செண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
'''செண்டை''' என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு தாள இசைக்கருவியாகும். இக்கருவி பரவலாகக் [[கேரளம்]], [[கருநாடகம்|கருநாடக]] மாநிலத்தின் துளு நாடு பகுதி மற்றும் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. துளு நாட்டில் இது '''செண்டே''' என்று அழைக்கப்படுகிறது.
 
செண்டை மேளம் பண்டைய தமிழ் இசை தோற்கருவி "[[கொடுகொட்டி (இசைக்கருவி)|கொடுகொட்டி]]" என்பதன் பரிணாம வளர்ச்சியே ஆகும். செண்டை 18ம் நூற்றாண்டில் முழுமையான தற்கால வடிவம் பெற்றது.
 
செண்டை நீண்ட உருளை வடிவத்திலுள்ள மரக்கருவியாகும். இது இரண்டு அடி நீளமும் ஓரடி விட்டமும் கொண்டது. இதன் இரண்டு முனைகளும் '''செண்டை வட்டங்களால்''' மூடப்பட்டிருக்கின்றன. பொதுவாக இது பசு மாட்டின் தோலால் உண்டாக்கப்படுகிறது. காளை மாட்டின் தோல் இதற்கு பயன்படுத்தப்படுவதில்லை. தரம் மிக்க ஒலியிற்காக பசு மாட்டின் அடி வயிற்று தோல் பயன்படுத்தப்படுகிறது. செங்குத்தாக வைப்பதற்காக வாசிப்பவர்களின் தோளிலிருந்து தொங்கவிடப்படுகிறது. செண்டையின் மேல் பகுதியில் மட்டும் கோல் கொட்டப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/செண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது