இலக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இன்பியல் இலக்கியம், அறிவியல் இலக்கியம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தாய்மை நெறி
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 178:
இயைபும் கலைப்பின்னலும் உருவத்தின் இன்றியமையாதப் பகுதிகளாகும். <ref>{{cite book | title=இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும் | publisher=மக்கள் வெளியீடு,சென்னை-2 | author=பேராசிரியர் நா.வானமாமலை | year=1999 | pages=46-51}}</ref>
 
 
 
 
'''தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தாய்மை நெறி'''
 
உலகில் காணப்படும் அனைத்து உயிரினங்களும் ஆண்>பெண் என்னும் இரண்டு அங்கங்களாக விளங்கி வருகின்றன. வது தாய்மை. அங்ஙனம் ஒவ்வொரு உயிரணுவும் பிறப்பிக்கப்பட காரணமாக விளங்குகின்ற தாய்மைப் பண்பு பெண்ணினத்தின் தலையாய மாண்பு என்றால் அது மிகையாகாது. இவ்வாறிருக்க, உலகின் மூத்த மொழியாகப் போற்றப்படுகின்ற தமிழ் மொழியின் இலக்கண இலக்கிய நூல்கள் புலப்படுத்தும் தாய்மை நெறி இக்கட்டுரையில் நுவலப்படுகின்றது.
 
'''சங்க இலக்கியங்களில் தாய்மை நெறி'''
 
'''  ''' அமிழ்தான அருந்தமிழின் உயிர்ப்பாகத் திகழ்வன சங்கத் தமிழ் நால்கள். இவை அகம் புறம் என்கிற பாண்மையில் விளங்கும் எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் பழந்தமிழரின் வாழ்வியல் விழுமியங்களை பிரகாசிக்கின்றன.
 
   சங்க இலக்கிய அக நூல்கள் தமிழரின் காதல் (களவு) ஒழுக்கத்தை மையமிட்டதாகவும் புற நால்கள் வீரம்>பண்பாடு முதலானவற்றை மையமிட்டதாகவும் அமைந்திருக்கின்றன. இங்கு தாய் என்பவள் நற்றாய் என்று பெயர் சுட்டப்படுகின்றாள். ஆண்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து கல்வி கற்கவும், பொருள் தேடவும், போர் புரியவும் சென்ற நிலையில் குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்று> போர்களால் தம்பி>அண்ணன்>கணவன்>மகன் என எல்லா உறவுகளையும் பறிகொடுத்த நிலையிலும் தமிழையும்>தமிழ்ப் பண்பாட்டையும் கட்டிக்காத்து அவற்றைத் தம் பிள்ளைகளுக்கு ஊட்டிய பொருமை இந்த தாய்மார்களையே சேரும்.
 
   பண்டையத் தமிழகம் தாய்வழிச் சமூகமாக இருந்தமையால் தாய்மார்கள் பெர்மெபாண்மையும் போற்றப்பட்டார்கள். சங்க கால அரசர்கள் கூடநல்லினி ஈன்ற மகள்> பதுமன் தேவி ஈன்ற மகள் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர் என்பதை பதிற்றுப்பத்தின் வழி அறியலாம். குழந்தையைப் பெற்றெடுத்த தாய் போற்றப்பட்டதை
 
 
 
   “'''ஒண்சுடர் பாண்டில் செஞ்சுடர் போல'''
 
'''   மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற…'''
 
'''   புறவணி நாடன் புதல்வன் தாயே’’'''
 
'''                       -ஐங்:405'''
 
என்னும் ஐங்குறுநாற்றுப் பாடல் வழி அறிய முடிகின்றது. இதில் மகனைப் பெற்ற தாய் விளக்கின் சுடர் போல வீட்டிற்கும் வெளிச்சம் கொடுக்கும் விளக்கானால் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
மேலும்,தன் மகள் தான் விரும்பிய தலைவனோடு நீண்ட நீட்களாக இன்புற்றிருக்கிறாள் என்னும் செய்தியைக் நான் பழி தூற்றும் பெண்களாள் நான் அறிந்ததை எனது மகள் அறிவாளாயின் தன் துணையொடு கொடிய பாலையைக் கடந்து இருக்கும் ஊரின் கீழ் சென்று தங்க முன்படுவாள். நான் அதற்கு முன்னரே இவ்விடம் சென்று அவர்களை வரவேற்பேனாக என்று கூறிய செய்தியை
 
   '''‘’உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும்'''
 
'''   யாய் அறிந்து உணர்க  - - -'''
 
'''   நுனை குழைத்து அலமரும் நொச்சி'''
 
'''   மனைகெழு பெண்டு யான் ஆகுக மன்னே!’’'''
 
'''                       -அகம்.203'''
 
'''எனும் இப்பாடல் புலப்படுத்துகின்றது.'''
 
'''   ‘’ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே’’'''
 
'''                       -புறம்.312'''
 
எனும் இப்பாடலில் பொன்முடியார் கூறியிருப்பது பிள்ளையைப் பெறுவது தாயின் கடமை என்ற பொருளில் தானே தவிர பெண்ணை இயந்திரமாகச் சுட்டிக் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
'''தொல்காப்பியர் பார்வையில் நற்றாய்'''
 
'''  ''' தமிழின் தொன்மையான நூலான தொல்காப்பியத்தில் அகத்திணையியல் என்னும் இயலில் அகத்திணை மாந்தர்களான தலைவன்> தலைவி> தோழி> செவிலி> நற்றாய் முதலானோரின் கூற்றுகள் இன்னின்ன இடத்திற்கென விவரித்துள்ளார் தொல்காப்பியர். அங்ஙனம் நற்றாய்யின் கூற்றைக் கூறுமிடத்து
 
   '''‘’தன்னும் அவனும்> அவளும் சுட்டி'''
 
'''   மன்னு நிமித்தம்> மொழிப்பொருள் தெய்வம்'''
 
'''   நன்மை தீமை அச்சம் சார்தல் என்று'''
 
'''   அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ'''
 
'''   முன்னிய காலம் மூன்றுடன் விளக்கித்'''
 
'''   தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்'''
 
'''   போகிய திறந்து நற்றாய் புலம்பலும்'''
 
'''   ஆகிய கிளவியும் அவ்வழி உரிய’’'''
 
'''                       -பொருள்.982'''
 
என்றார்.அதாவது>உடன்போக்கில் தலைவன் தலைவியை அழைத்துச் சென்ற பின்னர்> நற்றாய் தன்னிலை>தலைவனின் நிலை>தலைவியின் நிலை ஆகியவற்றைக் குறிப்பிட்டு நிமித்தம் பார்த்தல்>விரிச்சி கேட்டல்> தெய்வத்தை வழிபடல்>அவர்க்கு ஏற்படுகின்ற நன்மை தீமை பற்றிச் சிந்தித்தலால் ஏற்படும் அச்சம் அவரைச் சார்தல் போன்றவைகளை மூன்று காலங்கள் பற்றியும் விளக்கித் தோழியிடமும் கண்டோரிடமும் நற்றாய் புலம்புதல் என்பதாகும்.
 
   '''‘’தாய் அறிவுறுதல் செவிலியொடு ஒக்கும்’’   '''
 
'''                           -களவு.1084'''
 
தலைவியின் ஒழுகலாறுகளை செவிலி அறியும் பொழுதுதான் தாயும் அறிவாள் என்பது புலப்படுகின்றது.
 
மேலும்>தலைவனும் தலைவியும் உடன்போக்கு சென்றதன்கண் கனவு ஏற்படும். அங்ஙனம் அக்கனவுகள் தலைவியின் தாய்,செவிலி>தோழி ஆகியோர்க்கும் ஏற்படுவதாக>
 
   '''‘’தாய்க்கும் உரித்தால் போக்குடன் கிளப்பின்’’       '''
 
'''                           -பொருள்.1144'''
 
'''   ‘’பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே’’'''
 
'''                           -பொருள்.1145'''
 
என்னும் நூற்பாக்களினால் கூறியுள்ளார். இவை நற்றாய்க்கே உரிய இலக்கணங்கள் என்றுணர வேண்டும்.
 
'''பக்தி இலக்கியங்களில் தாயின் மாண்பு'''
 
'''  ''' தமிழில் பக்தி இலக்கியங்கள் என்பது சைவம் ,வைணவம் என்ற இரு சமயங்களை மையமாகக் கொண்டது. நாயன்மார்கள் சைவத்தையும் ஆழ்வார்கள் வைணவத்தையும் போற்றி வளர்த்தனர். இவர்கள் சிவன்> பார்வதி> லட்சுமி> திருமால்> முருகன் போன்றோரை தனது தலைவியாகவும் தலைவனாகவும்> தந்தையாகவும் அன்னையாகவும் பாவித்துப் பாடல்கள் பலவற்றைப் புனைந்தனர்.
 
   திருஞானசம்பந்தர் மூன்று வயதில் உமையம்மையால் பாலூட்டப்பெற்று அக்கணமே பாடல் பாடிய செய்தி யாவரும் அறிந்ததே. இச்செய்தியை
 
   '''‘’எண்ணரிய சிவஞானத் தின்னமுதம் குழைத்தருளி'''
 
'''   உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும்'''
 
* '''   -    -    -    -    -    -    -'''
 
'''உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்'''
 
'''தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்’’'''
 
என்று சேக்கிழார் போற்றியுரைத்துள்ளார்.
 
   '''‘’தெள்ளியீர்.தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர்'''
 
'''   வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்> ஓ'''
 
'''   துள்ளிநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள் கள்வியோ'''
 
'''   கைவளை கொள்வது தக்கதே’’'''
 
'''                   -இரண்டாம் திருமொழி(1658)'''
 
நாலாயிர திவ்ய பிரபந்தம்,இரண்டாம் திருமொழியின்கண் அமைந்த இப்பாடலில் தாயானவள்> என் பிள்ளை திருக்கண்ணபுரத்தை தொழுதாளென்பதையே வியாஜமாகக்
 
கொண்டு இவளுடைய கைவளையைக் கொள்ளை கொள்வது தகுதியோ?என்று சௌரிப்பெருமாளை மடிப்பிக்கிறாள். அதாவது,கைவளையைக் கவர்தல் என்று சொல்வதன் பொருள் யாதெனின்> பிரிவாற்றாமையினால் இவளது உடம்பு இளைத்துப் போகும்படிச் செய்தீரே> மகிழ்வைக் கொடுத்து இவளுடம்பை குஷ்டுயாக்குவது தானே தகுதியுடைய பண்பு என்று கொள்ள வேண்டும். அதாவது>மகளைப் பெற்ற தாய் அவளது நோயைக் கண்டு வருந்தி தானே அதற்கான மருந்தை தாயாரித்துக் கொடுப்பது புலப்படுகின்றது.
 
'''இக்கால இலக்கியங்கள் சுட்டும் தாய்மை'''
 
'''  ''' இக்கால இலக்கியங்கள் என்பவை நாவல்>கவிதை> நாடகம்> சிறுகதை என அனைத்தும் கலந்த கலவையாகி விளங்குகின்றன. இவை சமகாலப் பிரச்சினைகளையும் சமூக நிலவரங்களையும்> உளவியல் சிக்கல்கள் முதலானவற்றையும் அப்பட்டமாய் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில் தாய் என்னும் பண்G பல கோணங்களாக சித்தரிக்கப்படுகின்றன.
 
   உதாரணமாக> கமலாம்பாள் சரித்திரம் என்னும் நாவலை எடுத்துக் கொள்வோம். அதில் வரும் கமலாம்பாள் அவ்வூரின் அனைத்து பெண்களினின்றும் மேம்பட்டவள். ஊரிலுள்ளவர்களைப் பற்றிப் புறம் பேசுதலை தன் கடமையாகf; கொண்டிருக்கும் வம்பர் மகா சபையில் இவள் இருந்திலள்.எனவே> கல்வி கற்பதிலும் குழந்தைகளை வளர்க்கும் நிலையிலும் > குடும்பத்தைப் பேணும் முறையிலும் இவள் மாறுபட்டவள். தன் கொழுந்தனின் மகd; மேல் தான் பெற்ற பிள்ளை போல் இவள் அக்கறை கொள்ளும் விதம் உலகின் வேறெந்த பெண்ணிடமும் இல்லாததாக ராஜமய்யர் காட்டியிருப்பது சிறப்பு.இதைத் தான் வள்ளுவர்>
 
   '''‘’தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற'''
 
'''   சொற்காத்து சோர்விலாள் பெண்’’'''
 
'''                       -குறள்.0056'''
 
   அடுத்ததாக> சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான மாதொருபாகன் என்னும் நாவலை எடுத்துக் கொள்வோம். இது கமலாம்பாள் சரித்திரத்திற்கு நேரெதிரானது. குழந்தைப் பேறடையாத பொன்னா என்னும் பெண் ஊரிலுள்ள அனைவரின் வசைச் சொல்லிற்கு உட்படுவதும்> குழந்தைப் பேற்றை அடைய யார் என்ன சொன்னாலும் அதை அப்படியே மேற்கொள்வதும்> தனது தாயே தன்னை பெருநோன்பில் (நீண்ட காலமாக குழந்தைப் பேறு அடையாதோர் பெருநோம்பில் சாமியாக இருப்பவருடன் இணைதல்) கலந்து கொள்ள வற்புறுத்துவதும்> அதனால் ஒருபோதும் தன்னை விட்டுக்கொடுக்காத கணவனிடமே வெறுப்பைப் பெறுதலும் கதையின் சாராம்சம். இந்நூலில் குழந்தையைப் பெற்ற தாய் என்பவள் எல்லா நேரங்களிலும் தன் குழந்தைக்காக செயல்பட முடியாதென்பதால் ஊரார் பேச்சொடு தானும் இயைந்து செயல்படுகிறாள்.
 
== மேலும் காண்க ==
வரி 187 ⟶ 322:
*[[பிரெஞ்சு இலக்கியம்]]
*[[பிரெஞ்சு இலக்கணம்]]
*
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/இலக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது