/2008 [[Human Development Report]])]]
முன்னேற்றத்திற்கான இலக்குகள் (Development goals) என்பது கல்வி என்னென்ன இலக்குகளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது என்பதைப்   பற்றியதாகும். கல்வி சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்; பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்ய வேண்டும்; ஒவ்வொரு பிரிவினருக்கும் தங்கள் இலக்குகளை தாங்கள் விரும்பிய படி நாடிச் செல்ல வாய்ப்புக்கள் உருவாக்க வேண்டும். <ref>{{cite journal |last1=Chimombo |first1=Joseph |title=Issues in Basic Education in Developing Countries: An Exploration of Policy Options for Improved Delivery |journal=Journal of International Cooperation in Education |date=2005 |volume=8 |issue=1 |pages=129–152 |url=https://home.hiroshima-u.ac.jp/cice/wp-content/uploads/2014/03/8-1-11.pdf}}</ref> ஐக்கிய நாடுகள் சபை, 17 வகையான குறிக்கோள்களைப் ([[வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள்]]) பரிந்துரை செய்துள்ளது. <ref>{{Cite book|title=Transforming our World: the 2030 Agenda for Sustainable Development Goals|last=|first=|publisher=UN|year=2016|isbn=|location=New York|pages=}}</ref><ref>{{Cite book|title=Cracking the code: girls' and women's education in science, technology, engineering and mathematics (STEM)|last=|first=|publisher=UNESCO|year=2017|isbn=9789231002335|location=Paris|pages=14}}</ref>
 
சரியான கல்வித் திட்டங்களைச் செயல் படுத்தி மேற்பார்வை இட்டு வந்தால், சமுதாயத்தின் பல கூறுகளிலும் அதன் பயன் சென்று அடையும் என UNESCO நிறுவனம் ( UNESCO International Institute for Educational Planning) கூறியுள்ளது. <ref name=":1">{{cite report |last=de Grauwe |first=A. |date=2009 |location=Paris |publisher=UNESCO-IIPE |url=http://www.iiep.unesco.org/en/capacity-development/capacity-development-strategies/synthesis.html |title=Capacity development strategies |accessdate=2010-10-01 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20100505082915/http://www.iiep.unesco.org/en/capacity-development/capacity-development-strategies/synthesis.html |archivedate=5 May 2010 |df=dmy-all }}.</ref> ஆனால், இப்பயன் நீடித்து இருக்க வேண்டுமாயின், அதிகாரிகள் அவ்வப்போது சரியான முறையில் ''தலையிட்டுப் '' பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.<ref name=":1" /> தலையீட்டின் போது கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள்:<ref name=":1" />
* தேசீய தலைமை, உடைமை முறை ஆகியன சிறப்பாக அமைதல் வேண்டும்.
* செய்யும் ஒவ்வொன்றும் அப்போதுள்ள சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
* ஒரு தலையீடு மற்ற தலையீட்டுக்குப் பொருந்தி வர வேண்டும்.
* தொலை நோக்குப் பார்வையுடன் செயலாற்றும் திறமை வேண்டும்.
* வெளியிலிருந்து ஏதேனும் தலையீடுகள் இருக்குமாயின், அதற்கு நிபந்தனைகள் போட வேண்டும்.
 
==கல்விக் கோட்பாடுகள்==
[[File:FinnGerberBoydZaharias2005.png|right|thumb|A class size experiment in the United States found that attending small classes for 3 or more years in the early grades increased [[high school]] [[graduation]] rates of students from [[low income]] families.<ref name=finn>{{Cite journal|author1=Finn, J. D. |author2=Gerber, S. B. |author3=Boyd-Zaharias, J. |year=2005|title=Small classes in the early grades, academic achievement, and graduating from high school|url=http://www.apa.org/pubs/journals/releases/edu-972214.pdf|doi=10.1037/0022-0663.97.2.214|journal=Journal of Educational Psychology|volume= 97|pages=214–33|issue=2|citeseerx=10.1.1.477.3560 }}</ref>]]
கல்விக் கோட்பாடுகள் (Educational theory) என்பது பல கருத்துக்களைக் கொண்டது. அதில் ஒரு சில கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
 
===கல்வி உளவியல்===
[[File:2013. Донецк 336.jpg|thumb|Knowledge Day in [[Donetsk]], [[Ukraine]], 2013]]
கல்வி உளவியல் (Educational psychology) என்பது கற்பவர்கள், கொடுக்கப்பட்ட சூழ்நிலையில், எவ்வாறு கற்கின்றனர்; கற்பிப்பதில் உள்ள உளவியல் சிக்கல்கள்; கற்கும்போது குறுக்கிட்டுச் சரி செய்தல்; கல்விக்கூடங்களில் சமுதாய உளவியல் சிக்கல்கள் ஆகியன பற்றி ஆராயும் துறை ஆகும். எடுத்துக் காட்டாக, உயர்திறன் வாய்ந்த குழந்தைகள், பிறவிக் குறைகள் உள்ள குழந்தைகள் ஆகியோரின் தேவைகளை அறிந்து, செயலாற்றுவது எப்படி என்பது போன்றவற்றை அலசிப் பார்ப்பது கல்வி உளவியலில் நோக்கமாகும். கல்வி உளவியலில் கண்டறியப் படும் உண்மைகளைப் பயன்படுத்தி எவ்வாறு பாடத்திட்டங்களைச் சரியான முறையில் அமைப்பது, தொழில் நுட்பங்களை எவ்வாறு புகுத்துவது, வகுப்பறையை எவ்வாறு ஆளுவது, ஊனம் உள்ளவர்களுக்கு எவ்வாறு கல்வி கொடுப்பது போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கொடுக்க இயலும் (Lucas, Blazek, & Raley, 2006)
 
===அறிவு நுட்பமும் கல்வியும்===
 
ஒரு மாணவர் அறிவு நுட்பத்திற்கு (intelligence) ஏற்றார்ப் போல, கல்வி முறையில் அவர் கற்கும் அளவு வேறுபடுகின்றது. அறிவு நுட்பம் மிக்கவர்கள் கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் மேல் படிப்பு படிக்கச் செல்கின்றனர். <ref>{{cite journal | last1 = Butler | first1 = S. | last2 = Marsh | first2 = H. | last3 = Sheppard | first3 = J. | year = 1985 | title = Seven year longitudinal study of the early prediction of reading achievement | url = | journal = Journal of Educational Psychology | volume = 77 | issue = 3| pages = 349–61 | doi=10.1037/0022-0663.77.3.349}}</ref> கல்வி அறிவு நுட்பத்தைக் கூட்டுகிறது. <ref>{{cite journal | last1 = Baltes | first1 = P. | last2 = Reinert | first2 = G. | year = 1969 | title = Cohort effects in cognitive development in children as revealed by cross sectional sequences | url = | journal = Developmental Psychology | volume = 1 | issue = 2| pages = 169–77 | doi=10.1037/h0026997}}</ref> கல்வியினால் ஒருவர் அறிவுக் கூர்மை அதிகரிக்கின்றது என்றாலும், 53-ஆம் அகவையில் அவர்தம் அறிவுக் கூர்மை, அவர் படித்த படிப்பைச் சார்ந்திருப்பதை விட, 8-ஆம் அகவையில் இருந்ததைச் சார்ந்து இருக்கும் என எதிர்பார்க்கலாம். <ref>{{cite journal | last1 = Richards | first1 = M. | last2 = Sacker | first2 = A. | year = 2003 | title = Lifetime Antecedents of Cognitive Reserve | url = | journal = Journal of Clinical and Experimental Neuropsychology | volume = 25 | issue = 5| pages = 614–24 | doi=10.1076/jcen.25.5.614.14581| pmid = 12815499 }}</ref>
 
=== கல்வி கற்கும் வழிமுறைகள் ===
கடந்த 20 ஆண்டுகளாக, கல்வியை ஒருவருக்கு எவ்வாறு வழங்குவது (Learning modalities) என்பதில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. கீழ்க் கண்ட வழிமுறைகள் பெரிதும் வழக்கில் உள்ளன:
* காட்சிவழிக் கல்வி (visual learning)
* செவிவழிக் கல்வி (auditory learning)
* செயல்வழிக் கல்வி (kinesthetic learning)
 
இத்துடன், இசைவழிக் (musical) கல்வி, மாந்தர்வழிக் (interpersonal) கல்வி, சொல்வழிக் (verbal) கல்வி, ஏரணவழிக் (logical) கல்வி மற்றும் தனக்குள் நிகழும் (intrapersonal) கல்வி ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளன. ரீட்டா டன் (Rita Dunn), கென்னத் டன் (Kenneth Dunn) என்ற இரு ஆய்வாளர்கள், ஒரு மாணவன் கல்வி கற்பதற்குத் தூண்டுகோலாக உள்ளவை யாவை என்ற கேள்விக்கு கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்: <ref>{{cite web|url=http://www.learningstyles.net/ |title=Dunn and Dunn |publisher=Learningstyles.net | accessdate=2009-04-20}}</ref> <ref>https://medium.com/love2learnidaho/do-you-know-the-5-elements-of-a-learning-style-7721c10e358c</ref>
 
* சுற்றுப்புறச் சூழ்நிலை
* மாணவனின் உணர்வுகள்
* சமுதாய சக்திகள்
* உடல் தொடர்பான பிரச்சினைகள்
* உளவியல் சார்ந்த சிக்கல்கள்
 
அதே கால கட்டத்தில், ஜோசப் ரென்சுல்லி (Joseph Renzulli) என்பாரும் ஒரு புதிய வகையான கல்வி கற்கும் முறையை முன்மொழிந்தார். <ref>{{cite web|url=http://www.indiana.edu/~intell/renzulli.shtml |title=Biographer of Renzulli |publisher=Indiana.edu | accessdate=2009-04-20}}</ref>
ஓவார்டு கார்ட்னர் (Howard Gardner) என்பவர் பன்முக அறிவு நுட்பக் கோட்பாடு (Multiple Intelligences theory) என்னும் கருத்தை முன்மொழிந்து, அறிவு நுட்பம் என்பது பல கூறுகளைக் கொண்டது என வாதிட்டார். இவர் கூற்றுப்படி, அறிவு நுட்ப நிலை என்பது எட்டு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். <ref>[http://www.thomasarmstrong.com/multiple_intelligences.htm Thomas Armstrong's website] detailing Multiple Intelligences</ref>
 
ஒவ்வொரு கல்வி கற்கும் வழிமுறையிலும் ஒருவருக்குக் கற்கும் வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு சிலர் கூற, மற்றும் சிலர் கற்பவர், தம் நிலையைப் பொறுத்து, தமக்கென ஒத்து வரும் வழிமுறையில்தான் சரியாகக் கற்க முடியும் என்று கூறுகின்றனர். <ref>Barbe, W. B., & Swassing, R. H., with M. N. Milone. (1979). ''Teaching through modality strengths: Concepts and practices''. Columbus, OH: Zaner-Bloser</ref> <ref>{{cite web |url=http://library.thinkquest.org/C005704/content_hwl_learningmodalities.php3 |title=Learning modality description from the Learning Curve website |publisher=Library.thinkquest.org |accessdate=2010-06-19 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080404234142/http://library.thinkquest.org/C005704/content_hwl_learningmodalities.php3 |archivedate=4 April 2008 |df=dmy-all }}</ref> கிளாக்ஸ்டன் (Guy Claxton) போன்றோர் கல்வியை காட்சிவழிக் கல்வி, செவிவழிக் கல்வி, செயல்வழிக் கல்வி என்றெல்லாம் பிரிக்கக் கூடாது; ஏனெனில், இது அடிப்படையில் மாணவர்களை பிரிப்பதாகி விடும் என்று கூறுகின்றனர்.<ref name="titleGuy Claxton speaking on What's The Point of School">{{cite web |url=http://www.dystalk.com/talks/49-whats-the-point-of-school |title=Guy Claxton speaking on What's The Point of School?|publisher=dystalk.com |accessdate=2009-04-23 }}</ref><ref>{{Cite journal | url = http://marketing.wharton.upenn.edu/documents/research/Learner%20Responsibility.pdf | title = Learner Responsibility in Management Education, or Ventures into Forbidden Research (with Comments) | author = J. Scott Armstrong | journal = Interfaces | volume = 13 | year = 1983 | deadurl = yes | archiveurl = https://web.archive.org/web/20100620230019/http://marketing.wharton.upenn.edu/documents/research/Learner%20Responsibility.pdf | archivedate = 20 June 2010 | df = dmy-all }}</ref>
 
===மனம், மூளை, கல்வி===
மனமும், மூளையும் கல்வியில் எவ்வாறு செயல் படுகின்றன என்று ஆராயும் துறை '''கல்விசார் நரம்பு அறிவியல்''' (Educational neuroscience) ஆகும். இதில் அறிவு-உணர்வு சார்ந்த நரம்பு அறிவியல் (cognitive neuroscience), வளர்ச்சிசார்ந்த அறிவு-உணர்வு நரம்பு அறிவியல் (developmental cognitive neuroscience), கல்விசார்ந்த உளவியல் (educational psychology), கல்விசார்ந்த தொழில்நுட்பம் (educational technology), கல்விக் கோட்பாடுகள் (education theory) ஆகிய துறைகளில் இருந்து கல்வித் துறைக்கு என்னென்ன கருத்துக்களைக் கடன் வாங்கி, கல்வியை மேம்படுத்தலாம் என்று ஆய்வு நடத்தப் படுகின்றது.
<ref name = AnsariCoch>{{cite journal | last1 = Ansari | first1 = D | authorlink1 = | last2 = Coch | first2 = D | year = 2006 | title = Bridges over troubled waters: Education and cognitive neuroscience | journal = Trends in Cognitive Sciences | volume = 10 | issue = 4 | pages = 146–51 | doi = 10.1016/j.tics.2006.02.007 | pmid = 16530462}}</ref><ref name = CochAnsari>{{cite journal | last1 = Coch | first1 = D | authorlink1 = | last2 = Ansari | first2 = D | year = 2008 | title = Thinking about mechanisms is crucial to connecting neuroscience and education | journal = Cortex | volume = 45 | issue = 4 | pages = 546–47 | doi = 10.1016/j.cortex.2008.06.001 | pmid = 18649878}}</ref><ref name = Goswami2006>{{cite journal | last1 = Goswami | first1 = U | year = 2006 | authorlink1 = | title = Neuroscience and education: from research to practice? | journal = Nature Reviews Neuroscience | volume = 7 | issue = 5 | pages = 406–11 | doi = 10.1038/nrn1907 | pmid = 16607400}}</ref><ref name = MeltzoffScience09>{{cite journal | last1 = Meltzoff | first1 = AN | authorlink1 = | last2 = Kuhl | first2 = PK |last3 = Movellan | first3 = J | last4 = Sejnowski |first4 = TJ | year = 2009 | title = Foundations for a New Science of Learning | journal = Science | volume = 325 | issue = 5938 | pages = 284–88 | doi = 10.1126/science.1175626 | pmc = 2776823 | pmid = 19608908| bibcode = 2009Sci...325..284M | citeseerx = 10.1.1.165.1628 }}</ref>
 
மேலும், '''கல்விசார் நரம்பு அறிவியலில்''', ஒருவர் படிக்கும் போதும்,<ref name = Goswami2006 />, கணிதத்தைப் பற்றிய சிந்தனைகள் தோன்றும் போதும்,<ref name = AnsariNRN08>{{cite journal | last1 = Ansari | first1 = D | authorlink1 = | year = 2008 | title = Effects of development and enculturation on number representation in the brain | journal = Nature Reviews Neuroscience| volume = 9 | issue = 4 | pages = 278–91 | doi = 10.1038/nrn2334 | pmid = 18334999}}</ref> ஒன்றைக் கூர்ந்து கவனிக்கும் போதும் மூளையில் என்னென்ன நடக்கின்றன என்று ஆய்வு நடத்தப் படுகின்றது. இத்துடன், வாசிப்புக் குறைபாடு (Dyslexia),<ref name=McCandlissNoble>{{cite journal | last1 = McCandliss | first1 = BD | authorlink1 = | last2 = Noble | first2 = KG | year = 2003 | title = The development of reading impairment: a cognitive neuroscience model | journal = Mental Retardation and Developmental Disability Research Review | volume = 9 | issue = 3 | pages = 196–204 | doi = 10.1002/mrdd.10080 | pmid = 12953299 | url = https://sacklerinstitute.org/cornell/people/bruce.mccandliss/publications/publications/McCandliss.Noble.2003.pdf | access-date = 24 October 2017 | archive-url = https://web.archive.org/web/20080827201638/http://www.sacklerinstitute.org/cornell/people/bruce.mccandliss/publications/publications/McCandliss.Noble.2003.pdf | archive-date = 27 August 2008 | dead-url = yes | df = dmy-all | citeseerx = 10.1.1.587.4158 }}</ref><ref name = GabrieliScience09>{{cite journal | last1 = Gabrieli | first1 = JD | year = 2009 | authorlink1 = | title = Dyslexia: a new synergy between education and cognitive neuroscience | journal = Science | volume = 325 | issue = 5938 | pages = 280–83 | doi = 10.1126/science.1171999 | pmid = 19608907| bibcode = 2009Sci...325..280G | url = http://www2.cs.uidaho.edu/~tsoule/neuro508/Gabrieli_2009_Dyslexia.pdf | citeseerx = 10.1.1.472.3997 }}</ref> கணிதம்-கற்றல் குறைபாடு
(dyscalculia), <ref name = Price2007>{{cite journal | last1 = Price | first1 = GR | last2 = Holloway | first2 = I | last3 = Räsänen | first3 = P | last4 = Vesterinen | first4 = M | last5 = Ansari | first5 = D | year = 2007 | title = Impaired parietal magnitude processing in developmental dyscalculia | journal = Current Biology | volume = 17 | issue = 24 | pages = R1042–43 | doi = 10.1016/j.cub.2007.10.013 | pmid = 18088583| bibcode = 1996CBio....6.1213A }}</ref> கவனக்குறைவு மிகைஇயக்க குறைபாடு (ADHD - Attention Deficit Hyperactivity Disorder) போன்ற சிக்கல்களையும் இது ஆராய்கின்றது.
 
===கல்வியின் நோக்கம்===
கற்றுக் கொடுக்கப் படுகின்ற கல்வி எதற்காக, கல்வியின் நோக்கம் என்ன என்பன பற்றிய கருத்துக்கள் பலவாக இருக்கின்றன. அறிவாற்றல், மன விடுதலை, பண்பாட்டு அடையாளம், வேலை வாய்ப்பு, வாழ்க்கையைச் சரியாக அமைத்துக் கொள்வது போன்றவை கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். மற்றும் சிலர், கல்வியின் நோக்கம் ஒருவரை சமுதாயத்தில் நல்ல குடிமகனாக ஆக்க வேண்டும்; அவர் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பண்பாட்டு மேம்பாட்டுக்கும் பாடு பட உதவ வேண்டும் என்றும் கருதுகின்றனர். <ref>Christopher Winch and John Gingell, ''Philosophy of Education: The Key Concepts'' (2nd edition). London:Routledge, 2008. pp. 10–11.</ref>
 
==கல்வியும் பொருளாதாரமும்==
[[File:Students, Hakha, Chin State, Myanmar.jpg|thumb|right|Students on their way to school, [[Hakha]], [[Chin State]], [[Burma|Myanmar]]]]
 
கல்வியினால் ஒரு நாட்டின்   பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. அது போலவே, பொருளாதார நிலையும் கல்வியின் தரத்தைக் கட்டுப் படுத்துகின்றது. அனைவருக்கும் தரமான கல்வி கொடுத்தால், அது நல்ல பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் என்று கூறப் படுகின்றது. <ref>{{Cite book|author=Eric A. Hanushek|title=Economic outcomes and school quality|url=https://books.google.com/books?id=na7rAAAACAAJ|accessdate=21 October 2011|year=2005|publisher=International Institute for Educational Planning|isbn=978-92-803-1279-9}}</ref> ஏழை நாடுகள் கல்வியின் மீது கவனம் செலுத்தினால், பொருளாதாரத்தில் விரைவில் மேம்பாடு அடையலாம்; எவ்வாறு எனில், முன்னேறிய நாடுகளில் கிடைக்கும் கல்வி அறிவு, தொழில் நுட்பங்கள் ஆகியனவற்றை இருக்குமதி செய்து, முன்னேற்றுத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இது எளிதான காரியம் அல்ல என்பது பிறகு தெரிய வந்தது. நல்ல கல்விக்கும், தொழில் நுட்ப அறிவைப் பயன்படுத்துவதற்கும் நல்ல திறமையுள்ள மனித வளமும், அதை ஊக்குவிக்கும் பொருளாதார நிறுவனங்களும் வேண்டும். <ref>{{Cite journal|author1=Daron Acemoglu |author2=Simon Johnson |author3=James A. Robinson |title=The Colonial Origins of Comparative Development: An Empirical Investigation|url=http://economics.mit.edu/files/4123|jstor=2677930 |doi=10.2139/ssrn.244582|journal=American Economic Review|volume= 91|issue=5 |year=2001|pages=1369–401|citeseerx=10.1.1.475.6366 }}</ref> <ref>{{Cite journal|author1=Eric A. Hanushek|author2=Ludger Woessmann|title=The role of cognitive skills in economic development|url=http://edpro.stanford.edu/Hanushek/admin/pages/files/uploads/Hanushek_Woessmann_2008_JEL_46.pdf|doi=10.1257/jel.46.3.607|journal=Journal of Economic Literature|volume=46|issue=3|year=2008|pages=607–08|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20110105125552/http://edpro.stanford.edu/hanushek/admin/pages/files/uploads/Hanushek_Woessmann_2008_JEL_46.pdf|archivedate=5 January 2011|df=dmy-all|citeseerx=10.1.1.507.5325}}</ref>
 
மின்சர் (Jacob Mincer) என்ற ஆய்வாளர், ஒருவரின் சம்பாதிக்கும் திறமை அவர் பெற்ற கல்வி, அவருக்குள்ள அறிவாற்றல், செயல் திறன் ஆகியனவற்றைப் பொறுத்து அமைகிறது என்று வாதிட்டுள்ளார். <ref>{{Cite journal|author=Jacob Mincer|title=The distribution of labor incomes: a survey with special reference to the human capital approach|jstor=2720384|journal=Journal of Economic Literature|volume= 8|issue=1|year=1970|pages=1–26}}</ref> ஆனால், இந்தக் கருத்துக்கு ஒரு சிலர் எதிர் கருத்துக்கள் வைத்துள்ளனர். அதாவது, ஒருவர் கற்ற கல்வியின் பயன் இது என்று எவ்வாறு வரையறுப்பது என்பது ஒரு எதிர் கருத்து. <ref>David Card, "Causal effect of education on earnings," in ''Handbook of labor economics'', Orley Ashenfelter and David Card (Eds). Amsterdam: North-Holland, 1999: pp. 1801–63</ref><ref>James J. Heckman, Lance J. Lochner, and Petra E. Todd., "Earnings functions, rates of return and treatment effects: The Mincer equation and beyond," in ''Handbook of the Economics of Education'', Eric A. Hanushek and Finis Welch (Eds). Amsterdam: North Holland, 2006: pp. 307–458.</ref> பொருளாதார ஏந்துகள் இல்லாத இளைஞர்கள், அறிவாற்றல், திறமை மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று வாதிடப் படுகின்றது. <ref>{{Cite news|url=https://som.yale.edu/news/2009/11/why-high-iq-doesnt-mean-youre-smart|title=Why a high IQ doesn't mean you're smart|date=2009-11-01|work=Yale School of Management|access-date=2018-10-06|language=en}}</ref>
 
அமெரிக்கக் கல்விமுறையில் அடிப்படையிலேயே ஒரு முரண்பாடு உள்ளது என பவுலசு (Samuel Bowles), சிண்டிசு (Herbert Gintis) ஆகிய பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அதாவது, அனைவருக்கும் சமமான கல்வி என்று ஒரு புறம் கூறிவிட்டு, மற்றொரு புறம் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கும் முதலாளித்துவம் நடைமுறை படுத்தப் படுகின்றது என அவர்கள் கூறுகின்றனர். <ref>{{Cite book|author1=Samuel Bowles|author2=Herbert Gintis|title=Schooling In Capitalist America: Educational Reform and the Contradictions of Economic Life|url=https://books.google.com/books?id=LcpLPKOL6XYC|accessdate=21 October 2011|date=18 October 2011|publisher=Haymarket Books|isbn=978-1-60846-131-8}}</ref>
 
==கல்வியின் எதிர் காலம்==
உலகம் மிக வேகமாக மாறிக் கொண்டு வருகின்றது. அதனால், நம் பழைய அறிவு புதிய காலத்திற்குப் பயனற்றதாகப் போய் விடுகின்றது. பல நாடுகள் பழைய கல்வி முறைகளை மாற்றி, புதுக் கல்விக் கொள்கைகளை வகுத்துக் கொள்கின்றன. பின்லாந்து போன்ற நாடுகளில் வழக்கமான பாடத் திட்டங்களை விட்டு விலகி, நடைமுறையில் காணும் நிகழ்வுகளை வைத்து குழந்தைகளுக்கு அறிவு புகட்டப் படுகின்றது. எடுத்துக் காட்டாக, தட்பவெப்ப நிலை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி சிறுவர்கள் கற்கின்றனர். <ref>{{cite web|url=http://www.oph.fi/english/curricula_and_qualifications/basic_education/curricula_2014|title=Finnish National Agency for Education - Curricula 2014|website=www.oph.fi}}</ref>
 
மேலும், கல்வி என்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அது பெரியவர்களுக்கும் கூடத்தான் என்ற கருத்து வலுப் பெற்று வருகின்றது. <ref>{{cite web|url=https://www.sitra.fi/en/articles/for-many-people-flexibility-at-work-can-be-a-liberation-matthew-taylor-chief-executive-royal-society-of-arts/|title=For many people, flexibility at work can be a liberation|publisher=}}</ref> பின்லாந்து நாட்டில், கல்வி வாழ்நாள் முழுவதற்கும் கட்டாயமாக்கப் பட வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப் பட்டுள்ளது. <ref>{{cite web|url=https://www.sitra.fi/en/articles/compulsory-education-last-lifetime/|title=Could compulsory education last a lifetime? - Sitra|publisher=}}</ref>
 
= குறிப்புகளும் மேற்கோள்களும் =
"https://ta.wikipedia.org/wiki/கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது