லாப்லாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
*உரை திருத்தம்*
வரிசை 3:
லாப்லாந்து (Lapland): லாப்லாந்து ஒரு தனிநாடு அல்ல. நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளின் வடபகுதியிலும், வெண்கடலையொட்டியுள்ள ரஷ்யப் பகுதியிலும் லாப் என்ற இன மக்கள் வாழ்கிறார்கள். லாப் மக்கள் வாழும் இப்பகுதிகள் யாவும் சேர்ந்து லாப்லாந்து என வழங்கப் படுகிறது. லாப் மக்களின் எண்ணிக்கை சுமார் 33,000. இவர்களுக்குத் தனிமொழி உண்டு. வட துருவத்திற்கு அருகிலிருப்பதால் இங்குக் குளிர் மிகுதியாக இருக்கும். குளிர் காலத்தில் சூரியனையே பார்க்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் லாப் மக்களின் வாழ்க்கைக்கு உதவியாக இருப்பது [[துருவ மான்|துருவ மான் அல்லது பனிமான்]] (Reindeer). பனிமான் பால் கொடுக் கிறது. அதன் இறைச்சியையும் இவர்கள் உண்பர். பனி மானின் தோலினால் ஆடை களும், காலணிகளும், தங்கியிருப்பதற்குக் கூடாரங்களும் செய்து கொள்கிறார்கள். பனியில் சறுக்கிச் செல்லக்கூடிய சறுக்கு வண்டிகளை (Sledge) இழுத்துச் செல்வதும் பனிமான்களே.
பனிப் பிரதேசத்தில் வளரும் சிறு தாவரங்கள் பனிமானின் உணவு. எனவே இவை வளரும் மேய்ச்சல் பகுதிகளை நோக்கி லாப் மக்கள் நாடோடிகளாகச் சென்றுகொண்டிருப்பார்கள். மீன் பிடித்தல் இவர்களுடைய மற்றொரு முக்கியத் தொழில்.
இப்பொழுது சில இடங்களில் இரும்புத்[[இரும்பு]]த் தாது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்குச் சாலைகளும்[[சாலை]]களும், புகைவண்டிப்[[புகைவண்டி]]ப் பாதையும் அமைத்திருக்கின்றனர். லாப் மக்களுக்குக் கல்வியும்[[கல்வி]]யும், மின்சாரம்மின்சார[[மின்சாரம்|மின்சார]] வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இவர்களில் சிலர் நிலையாகத் தங்கி வாழத் தொட்ங்கியுள்ளனர்.
{{Reflist}}
<ref>https://en.wikipedia.org/wiki/Lapland</ref>
"https://ta.wikipedia.org/wiki/லாப்லாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது