பிள்ளைக் கனியமுது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
திருத்தம்
வரிசை 30:
 
==கதைச்சுருக்கம்==
சச்சிதானந்தம் ,வெளியில் ஒரு நல்ல மனிதராக தோன்றினாலும், உண்மையில் அவர் ஒரு சுயநலவாதி. அவர் தனது பணியாளரான முனியனின் மகள் முத்தமமா மீது ஒரு கண் வைத்துள்ளார். முத்தம்மா அதே வீட்டில் உள்ள தோட்டக்காரர் முருகனை நேசிக்கிறாள். அவர்களது திருமண வாழ்க்கை பற்றி கனவு காண்கிறார்கள், அவர்கள் இருவரும் தங்கள் முதல் குழந்தைக்கு "பாபு" என்று பெயரிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். சச்சிதானந்தம் தான் நடத்திய மோகனாவின் நடன நிகழ்ச்சிக்குப் பிறகு, தனது விருந்தினர் இல்லத்தில் தங்கும்படி அவளை அழைக்கிறார். அவளும் ஒப்புக்கொள்கிறாள். அவளுடைய தேவைகளை கவனிக்க முருகன் நியமிக்கப்படுகிறான்.
 
சச்சிதானந்தம் முத்தம்மாவை தொந்தரவு செய்ய முயற்சிக்கிறார், ஆனால் சச்சிதானந்தத்தின் மனைவி குணவதியால் முத்தம்மா காப்பாற்றப்படுகிறாள். இதற்கிடையே மோகனாவும் முருகனும் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். சச்சிதானந்தம் முத்தம்மாவை கடத்திக்கொண்டு வரும்போது, ஏற்படும் சூழ்நிலையால், முனியன் இறந்து விடுகிறார். முத்தம்மா அனாதையாகிறாள். முருகன், மோகனா இருவருக்கும் நடந்த மோதலில் மோகனா இறந்துவிடுகிறார். முருகனுக்கு ஏற்படும் ஒரு விபத்தில் கண்பார்வை போய்விட மகனுடன் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். இறுதியில் முத்தம்மா முருகனை சந்தித்து அவனுடன் வாழ்க்கையைத் தொடர்வதாக மீதமுள்ள கதை முடிகிறது.<ref>{{Cite book|title=Pillai Kaniyamudhu Song Book|publisher=Eveready Press, Chennai-17}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிள்ளைக்_கனியமுது" இலிருந்து மீள்விக்கப்பட்டது