"குணசீலம் ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாஜலபதி ஸ்வாமி திருக்கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அடையாளம்: 2017 source edit
== குணசீலம் ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாஜலபதி ஸ்வாமி திருக்கோயில் ==
 
தால்பிய மஹரிஷியின் சிஷ்யரான குணசீலர் நீலிவனம் எனப்படும் (தற்போது திருப்பைஞ்றீலி என அழைக்கப்படுகிறது) வனத்தில் அமைந்துள்ள ஆசிரமத்தில் குருநாதருக்கு பணிவிடைகள் செய்து கொண்டு வேதங்களையும், புராணங்களையும், நன்கு கற்றறிந்து வந்தார். ஒரு சமயம் தால்பியார் தமது சிஷ்யர்களுடன் இமயமலைக்குச் சென்று வியாசரை ஸேவித்து விட்டு பின் கங்கை மற்றும் புனித நதிகளில் நீராடி தமது ஆசிரமம் திரும்பும்போது திருவேங்கடமளைக்குச் சென்று அங்கு மிகுந்த ஆச்சர்யத்துடன் எழுந்தருளியிருக்கும் திருவேங்கடமுடையானை ஸேவித்து நின்றார். குணசீல மஹரிஷியானவர் அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் தமது ஆசிரமத்திற்கு எழுந்தருள வேண்டினார். ஆனால் திருவேங்கடமுடையானோ தம் இந்த கல்பம் முடியும் வரையில் திருமலையில் இருந்து அருள சங்கல்பம் கொண்டுள்ளதால் நீர் உமது ஆசிரமம் சென்று தவம் இயற்றினால் உமது எண்ணம் நிறைவேறும் இதற்கான உபாயத்தை உனது குருநாதரிடம் கேட்டுத் தெரிந்துகொள் என எம்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.
எம்பெருமானின் உத்தரவை தனது குருநாதரிடம் குணசீலர் தெருவிக்க தால்பியரும் அதற்கான உபாயத்தை தெரிவித்தார். புராணத்தில் நடைபெறப் போவது யாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்விதமே உனது தவத்தின் பயனாய் ஸ்ரீ வைகுண்டவாஸுதேவன் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள உமது ஆசிரமத்திற்கு ஸ்ரீதேவியுடன் கூட எழுந்தருளப்போகிறார். ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசன் என்ற திருநாமத்துடன் இந்த கல்பம் முடியும் வரை திவ்யமங்கள விக்ரஹ ஸ்வருபனாய் எழுந்தளியிருந்து. பக்தா பீஷ்டத்தை பூர்த்தி செய்து கொண்டு நித்யவாஸம் செய்யப்போகிறார். ஆகவே நீர் உமது ஆசிரமம் சென்று தவம் இயற்றுவாயாக என ஆசி வழங்கினார்.
குணசீல மஹரிசியானவர் மிகுந்த சந்தோஷத்துடன் தமது ஆசை நிறைவேறப் போவதான குதூகலத்துடன் குருநாதர் தால்பியரிடம் ஆசிபெற்று காவிரியின் கரையில் அமைந்துள்ள தமது ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார்அங்கு காவேரி நதியில் நீராடி ஸ்ரீ வைகுண்ட வாஸுதேவனை மனதில் தியானம் செய்து தவம் இயற்றலானர். கோடைகாலத்தில் பஞ்சாக்னி மத்தியிலும், குளிர்காலத்தில் ஈர வஸ்திரத்துடனும், மழைக் காலத்தில் ஜலத்தில் நின்றுகொண்டும் கடுமையான தவம் மேற்கொண்டார். இவரது தவத்தை பார்த்து தேவர்கள் பயமடைன்தனர். இந்திரன் தமது பதவிக்கு ஆபத்து வருமோ என்று எண்ணி இடி, மழை, காற்று, மின்னல், இவைகளாலும் வேறு பல வழிகளிலும் குனசீலரின் தவத்தை கலைக்க முற்பட்டான். ஆனால் இவைகளினால் குனசீலரின் தவத்தை கலைக்க இயலவில்லை. இந்திரன் முதலான தேவர்கள் குனசீலரின் தவம் குறித்து அறிய பிரம்மாவை வணங்கி நின்றனர். பிரம்மா தமது ஞான திருஷ்டியால் அறிந்து குணசீலர் வைகுண்ட வாஸுதேவனைக் குறித்து தவம் இயற்றுகிறார். தமது ஆசிரமத்திற்கு எழுந்தருளி நித்ய வாஸம் செய்ய வேண்டும் என்ற பிராத்தனையுடன் மிகவும் குதூகலத்துடன் தவம் இயற்றுகிறார். ஆதலால் உங்களால் அவருக்கு ஆக வேண்டியது ஏதுமில்லை நீங்கள் பயப்பட வேண்டாம் என பிரம்மா உரைத்தார். இதனைக் கேட்டு இந்திராதி தேவர்கள் பிரம்மாவை வணங்கி விடை பெற்றனர்.பிரம்மண்டங்களைத் தாண்டி விரஜா நதியின் அண்மையில் கோடி சூரிய பிரகாசத்துடன் கூடிய விமானத்தளங்களுடனும், ரத்தினங்களால் இழைக்கப்பெற்ற தூன்களுடனும் விளங்கும் ஸ்ரீ வைகுண்டத்தில் ஸனகாதி முனிவர்களாலும், நாரதரும் முனிவர்களும் போற்ற ஆதிசேஷன் மேல் ஸ்ரீதேவி, பூதேவிஸமேதராய் வீற்றிருக்கும் எம்பெருமான் ஸ்ரீ வைகுண்ட வாஸுதேவன் தன்னையே எண்ணித் தவம் புரிந்து வரும் குணசீல மஹரிஷிக்கு காட்சியளிக்க எண்ணி ஸ்ரீதேவியுடன் கூட வேதரரூபியான கருடன் மேல் ஆரோஹணிந்து வைகுண்டத்தை விடுத்து விரஜாநிதியைத் தாண்டி ப்ரம்மாண்டங்களை அடுத்து மஹாமேருபர்வத்தையும் இமயமலை, விந்தியமலை, முதலிய பர்வந்தங்களை பார்த்துக்கொண்டு காவேரி நதியின் அழகிய கரையில் அமைந்துள்ள குனசீலரது ஆசிரமத்திற்கு எழுந்தருனினார்.எம்பெருமானின் வருகையை முன்னமே அறிந்த பிரம்மா சரஸ்வதியுடன் கூட ஹம்ஸாரூடராகவும், சிவன் பார்வதியுடன் கூட ரிஷபாரூடராகவும் இந்திராதேவி தேவர்கள், ஸனகாதி முனிவர்கள், நாரதர் தும்புரூ, கந்தர்வர்கள், கின்னர்கள் கிம்புருஷர்கள், யக்ஷர்கள், ஸாக்கியர்கள், சாரணர்கள் முதலியவர்களும் தல்பியார் தமது சிஷ்யர்களுடன் குணசீலராசிரமத்தில் குழுமியிருந்தனர்.
253

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2657080" இருந்து மீள்விக்கப்பட்டது