பாதாள பைரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
திருத்தம்
வரிசை 33:
உஜ்ஜைனியின் மஹாராணி தன் மகள் இந்துமதியை (இந்து) தன் தம்பி சூரசேனாவிற்கு திருமணம் செய்ய விரும்புகிறார். தம்பி சூரசேனாவோ மிகவும் பயந்த, நிலையற்ற மனநிலை கொண்டவன். அவ்வாறாக சூரசேனா பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், தோட்ட ராமுடு அவனை அடித்து விடுகிறான். அதனால், அரசருக்கு முன்னால் வரவழைக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்படுகிறது. ராமுடுவின் மரண தண்டனை நிறைவேற்ற ஒரு தினத்திற்கு முன்பு, அரசு காவலை மீறி மிக ரகசியமாக தப்பித்து இந்துமதியை சந்தித்து தன் காதலை வெளிப்படுத்துகிறான் ராமுடு. ஒரு தீய மந்திரவாதியிடம் இருந்து இந்துவை காப்பாற்ற ஒரு தைரியமான ஆண்மகனால் மட்டுமே முடியும் என்று ஜோசியர் கூறியது ராஜாவின் நினைவிற்கு வந்தது. அதனால், ராமுடு இந்துவை திருமணம் செய்ய உஜ்ஜைனி ராஜாவிடம் உள்ள சொத்து அளவிற்கு ராமுடு சம்பாதித்தால் அவளை மணக்கலாம் என்று ராஜா சவால் விடுகிறார். அதை ராமுடு ஒப்புக்கொள்ள, விடுதலை செய்யப்படுகிறான்.
 
தெருவில் மாயாஜாலம் செய்யும் ஒரு நேபாள மந்திரவாதியை ராமுடு சந்திக்கிறான். ஒரு தைரியமான புத்திசாலி ஆண் மகனை பலி கொடுத்தால் கேட்ட வரம் தரும் சிலையை தருவதாக பாதாள பைரவி வாக்கு தந்திருந்தாள். ராமுடுவை பலி கொடுக்க முடிவுசெய்தேன்முடிவுசெய்கிறான் அந்த மந்திரவாதி. அந்த சமயம் புனித நீராடச் சென்ற ராமுடு, குளத்தில் முதலை ஒன்றை சண்டையிட்டு கொல்ல, சாபம் நீங்கி அது ஒரு பெண்ணாக மாறி மந்திரவாதியின் பலி திட்டத்தை ராமுடுவிற்கு சொல்லியது. அதை மனதில் வைத்துக்கொண்டு, பலிக்கு முன்னால், ராமுடு அந்த மந்திரவாதியை பலி கொடுத்து வரம் தரும் சிலையை பெற்று இந்துவை மணக்க வேண்டிய செல்வத்தையும் பெற்றுவிடுகிறான். அதனை அறிந்த ராஜா, தான் கொடுத்த வாக்குப்படி திருமணம் செய்து வைக்க முடிவுசெய்கிறார்.
 
மந்திரவாதியின் உதவியாள் சடஜப்பா சஞ்சீவனியின் உதவியால் தன் குரு மந்திரிவாதியை மீண்டும் உயிர் பெரும் படி செய்கிறான். உயிர் பெற்ற மந்திரவாதி, தற்கொலை செய்யப்போகும் சூரசேனனை அவன் அந்த சிலையை கொண்டுவந்து கொடுத்தால் இந்துவும் செல்வமும் கிடைக்கும் என்றுவாக்குத் தருகிறான். அதனை ஒப்புக்கொண்டு தந்திரம் செய்து அந்த சிலையை திருடிவந்து மந்திரவாதியிடம் சூரசேனன் கொடுத்ததால் ராமுடுவின் செல்வம் அனைத்தும் மறைந்துபோயின. செல்வத்தை மீட்டுவருவதாக சபதம் செய்து, அஞ்சியுடன் மந்திரவாதியின் குகையை தேடித் செல்கிறான் ராமுடு.
 
அவர்கள் குகையை தேட சென்றிருக்க, மந்திரவாதி தன்னை திருமணம் செய்ய இந்துவை வற்புறுத்துகிறான். ஒப்புக்கொள்ளாதால், சிலையின் உதவியுடன் ராமுடுவை குகைக்கு வரவழைத்து இந்துவிற்கு முன்னால் துன்புறுத்தப்படுகிறான் ராமுடு. சடஜப்பா போல் வேடம் பூண்ட அஞ்சி, மந்திரவாதி தன் தாடியை சவரம் செய்தால் இந்து திருமணத்திற்கு ஒப்புக்கொள்வாள் என்றான். தாடியை எடுக்க, அனைத்து சக்தியையும் இழந்தான் மந்திரவாதி. சிலை யாருக்கு கிடைத்தது? இந்துவை யார் திருமணம் செய்தார்? என்ற கேள்விகளுக்கு விடைகாணுதலே மீதி கதையாகும்.
"https://ta.wikipedia.org/wiki/பாதாள_பைரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது