சிதைமாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
சி + நீக்கல் வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{delete}}
{{தலைப்பை மாற்றுக}}
{{merge to|சிதை மாற்றம்சிதைமாற்றம்}}
சிதைமாற்றம்:
'''சிதைமாற்றம்''' (''Catabolism'') என்பது [[வளர்சிதை மாற்றம்|வளர்சிதை மாற்றத்தின்]] ஒரு கூறாகும். இத்தாக்கங்களின் மூலம் பெரிய மூலக்கூறுகளிலிருந்து சிறிய மூலக்கூறுகள் உருவாகும். இவ்வகை தாக்கங்கள் ஆக்சிஜனேற்றத்தின் மூலம் சக்தியை வெளியேற்றுபவையாகவோ அல்லது மற்றைய வளர்மாற்றங்களுக்கோ<ref>{{cite web |url=http://www.chem.qmul.ac.uk/iupac/bioinorg/CD.html#8 |title=Glossary of Terms Used in Bioinorganic Chemistry: Catabolism |accessdate=2007-10-30 |last=de Bolster |first=M.W.G. |year=1997 |publisher=International Union of Pure and Applied Chemistry |archive-url=https://web.archive.org/web/20170121172848/http://www.chem.qmul.ac.uk/iupac/bioinorg/CD.html#8#8 |archive-date=2017-01-21 |dead-url=yes |df= }}</ref> பயன்படலாம். சிதைமாற்றங்கள் பெரிய மூலக்கூறுகளை (உதாரணம்: [[கூட்டுச்சர்க்கரை]], [[கொழுமியம்]], [[கருவமிலம்]], [[புரதம்|புரதங்கள்]]) உடைப்பதன் மூலம் சிறியகூறுகளை (உதாரணம்: [[ஒற்றைச்சர்க்கரை]], [[கொழுப்பு அமிலம்]], [[கருக்காடிக்கூறு]], [[அமினோ அமிலம்]]) உருவாக்கும்.
 
சிதைமாற்றம் என்பது சிக்கலான காிமவேதிப்பொருட்களால் ஆன கூட்டு சக்கரைகள், கொழுப்பு, நியூக்ளிக் அமிலங்கள் மற்றும் புரதங்கள் உடைந்து அதன் சிறிய அலகுகளான ஒற்றை சா்க்கரைகள், கொழுப்பு அமிலங்கள், நியூக்ளியோடைடுகள் மற்றும் அமினோ அமிலங்களாக மாறும் நிகழ்வாகும். மேலும் இச்சிதைமாற்றத்தின் சிறிய அலகுகள் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து ஆற்றலை வெளிப்படுத்துகின்றன அல்லது மற்ற வளா்மாற்ற வினைகளில் பங்கு பெறுகின்றன.
[[ உயிரணு|உயிரணுவானது]] புதிய மூலக்கூறுகளை உருவாக்கும்போது, சிதைவுறுகிற பழைய மூலக்கூறுகளை பயன்படுத்திக்கொள்கிறது அல்லது உயிரணுக் கழிவுகளான [[லாக்டிக் அமிலம்]], [[அசிட்டிக் காடி]], [[கார்பனீராக்சைடு]], [[அமோனியா]], [[யூரியா]] போன்றவற்றை மேலும் சிதைத்து சிறிய மூலக்கூறுகளாக மாற்றிக்கொள்கிறது. இக்கழிவுகள் வெளியேற்றமானது [[ஆக்சிஜனேற்றம்]] பெறுவதன் மூலம் வேதித் தன்மையற்ற ஆற்றலை வெளியிடுவதால் கிடைப்பதாகும். இவ்வாறு செய்யும்போது வெப்பமிழப்பு ஏற்படும். ஆனால், வெளிவரும் கழிவுகளால் அடினோசின் ட்ரை பாஸ்பேட்டுகளின் சேர்க்கை தூண்டப்படுகிறது. இவை உயிரணுக்களின் பராமரிப்புக்கும் அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றலையும் வழங்கும். இம்மூலக்கூறுகள் சிதைமாற்றத்தால் வெளிப்படும் ஆற்றலை வளர்மாற்றத்திற்குத் தேவைப்படும் ஆற்றலாக மாற்ற ஒரு வழிப்போக்கியாகச் செயல்படுகின்றன. சிதைவுறுதல், [[வளர்மாற்றம்]], சிதைமாற்றம் ஆகிய அனைத்தும் வளர்சிதைமாற்றமாகவே கொள்ளப்படுகின்றன.
 
செல்கள் மேற்கண்ட சிதைமாற்ற வினை மூலம் சிறிய பகுதி பொருள்களை மீண்டும் சிக்கலான கூட்டுப்பொருட்களை உருவாக்குவதற்கோ அல்லது அச்சிறிய பகுதிப்பொருட்களை மேலும் உடைத்து கழிவு பொருட்களான (லாக்டிக் அமிலம், அசிட்டிக் அமிலம், காா்பன்-டை-ஆக்ஸைடு, அம்மோனியா மற்றும் யூாியா) மாற்றுவதன் மூலம் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.
== சிதைமாற்றங்களுக்கான எடுத்துக்காட்டுகள்==
 
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
# [[சர்க்கரைச் சிதைவு]]
# [[சிட்ரிக் அமில சுழற்சி]]
# கொழுப்பிழையங்களில் உள்ள கொழுப்பு கொழுப்பமிலங்களாக உடைதல்.
# தசையிலுள்ள புரதம் உடைவதன் மூலம் உருவாகும் [[அமினோ அமிலம்]] பயன்படும் குளுகோனியோஜெனசிஸ் தாக்கம்.
# மொனோமைன் ஆக்சிடேசால் நரம்புக்கடத்திகள் மூலம் நிகழ்த்தப்படும் ஆக்சிஜனேற்ற செயல்பாடுகளின் தாக்கம்.
 
== கட்டுப்படுத்தும் காரணிகள் ==
சிதைமாற்றத்தை பல்வேறு அம்சங்கள் (சமிக்ஞைகள்) கட்டுப்படுத்துகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை இயக்குநீர்களும், வளர்சிதைமாற்றத்தில் தாமாகவே பங்குபெறும் [[உயிரணு]] மூலக்கூறுகளும் ஆகும். [[உட்சுரப்பியல்]] வல்லுநர்கள் பாரம்பரியமாக வளர்சிதைமாற்றத்தைத் தூண்டுவதில் அவற்றின் பங்கினைப் பொறுத்து , இயக்குநீர்களை இருவிதமாக வகைப்படுத்துகின்றனர். ஒன்று சிதைமாற்ற இயக்குநீர்கள், மற்றொன்று வளர்மாற்ற இயக்குநீர்கள். இருபதாம் நூற்றாண்டு வரை [[கார்ட்டிசால்]], [[குளூக்கொகான்]], [[எபிநெப்ரின்|அட்ரினலின்]], காட்கொலமைன் ஆகியவையே முதன்மைச் சிறப்பான சிதைமாற்ற இயக்குநீர்களாக அறியப்பட்டிருந்தன. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இன்னும் பல இயக்குநீர்கள் குறைந்த அளவில் சிதைமாற்றத்தில் பங்குகொள்வது கண்டறியப்பட்டது. அவற்றுள் சில, [[சைட்டோக்கைன்]], [[ஓரெக்சின்]], [[சைட்டோக்கைன்]], [[மெலட்டோனின்]] ஆகியவையாகும்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:வளர்சிதைமாற்றம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிதைமாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது