"கூம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
கூம்பானது கோட்டுத்துண்டுகளால் உருவானால், அது அடிப்பக்கத்தைத் தாண்டி அமையாது; அரைக்கோடுகளால் உருவானால் முடிவிலி தூரத்திற்கு நீட்சியடையும்; கோடுகளால் உருவானால் உச்சியின் இருபுறமும் முடிவிலி தொலைவிற்கு நீட்சி அமைந்து 'இரட்டைக் கூம்பு' எனவும் அழைக்கப்படும்.
 
அடிப்படை [[வடிவவியல்|வடிவவியலில்]] கூம்புகள் நேர்வட்டக் கூம்புகளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. நேர்வட்டக்கூம்பு என்பது அடிப்பக்கம் வட்டமாகவும் கூம்பின் உச்சியையும் அடிவட்டமையத்தையும் இணைக்கும் கோடு (கூம்பின் அச்சு) அடித்தளத்திற்கு செங்குத்தாகவும் கொண்ட கூம்பாகும்.<ref name=":1">{{Cite book|url=https://books.google.com/books?id=UyIfgBIwLMQC|title=The Mathematics Dictionary|last=James|first=R. C.|last2=James|first2=Glenn|date=1992-07-31|publisher=Springer Science & Business Media|isbn=9780412990410|pages=74–75|language=en}}</ref> ஒரு நேர்வட்டக்கூம்பின் பக்கப்பரப்பும் மற்றுமொரு தளமும் வெட்டிக்கொள்ளும் போது கிடைக்கும் வெட்டுமுகம் [[கூம்பு வெட்டு]] ஆகும். எனினும் பொதுவாக ஒரு கூம்பின் அடிப்பாகம் வட்டமாக மட்டுமே இருக்க வேண்டுமென்பதில்லை;<ref name="grunbaum">Grünbaum, ''Convex polytopes'', second edition, p. 23.</ref> மேலும் உச்சிப் புள்ளி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் (எனினும் பெரும்பாலும் கூம்பின் அடிப்பக்கம் வரம்புடையதாகவும் அதனால் முடிவுற்ற [[பரப்பளவு]]டையதாகவும், உச்சியானது அடிப்பக்கத் தளத்திற்கு வெளியேயுள்ள புள்ளியாகவும் கருதப்படுகிறது).
 
நேர்வட்டக்கூம்பிற்கு மாறாக, சாய்கூம்புகளில் உச்சியையும் அடிப்பக்க மையத்தையும் இணைக்கும் கோடு அடிப்பக்கத்திற்கு செங்குத்தற்றதாக இருக்கும்.<ref name="MathWorld">{{MathWorld |urlname=Cone |title=Cone}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2638879" இருந்து மீள்விக்கப்பட்டது