தென்சு சில்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Tansu Çiller" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
(edited with ProveIt)
வரிசை 1:
 
{{Infobox officeholder|name=Tansu Çiller|office=[[List of Prime Ministers of Turkey|22nd]] [[Prime Minister of Turkey]]|image=(Tansu Çiller) Rueda de prensa de Felipe González y la primera ministra de Turquía. Pool Moncloa. 16 de noviembre de 1995 (cropped).jpeg|caption=Madrid, November 1995|deputy=[[Murat Karayalçın]]<br>[[Hikmet Çetin]]<br>[[Deniz Baykal]]|predecessor=[[Süleyman Demirel]]|president=[[Süleyman Demirel]]|successor=[[Mesut Yılmaz]]|signature=Signature of Tansu Ciller.svg|office2=[[List of Ministers of Foreign Affairs (Turkey)|36th]] [[Minister of Foreign Affairs (Turkey)|Minister of Foreign Affairs]]|predecessor2=[[Emre Gönensay]]|primeminister2=[[Necmettin Erbakan]]|party=[[Democrat Party (Turkey, current)|True Path Party]]|office1=[[Deputy Prime Minister of Turkey]]|predecessor1=[[Nahit Menteşe]]|primeminister1=[[Necmettin Erbakan]]|successor1=[[İsmet Sezgin]]|successor2=[[İsmail Cem]]|birth_date={{birth date and age|1946|5|24|df=y}}|birth_place=[[Istanbul]], [[Turkey]]|death_date=|death_place=|spouse=Özer Uçuran Çiller|alma_mater=[[University of New Hampshire]]<br>[[University of Connecticut]]<br>[[Yale University]]|termstart=25 June 1993|termend=6 March 1996|termstart1=28 June 1996|termend1=30 June 1997|termstart2=28 June 1996|termend2=30 June 1997}} '''டான்சு சில்லர்''' ( துர்க்கி: பிறப்பு: 24 மே 1946) ஒரு [[துருக்கிய மக்கள்|துருக்கிய]] கல்வியாளரும், பொருளியல் அறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். அவர் 1993 முதல் 1996 வரை துருக்கியின் 22 வது பிரதமராகப் பணியாற்றினார். இவர் துருக்கியின் ஒரே பெண் பிரதமர் ஆவார்.<ref name="Turky">{{cite web | url=https://www.britannica.com/biography/Tansu-Ciller | title=Tansu Çiller | publisher=Encyclopaedia Britannica | work=The Editors of Encyclopaedia Britannica | date=Jan 1, 2019 | accessdate=16 பெப்ரவரி 2019}}</ref> உண்மைப் பாதை கட்சியின் தலைவர் என்ற முறையில், அவர் துருக்கிய துணை பிரதமராகவும் 1996 முதல் 1997 வரை துருக்கியின் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார் .
 
[[பொருளியல்]] பேராசிரியரான, சில்லர் 1991 இல் பிரதமமந்திரி சுலைமான் டெமிரல் அமைச்சரவையில் [[துருக்கியின் பொருளாதாரம்|பொருளாதாரப்]] பொறுப்போடு கூடிய மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டில் டெமிரெல் துருக்கியின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ,சில்லர் உண்மைப்பாதை கட்சியின் தலைவராகவும் அதே நேரம் பிரதம அமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்..
வரிசை 10:
1994 உள்ளூர் தேர்தல்களில் வெற்றி பெற்ற சிறிது காலத்திற்குள், பெரிய அளவிலான திட்டங்களில் முதலீடு செய்ததும், சில்லரின் நம்பகத் தன்மையில்லாத இலக்குகளைக் கொண்ட வரவு-செலவுத் திட்டமும் [[துருக்கிய லிரா]] மற்றும் வெளிநாட்டு நாணய இருப்புக்களை கிட்டத்தட்ட சரியச் செய்துவிட்டன. அடுத்தடுத்த பொருளாதார நெருக்கடி மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு இடையே, அவருடைய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய-துருக்கி சுங்க ஒன்றியத்தில் 1995 இல் கையெழுத்திட்டது.
 
சில்லருடைய அரசாங்கம் 1995 ஆம் ஆண்டு அஜீனிய ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை ஆதரித்தது என்றும், இமா / கார்டாக் தீவுகளின் இறையாண்மையைக் கூறி [[கிரேக்கம் (நாடு)|கிரேக்கத்துடன்]] பதட்டங்களை அதிகரித்தது என்றும் கூறப்பட்டது. 1995 பொதுத்தேர்தலில் இவரது உண்மைப்பாதைக் கட்சி மூன்றாவது வெற்றி பெற்றது எனினும் 1996 இல் நேமெஸ்ட்டின் ஏர்பாக்கன் தலைமையிலான சமூக நலக்கட்சி அமைச்சரவை பொறுப்பேர்க்கும் வரை சில்லர் பிரதமராக பதவியில் நீடித்து இருந்தார். இந்த அமைச்சரவையிலும் சில்லர் துணைப்பிரதமராகவும் வெளிவிவகாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.<ref name="Ciller"/>
 
1996 ல் சுசூர்லக் கார் விபத்து மற்றும் சுசூர்லக் ஊழல் ஆகியவை சில சட்ட நிறுவனங்களுடன் சில்லர் அரசாங்கத்தின் உறவுகளை வெளிப்படுத்தின. அப்துல்லா கட்லி போன்ற தனிநபர்களை ஷில்லர் பணியமர்த்திய விவகாரங்கள் சில்லரின் புகழ் குறைய வழிவகுத்தது. 1997 ஆம் ஆண்டில் எர்பாக்கனின் அரசாங்கம் ஒரு இராணுவநடவடிக்கையைத் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. மீண்டும் 1999 பொதுத் தேர்தலில் சில்லரின் உண்மைப்பாதைக் கட்சி மேலும் சரிந்தது. 2002 பொதுத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பெற்றபோதிலும், இக்கட்சி வாக்குகளில் 10% க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று, பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தது. இது கட்சியின் தலைவராகவும்தலைவமையிலிருந்தும், தீவிரமான அரசியலில் இருந்தும் சில்லர் வெளியேறுவதற்கு வழிவகுத்தது.<ref name="Ciller">{{cite web | url=http://www.allaboutturkey.com/tansu_ciller.htm | title=Tansu Çiller (Istanbul 1946- ) | publisher=www.allaboutturkey.com | accessdate=16 பெப்ரவரி 2019}}</ref>
 
== பின்னணி மற்றும் ஆரம்ப வாழ்க்கை ==
கில்லர் [[இசுதான்புல்|இஸ்தான்புலில்]] 1946 இல் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை முதலில் ஒரு பத்திரிகையாளராகவும் பின்னர் 1950 களில் பிலேஸ்கிக் மாகாணத்தின் துருக்கிய ஆளுனராகவும் இருந்தார். தென்சு குடும்பத்தில் ஒரே குழந்தை ஆவார். அவர் [[இசுதான்புல்|இஸ்தான்புல்லில்]] உள்ள அமெரிக்க பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற பின் , இஸ்தான்புல்லில் ராபர்ட் கல்லூரியில் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பட்டம் பெற்றார். ஐக்கிய அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்குச் சென்ற சில்லர், நியூ ஹாம்சயர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபின் [[கனெடிகட் பல்கலைக்கழகம்|கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில்]] முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அவர் [[யேல் பல்கலைக்கழகம்|யேல் பல்கலைக்கழகத்தில்]] தனது ஆய்வு முனைவர் படிப்பை முடித்தார்.<ref name="Turky"/> 1973 இல்துருக்கி திரும்பும் முன்பு வரை பென்சில்வேனியாவிலுள்ள பிராங்க்ளின் கல்லூரி<ref name="Ciller">{{cite web | url=http://www.allaboutturkey.com/tansu_ciller.htm | title=Tansu Çiller (Istanbul 1946- ) | publisher=www.allaboutturkey.com | accessdate=16 பெப்ரவரி 2019}}</ref> மற்றும் மார்ஷல் கல்லூரியில் பொருளாதாரம் போதித்து வந்தார்.<ref>{{cite web | url=https://biography.yourdictionary.com/tansu-ciller | title=Tansu çiller Facts | publisher=biography.yourdictionary.com | accessdate=16 பெப்ரவரி 2019}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:துருக்கிய அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தென்சு_சில்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது