புதுயுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
திருத்தம்
வரிசை 31:
 
==கதை சுருக்கம்==
பேராசிரியர் ரகுநாத் ஒரு சமூக சீர்திருத்தவாதி. அவரின் இளைய சகோதரி செல்லம் ஒரு விதவை. ரகுநாத் தனது மாணவனாகிய சேகருக்கு தனது சகோதரியை மணமுடிக்க திட்டமிடுகிறார். அதனால், சேகரும் செல்லமும் நெருங்கிப் பழகுகின்றனர். அதன் விளைவாக, செல்லம் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடைகிறாள். ரகுநாத் இதை அறியவில்லை. வியாபாரம் செய்வதற்காக சேகருக்கு, ரகுநாத் தனது வீட்டை அடமானம் வைத்து பண உதவி செய்கிறான். சேகர் வியாபாரத்தில் வளர்ந்தவுடன் பணக்காரப் பெண் சித்ராவை மணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். இதை அறிந்த செல்லம் அவனிடம் கெஞ்சுகிறாள். ஆனால் சேகர் அவளைத் தவிர்க்கிறான். ரகுநாத் தன் தங்கைக்காக சேகரிடம் பேசுகிறான். அப்போதும் சேகர் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறான்.
 
ரகுநாத் செல்லம் கர்ப்பவதி என்று அறிந்து அவமானத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். வீடு கடன் கொடுத்தவர்களால் கைப்பற்றப்பட்டது. செல்லம், ரகுநாத்தின் மகன் விநோதனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சிறிய வீட்டில் வசிக்கும் முருகன் மற்றும் வள்ளி இவர்களுக்கு ஆதரவு அளித்தனர். செல்லத்திற்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு புஷ்பா எனப் பெயரிடுகிறாள். புஷ்பாவை முருகன் மற்றும் வள்ளியின் பராமரிப்பில் விட்டுவிட்டு செல்லம் வேலை தேடி அலைகிறாள். வயதான தனவந்தரின் பேரன் ராஜாவைக் கவனித்துக் கொள்ளும் வேலை கிடைக்கிறது. செல்லம் விநோதனையும் ராஜாவையும் வளர்த்து ஆளாக்குகிறாள். அவர்கள் முறையே மருத்துவராகவும், காவல்துறை அதிகாரியாகவும் உள்ளனர். புஷ்பா செவிலியராக இருக்கிறாள்.இதற்கிடையில் சேகர் சித்ராவை மணந்து ஒரு பெண் குழந்தையைப் பெறுகிறான். செல்லம் சேகரைத் தண்டித்தாளா? அவர்கள் வளர்த்த குழந்தைகளின் நிலை என்னவாயிற்று என்பதுடன் இக் கதை முடிவடைகிறது..<ref name=songbook>{{Cite book|title=Pudhu Yugam Song Book|publisher=Chandirasekaran Press, 3 Perumal Mudali Road, Chennai-14|url=https://archive.org/details/PuthuYugam}}</ref>
 
==நடிப்பு மற்றும் படக்குழு==
"https://ta.wikipedia.org/wiki/புதுயுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது