இரைப்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 73:
* எத்தனோல்
* கப்ஃபீன்
 
===இரைப்பைச் சாறு சுரத்தல்===
 
இரைப்பைச் சாறு என்பது சீதமுளிப் படை (Mucosa) இல் உள்ள இரைப்பைச் சுரப்பிகளால் சுரக்கப்படும் ஐதரோகுளோரிக் அமிலம் (HCl) நிறைந்த சுரப்பு ஆகும். இதில் புரதச் சமிபாட்டுக்குத் தேவையான நொதியங்களும், விற்றமின் B12 ஐ அகத்துறிஞ்சத் தேவையான Intrinsic factor உம் உள்ளன. ஐதரோகுளோரிக் அமிலம் உணவுடன் உட்கொள்ளப்படும் நுண்ணங்கிகளைக் கொல்வதற்கும், பெப்சினோஜன் நொதியத்தை பெப்சின் வடிவத்துக்கு மாற்றவும் பயன்படுகின்றது. இரைப்பைச் சாறு சுரத்தல் ஓமோன்கள் மற்றும் மூளையின் செயற்பாடுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. கஸ்ரைன் (Gastrin) ஓமோன் இரைப்பைச் சாறு சுரத்தலை அதிகரிக்கும். வேகஸ் நரம்பு (vagus nerve) மூலம் மூளை இரைப்பைச் சாறு சுரத்தலைக் கட்டுப்படுத்தும். உதாரணமாக உணவைப் பற்றி சிந்தித்தல், உணவைப் பார்த்தல், உணவைச் சுவைத்தல், மணத்தல், கேட்டல் ஆகிய தூண்டல்களும் மன அழுத்தமும் இரைப்பைச் சாறு சுரத்தலை அதிகரிக்கும். முன்சிறுகுடலால் சுரக்கப்படும் Secretin, CCK ஆகிய ஓமோன்கள் இரைப்பைச் சாறு சுரத்தலையும், இரைப்பை வெறுமையாவதையும் குறைக்கும்.
 
==மருத்துவ முக்கியத்துவம்==
 
இரைப்பை தொடர்பான நோய்களுள் [[இரைப்பை அழற்சி]] முக்கியத்துவம் பெறுகின்றது. இது இரைப்பையில் அதிக அமிலத்தன்மை காரணமாக இரைப்பைச் சுவர் சேதமடைந்து பாதிக்கப்படுவதால் ஏற்படுகின்றது. ''Helicobacter pylori'' எனும் பக்டீரியாவால் இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக்கப்படுகின்றது.
உடற்பருமனைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் இரைப்பை அறுவைச் சிகிச்சையும் இதன் மருத்துவ முக்கியத்துவங்களுள் ஒன்றாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரைப்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது