"உத்தராகண்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12,341 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
உத்தராகண்ட்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
(உத்தராகண்ட்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது)
#REDIRECT[[உத்தராகண்ட்]]
[[படிமம்:Uttarakhand in India.png|thumb|இந்திய வரைபடத்தில் உத்தராகண்டம்]]
'''உத்தராகண்டம்''' (''Uttarakhand'', [[இந்தி]]: ''[[தேவநாகரி|उत्तराखण्ड]]'', முன்னாளில் '''உத்தராஞ்சல்''' (''Uttaranchal''), [[இந்தியா]]வின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 9 நவம்பர் 2000-இல் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்திலிருந்து]] பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் '''உத்தராஞ்சல்''' என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் [[இமயமலை]]யில் அமைந்துள்ளது. [[தேஹ்ராதுன்]] உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் [[நைனிடால்]] நகரில் உள்ளது. [[முசோரி]], [[அல்மோரா மாவட்டம்|அல்மோரா]], [[ராணிக்கெட்]], [[ரூர்க்கி]] ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். [[இந்து சமயம்|இந்து சமய]]த் திருத்தலங்களான [[ரிஷிகேஷ்]], [[ஹரித்வார்]], [[கேதார்நாத்துக் கோயில்|கேதார்நாத்]], [[பத்ரிநாத் கோயில்|பத்ரிநாத்]], [[கங்கோத்ரி|கங்கோத்திரி]], [[யமுனோத்திரி]] ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.
 
== ஆட்சிப் பிரிவுகள் ==
53,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உத்தராகண்டம் மாநிலம் [[கார்வால் கோட்டம்]] மற்றும் [[குமாவுன் கோட்டம்]] என இரண்டு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்வால் கோட்டம் ஏழு மாவட்டங்களும்; குமாவுன் கோட்டம் ஆறு மாவட்டங்களும் கொண்டுள்ளது. அவைகள்;
# [[அரித்துவார் மாவட்டம்|அரித்துவார்]]
# [[உத்தரகாசி மாவட்டம்|உத்தரகாசி]]
# [[சமோலி மாவட்டம்|சமோலி]]
# [[ருத்ரபிரயாக் மாவட்டம்|ருத்ரபிரயாக்]]
# [[டெக்ரி கர்வால் மாவட்டம்|டெக்ரி கர்வால்]]
# [[டேராடூன் மாவட்டம்|டேராடூன்]]
# [[பௌரி கர்வால் மாவட்டம்|பௌரி கர்வால்]]
# [[பிதௌரகட் மாவட்டம்|பித்தோரகர்]]
# [[பாகேஸ்வர் மாவட்டம்|பாகேஸ்வர்]]
# [[அல்மோரா மாவட்டம்|அல்மோரா]]
# [[சம்பாவத் மாவட்டம்|சம்பாவத்]]
# [[நைனித்தால் மாவட்டம்|நைனித்தால்]]
# [[உதம்சிங் நகர் மாவட்டம்|உதம்சிங் நகர்]]
 
 
இந்த மாநிலத்தில் மொத்தமாக 78 வட்டங்களும், 95 மண்டலங்களும், 7541 ஊராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தில் 16,826 கிராமங்களும், 86 நகரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவை ஐந்து நகரங்கள்: மட்டுமே. இந்த மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 70 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.<ref>[http://nidm.gov.in/pdf/dp/Uttara.pdf About Uttarkhand - National disaster risk reduction portal by Government of India]</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 10,086,292 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5,137,773 மற்றும் பெண்கள் 4,948,519 ஆகவும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 963 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 189 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 78.82 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 87.40 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.01 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,355,814 ஆக உள்ளது.
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பத்தாண்டுகளில் 18.81% ஆக உள்ளது.<ref> http://www.census2011.co.in/census/state/uttarakhand.html </ref>
 
===சமயம்===
இம்மாவட்டத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள்தொகை 8,368,636 ஆகவும், [[இசுலாம்| இசுலாமியர்]] மக்கள்தொகை 1,406,825 ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள்தொகை 37,781 ஆகவும், [[சீக்கியம்|சீக்கியர்களின்]] மக்கள்தொகை 236,340 ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள்தொகை 14,926 ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள்தொகை 9,183 ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் 11,608 ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 993 ஆக உள்ளது.
 
==2013ஆம் ஆண்டு பெருமழை வெள்ள அழிவுகள்==
சூன் மாதம், 2013ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் பெய்த தொடர் பெருமழையால் இம்மாநில ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடியதால், ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், ருத்ரபிரயாக்,பத்ரிநாத் மற்றும் கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி போன்ற புனித இடங்களில் இருந்த பக்தர்களில் பலரும் இறந்தனர். மேலும் [[கேதார்நாத்துக் கோயில்]] முக்கிய கோயில் தவிர அதன் சுற்றுபுறக் கட்டிடங்கள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. நான்கு புனித இடங்கள் என்று சொல்லக்கூடிய [[பத்ரிநாத் கோயில்]], [[கேதார்நாத்துக் கோயில்]], கங்கோத்திரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு செல்லும் தரைவழிச் சாலைகள் நிலச்சரிவுகளால் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதால், இனி பக்தர்கள் இப்புனித கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபட செய்ய இன்னும் மூன்று ஆண்டு காலம் ஆகும் என உத்தர்காண்ட் மாநில அரசு நிர்வாகம் அறிவித்தது.
கேதார்நாத் சிவபெருமான் கோயில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு, 2014 மே மாதத்தில் திறக்கப்பட்டது.<ref>{{cite news|title=கேதார்நாத் சிவன் கோவில் வழிபாட்டிற்கு திறப்பு | url=http://temple.dinamalar.com/news_detail.php?id=30810}}</ref>.<ref>[http://www.ariviyal.in/2013/07/blog-post.html உத்தரகண்டில் நிகழ்ந்த இமாலயத் தவறு]</ref>
 
===நிவாரணப் பணிகள்===
இந்திய அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் பேலூர் மடத்தை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டது. தலைமை மடத்தின் வழிகாட்டுதலுடன் ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமம், கங்கல் (ஹரித்வார்) பரந்த நிவாரணப் பணிகளை ஜூன் 21 லிருந்து, ஆகஸ்டு 4 வரை மேற்கொண்டது.<ref>http://www.rkmkankhal.org/Report-on-Relief-Operations-at-Uttarakhand.pdf</ref>
 
==இதனையும் காண்க==
* [[உத்தராகண்டம் மாவட்டங்களின் பட்டியல்]]
* [[உத்தராகண்டு அரசு]]
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்பு ==
*[http://ua.nic.in/ உத்தராஞ்சல் மாநில அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்]
*[http://www.dinamalar.com/news_detail.asp?id=747329 உத்தர்காண்ட் மாநில வெள்ளம் மீட்புப் பணிகள்]
 
{{இந்தியா}}
 
[[பகுப்பு:உத்தராகண்டம்| ]]
[[பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2644377" இருந்து மீள்விக்கப்பட்டது