வளர்சிதை மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் வளர்சிதைமாற்றம் என்பதை வளர்சிதை மாற்றம் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:ATP-3D-vdW.png|thumbnail|right|280px|Structure of the [[coenzyme]] [[adenosine triphosphate]], a central intermediate in energy metabolism.]]
 
'''வளர்சிதை மாற்றம்''' (Metabolism) அல்லது (இலங்கை வழக்கு:) '''அனுசேபம்''' என்பது உயிர்வாழ்வதற்காக [[உயிரினம்|உயிரினங்களில்]] நடைபெறும் ஒரு தொகுதி [[வேதி வினை]]கள் ஆகும். இவ்வேதிவினைகள் உயிரினங்கள் வளர்வதற்கும், [[இனப்பெருக்கம்]] செய்வதற்கும், தமது [[உடல்|உடலமைப்பைப்]] பராமரிப்பதற்கும் உதவுகின்றன. வளர்சிதைமாற்றம் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. இவை, [[சிதைமாற்றம்]] (catabolism), [[வளர்மாற்றம்]] (anabolism) என்பனவாகும். சிதைமாற்றம் பெரிய மூலக்கூறுகளைச் சிறியனவாக உடைக்கின்றது. வளர்மாற்றம் சத்தியைப் பயன்படுத்தி [[புரதம்]], [[கருவமிலம்|நியூக்கிளிக் அமிலம்]] போன்ற [[உயிரணு|கலத்தின்]] கூறுகளை உருவாக்குகின்றது.
 
வளர்சிதைமாற்றத்தின் வேதிவினைகள் [[வளர்சிதைமாற்றச் செல்வழி]]களாக ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் ஒரு வேதிப்பொருள் இன்னொன்றாக மாறுவது ஒரு தொகுதி [[நொதியம்|நொதியங்களின்]] மூலம் நடைபெறுகின்றது. வளர்சிதைமாற்றத்துக்கு நொதியங்கள் மிகவும் இன்றியமையாதனவாகும். ஏனெனில், இவையே விரும்பத்தக்க, ஆனால் வெப்ப இயக்கவியல் அடிப்படையில் சாதகமற்ற வேதிவினைகளை [[இணைத்தல் (இயற்பியல்)|இணைத்தல்]] முறை மூலம் சாதகமானவையாக்கி உயிரினங்களில் அவை நிகழ உதவுகின்றன. நொதியங்கள், கலங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு அல்லது பிற கலங்களில் இருந்து வரும் சைகைகளுக்கு அமைய, வளர்சிதைமாற்றச் செல்வழிகளை நெறிப்படுத்துவதற்கும் உதவுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/வளர்சிதை_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது