வில்லியம் ஜேம்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
[[ஜான் டூயி]] மற்றும் சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் ஆகியோருடன் இணைத்து வில்லியம் ஜேம்ஸ் [[நடைமுறைவாதம்|நடைமுறைவாதக்]]  கோட்பாட்டோடு தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும், இவர் செயல்முறை உளவியலின் நிறுவனர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பொது உளவியல் - ஒரு மறுபார்வை என்ற பகுப்பாய்வு ஜேம்ஸ் வில்லியம்சை 20 ஆம் நுாற்றாண்டின் மிகச்சிறந்த உளவியலாளர்களின் தர வரிசையில் 14 ஆம் இடத்தில் வரிசைப்படுத்தியுள்ளது.  <ref>{{Cite journal|last=Haggbloom|last2=''et al.''|last3=Warnick|last4=Jones|last5=Yarbrough|last6=Russell|last7=Borecky|last8=McGahhey|last9=Powell|first=Steven J.|first2=Renee|first3=Jason E.|first4=Vinessa K.|first5=Gary L.|first6=Tenea M.|first7=Chris M.|first8=Reagan|first9=John L., III|year=2002|title=The 100 most eminent psychologists of the 20th century|url=http://www.apa.org/monitor/julaug02/eminent.aspx|journal=Review of General Psychology|volume=6|issue=2|pages=139–52|doi=10.1037/1089-2680.6.2.139|DOI=10.1037/1089-2680.6.2.139|display-authors=8}}</ref> 1991 ஆம் ஆண்டு அமெரிக்க உளவியலாளர் என்ற இதழ் நடத்திய ஆய்வொன்றில் வில்லியம் ஜேம்சின் புகழ் பரிசோதனை உளவியலின் நிறுவனராகக் கருதப்படும் வில்ஹெல்ம் உண்ட்டுக்குப் பிறகு இரண்டாம் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<ref>J. H. Korn, R. Davis, S. F. Davis: "Historians' and chairpersons' judgements of eminence among psychologists". ''American Psychologist'', 1991, Volume 46, pp. 789–792.</ref> <ref name="plato.stanford.edu">[http://plato.stanford.edu/entries/wilhelm-wundt/ "Wilhelm Maximilian Wundt"] in ''Stanford Encyclopedia of Philosophy''.</ref><ref>Tom Butler-Bowdon: [https://books.google.com/books?id=wfjB9Blnk8kC&printsec=frontcover#PPA20,M1 ''50 Psychology Classics'']. Nicholas Brealey Publishing 2007. {{ISBN|1857884736}}. p. 2.</ref> ஜேம்ஸ் எளிய பட்டறிவுக் கொள்கை அல்லது செய்து காண் அறிவு  என்ற தத்துவார்த்த நோக்கையும்  வளர்த்தெடுத்தார். ஜேம்சின் பணிகள் [[எமில் டேர்க்கேம்]], [[டபிள்யூ. இ. பி. டுபோய்ஸ்]], எட்மண்ட் உஸ்ஸெல், [[பெர்ட்ரண்டு ரசல்]], [[லுட்விக் விட்கென்ஸ்டைன்]], இலாரி புட்னம், மற்றும் ரிச்சர்டு ரோர்டி ஆகியோரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின எனலாம்.<ref name="SEP">{{Cite web|url=http://plato.stanford.edu/entries/james/|title=William James|work=[[Stanford Encyclopedia of Philosophy]]|publisher=[[Center for the Study of Language and Information]] (CSLI), [[Stanford University]]|accessdate=2013-09-21}}</ref> அதோடு மட்டுமல்லாமல் [[ஜிம்மி கார்ட்டர்]] போன்ற அதிபர்களிடம் கூட தாக்கத்தை உண்டாக்கின எனலாம்.
 
சுவீடன்போர்ஜியன் இறையியலாளர் சர் என்றி ஜேம்சு என்பவரின் மகனாகவும், என்றி ஜேம்ஸ் என்ற புகழ் பெற்ற புதின எழுத்தாளர் மற்றும் அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுக்கும் அலைஸ் ஜேம்ஸ் ஆகியோரின் சகோதரனாகவும், வளமான குடும்பத்தில் பிறந்தார். ஜேம்ஸ் தொடக்கத்தில் ஒரு [[மருத்துவர்]] ஆகவே பயிற்றுவிக்கப்பட்டார். ஆனால், அவர் ஒருபோதும் மருத்துவம் பார்த்ததில்லை. பதிலாக,  தனக்கு  தத்துவம்  மற்றும்  உளவியலில்  தான் உண்மையான  ஆர்வம் இருப்பதைக்  கண்டுகொண்டார்.  ஜேம்ஸ் [[அறிவாய்வியல்]],  [[கல்வி]], [[மீவியற்பியல்]],  [[உளவியல்]], [[சமயம்]]  மற்றும்  உள்ளுணர்வியல்  ஆகிய பகுதிகளில் பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார். அவரது மிகவும் செல்வாக்குள்ள புத்தங்களில், உளவியலின் கொள்கைகள் என்ற புத்தகம் உளவியல் எனும் களத்தில் முன்மாதிரியாக அமைந்த ஒன்றாகும்; எளிய செய்து காண் அறிவு அல்லது எளிய பட்டறிவுக் கொள்கை என்ற தலைப்பின் கீழான கட்டுரைகள் தத்துவவியலில் ஒரு முக்கியமான உரையாகும்; மற்றும் ஆன்மீக அனுபவங்களின் பலவகைகள் என்ற நுால் வெவ்வேறு வினதமான ஆன்மீக அனுபவங்களை புலனாய்வு செய்தததோடு மட்டுமல்லாமல் மனதைக் குனப்படுத்தும் கருத்தியல்களையும் உள்ளடக்கியதாக இருந்தது.<ref name="James">{{Cite book|last=James|last1=James|first1=William|first=William|date=2009|title=The Varieties of Religious Experience|pages=74–120|publisher=The Library of America|isbn=1598530623|ISBN=1598530623}}</ref>
 
==தொடக்க கால வாழ்க்கை==
[[File:Houghton MS Am 1092 (1185) - William James in Brazil, 1865.jpg|thumb|upright|right|பிரேசிலில் வில்லியம் ஜேம்ஸ், 1865]]
 
1842 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில், ஆஸ்டர் இல்லத்தில் வில்லியம் ஜேம்ஸ் பிறந்தார். இவர் குறிப்பிடத்தக்க, தனித்த, வளமான, அன்றைய நாளில் நன்கறியப்பட்ட, இலக்கிய அறிவுபடைத்த, மேல்தட்டு சுவீடன்போர்ஜியன் இறையியலாளர் சர் என்றி ஜேம்சின் மகனாவார். ஜேம்சின் குடும்ப சூழல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பல குறிப்பிடத்தக்க, அறிவுசார்ந்த திறமைகள் வரலாற்றாளர்கள், வாழ்க்கை வரலாறு எழுதுவோர் மற்றும் விமர்சகர்களுக்குத் தொடர்ந்து ஆர்வத்தைத் தருவதாக அமைந்தது. வில்லியம் ஜேம்ஸ் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பாலான கல்வியைப் பெற்றார். ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு இரண்டிலும் புலமையை வளர்த்துக் கொண்டார். ஜேம்ஸ் வீட்டின் கல்விச்சூழல் அகல்குடிவாதத்தை ஊக்கப்படுத்தியது. வில்லியம் ஜேம்ஸ் சிறுவனாக இருந்தபோதே, அந்த குடும்பம் ஐரோப்பாவுக்கு இரண்டு பயணங்களை மேற்கொண்டது, அவரது வாழ்க்கையில் பதின்மூன்று ஐரோப்பிய பயணங்களுக்கு காரணமாக அமைந்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_ஜேம்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது