"அசை (யாப்பிலக்கணம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,718 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
ஒரு சீரை அசை பிரிக்கும்போது அச்சீரின் முதல் எழுத்து ஒரு மாத்திரை அளவுக்குக் கூடுதலான எழுத்து ஆயின் அது தனியாகவே ஒரு அசையாக அமையக்கூடும். எடுத்துக்காட்டாக 2 மாத்திரைகள் அளவுள்ள நெடில் அல்லது ஒன்றரை மாத்திரை கால அளவு கொண்ட ஐகார ஔகார எழுத்துக்கள் முதலெழுத்தாக வரின் அது தனியாக ஒரு அசையாகலாம். அடுத்துவரும் எழுத்து ஒரு ஒற்றெழுத்தாக அமையாவிடின் மேற்சொன்ன எழுத்துக்களை அசையாகக் கொள்ளமுடியும். ஆனால் முதல் எழுத்தைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வருமானால் அந்த எழுத்தையும் முதல் எழுத்தோடு சேர்த்து அசையாகக் கொள்ளவேண்டும்.
 
கீழேயுள்ளது நான்கு சீர்களைக் கொண்ட ஒரு செய்யுள் [[அடி (யாப்பிலக்கணம்)|அடியாகும்]].
 
 
இங்கே முதற்சீரான '''கேளிர்''' என்பதில் முதலெழுத்தான '''கே''' இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலாகும். இதைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வராமையால் '''கே''' தனியாகவே அசையாக அமையும். இதுபோலவே இரண்டாஞ் சீரிலும் '''போ''' தனியாகவே அசையாகும்.
 
மூன்றாவது [[சீர் (யாப்பிலக்கணம்)|சீரான]] '''கேள்கொளல்''' என்பதிலும் முதலெழுத்தாக இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலான '''கே'''யே வருவதால், அது தனியாகவே ஒரு அசையாக அமையக் கூடும். ஆனாலும் இரண்டாம் எழுத்து '''ள்''' ஒரு ஒற்றெழுத்து ஆதலால், அதையும் சேர்த்து '''கேள்''' என்பதை ஒரு அசையாகக் கொள்ள வேண்டும். நாலாஞ் சீரிலும் இதே அடிப்படையில் '''வே''' உம் '''ண்''' உம் சேர்ந்து '''வேண்''' என அசையாகும்.
 
சீரின் அல்லது அசைபிரிக்க எடுத்துக்கொண்ட சீர்ப்பகுதியின் முதலெழுத்து குறிலாக இருந்தால் அது தனியாக அசையாகாது. அது அடுத்துவரும் குறில், நெடில் அல்லது ஒற்றெழுத்து ஆகிய ஏதாவது எழுத்துடன் சேர்ந்தே அசையாக முடியும். தொடர்ந்து வரும் எழுத்துக்கள் ஒற்றெழுத்துக்கள் ஆயின் அவற்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். தனிக் குறிலைத் தொடர்ந்து, சேர்த்துக்கொள்வதற்கு அதே சீரில் வேறு எழுத்துக்கள் இல்லாவிடில் தனிக் குறிலே அசையாக அமையும்.
 
முன்னர் எடுத்துக்கொண்ட அதே [[செய்யுள்]] அடியின் முதற் சீரில், அசையாக இனங்கண்ட '''கே''' என்பதைத் தவிர்த்தபின் மிகுதியாக உள்ள '''ளிர்''' என்ற பகுதியின் முதல் எழுத்து '''ளி''', அடுத்துவரும் ஒற்றெழுத்தான '''ர்''' உடன் சேர்ந்து '''ளிர்'''என அசையாகும். இவ்வாறே '''போலக்''' என்ற சீரிலும், '''லக்''' ஒரு அசையாகும்.
 
'''கேள்கொளல்''' என்னும் சீரில் '''கேள்''' என்னும் அசை தவிர்ந்த '''கொளல்''' எனும் பகுதியில், '''கொ''' குறில் எழுத்து அவ்விடத்தில் தனியாக அசையாகாது. அடுத்துவரும் '''ள''' உடன் சேர்ந்து அசையாகலாம். ஆனால் அடுத்த எழுத்து ஒற்றெழுத்து ஆதலால், அதையும் சேர்த்து '''கொளல்''' என்பதை ஒரு அசையாகக் கொள்ளவேண்டும்.
 
நான்காவது சீரான '''வேண்டி''' என்பதில், '''வேண்''' என்பது ஒரு அசையாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே மீந்துள்ள தனிக் குறிலான '''டி''' ஒரு அசையாகும்.
 
குறில், நெடில் எழுத்துக்கள் எவ்விதமாகச் சேர்ந்து அசைகள் உருவானாலும் தொடர்ந்து வரக்கூடிய ஒற்றெழுத்துக்களை அவற்றுடன் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பதே யாப்பிலக்கண விதி. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒற்றெழுத்துக்களும் இவ்வாறு சேர்ந்து அசைகளாவது உண்டு. சில எடுத்துக்காட்டுகள் கீழே தரப்பட்டுள்ளன.
 
* மகிழ்ந்தான் - மகிழ்ந் தான்
* ஆர்த்த - ஆர்த் த
* உய்த்துணர் - உய்த் துணர்
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[வெண்பா]]
* [[தமிழ் இலக்கணம்]]
 
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/26407" இருந்து மீள்விக்கப்பட்டது