மனிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
}}
 
'''மனித இனம்''' [[இருகாலி|இருகால்]] உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, [[ஹொமினிடீ]] குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இனமாகும். [[மரபணு]]ச் சான்றுகளின்படித் தற்கால மனித இனம் சுமார் 200,000 ஆண்டுகளுக்குமுன், [[ஆப்பிரிக்கா]]வில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த [[மூளை]] உண்டு. இது, [[பண்பியல் பகுப்பாய்வு]] (abstract reasoning), [[மொழி]], [[உண்முக ஆய்வு]], பிரச்சனைகளைத் தீர்த்தல், [[உணர்வு]]கள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமை கொண்டது. இத்தகைய வல்லமை கொண்ட மூளையும், நிமிர்ந்த உடலும் மனித வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. நிமிர்ந்த உடலினால் முன்னுறுப்புக்கள் (கைகள்) இரண்டும், வேறுவேறு வேலைகளைச் செய்வதற்குக் கிடைத்தன. இதனால் மனித இனம், வேறெந்த உயிரினங்களைவிடவும் சிறப்பாகச் செயல்பட முடியும். மனிதர்கள் உலகம் முழுவதும் பரந்து உள்ளனர். [[அன்டார்க்டிக்கா]] தவிர்த்த ஏனைய எல்லாக் [[கண்டம்|கண்டங்களிலும்]] மனிதர் பெருந்தொகையாக வாழ்கின்றனர். ஜூலை 2008 நிலைப்படி, 6.7 [[பில்லியன்|பில்லியனுக்கு]] மேற்பட்ட தொகையில் மனிதர்கள் உலகில் வாழ்கின்றனர். மொத்தமாக ஏழு பில்லியன் சனத்தொகையுடன் மனித இனம் இவ்வுலகில் வாழும் மிகப்பெரிய பாலூட்டி இனங்களுக்குள் ஒன்றாகத் திகழ்கின்றது. மனித இனத்தின் மிகப்பெரிய அளவிலான சனத்தொகை ஆசியாவிலும் (61 %),மீதி சனத்தொகை அமெரிக்கா (14 %),ஆபிரிக்கா (14 %),ஐரோப்பா (11 %) மற்றும் ஓசியானியா (0 .5 %) போன்ற கண்டங்களிலும் வாழ்கின்றனர். மனிதரில், ''ஹோமோ சாப்பியென்சுசேப்பியென்சு சாப்பியெசுசேப்பியெசு'' எனும் ஒரு துணையினம் மட்டுமே உள்ளது.
 
பெரும்பாலான உயர்நிலை உயிரினங்களைப் போலவே, மனிதனும் ஒரு சமூக விலங்கு ஆவான். மனிதர் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளல் என்பவற்றுக்காகவும் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்கள் பல சிக்கலான [[சமூக அமைப்பு]]க்களை உருவாக்கியுள்ளனர். இவற்றுள் [[குடும்பம்|குடும்பங்கள்]] தொடக்கம் [[நாடு]]கள் வரையான அமைப்புகள் அடங்குகின்றன. மனிதர்களிடையேயான சமூகத் தொடர்புகள், பெருமளவுக்கு வேறுபடுகின்ற மரபுகள், சடங்குகள், நெறிமுறைகள், விழுமியங்கள், சமூக நெறிகள், சட்டங்கள் போன்றவற்றை உருவாக்கியுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/மனிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது