முகலாயக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இசுலாமியக் கட்டிடக்கலை
வரிசை 16:
== சா சகான் ==
[[படிமம்:New Delhi Jama Masjid.jpg|thumb|200px|சா சகான் தில்லியில் கட்டிய ஜமா மசூதி]]
பேரரசர் [[சா சகான்ஷாஜகான்]] காலத்தில், முகலாயக் கட்டிடக்கலை நுணுக்கமான நளினத் தோற்றம், வேலைப்பாடுகளில் மெருகு என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இது, அவர் காலத்தில் ஆக்ரா, தில்லி ஆகிய நகரங்களில் கட்டப்பட்ட பெரிய [[அரண்மனை]]கள் வாயிலாக அறியக்கிடக்கிறது. இந்தியாவில் கட்டப்பட்ட சமாதிக் கட்டிடங்களுள் மிகச் சிறப்பு வாய்ந்ததும், உலகப் புகழ் பெற்றதுமான கட்டிடம் சா சகான் தனது மனைவியான மும்தாசுக்காக ஆக்ராவில் கட்டிய [[தாஜ் மகால்]] ஆகும். ஆக்ராக் கோட்டையில் உள்ள [[மோத்தி மசூதி]], தில்லியில் உள்ள [[ஜமா மசூதி, தில்லி|ஜமா மசூதி]] என்பன சா சகான் காலத்துக் கட்டிடக்கலையின் வடிவமைப்பு நுட்பங்களைத் திறம்பட எடுத்துக் காட்டுகின்றன. சா சகான், லாகூர்க் கோட்டையுள் அமைந்துள்ள சமாதிக் கட்டிடம், மோத்தி மசூதி, [[சீசு மகால்]], [[நௌலாகா மண்டபம்]] போன்ற கட்டிடங்களையும் கட்டினார். இவர் [[தத்தா]] என்னும் இடத்தில் அவரது பெயரில் அமைந்த [[சா சகான் மசூதி]] என்னும் ஒரு மசூதியையும் அமைத்துள்ளார். [[சேக் இல்ம் உத் தீன் அன்சாரி]] என்னும் அரண்மனை மருத்துவரால் கட்டப்பட்ட லாகூரில் உள்ள [[வாசிர் கான் மசூதி]]யும் சா சகான் காலத்தைச் சேர்ந்ததே.
 
== ஔரங்கசீப் காலமும் பிற்கால முகலாயக் கட்டிடக்கலையும் ==
"https://ta.wikipedia.org/wiki/முகலாயக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது