காவிரி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: ml:കാവേരി is a featured article
No edit summary
வரிசை 34:
==தமிழகத்தில் காவிரியின் போக்கு==
[[படிமம்:BavaniKuuduthurai.jpg|250px|thumb|right|<center>பவானி காவிரியுடன் கூடும் இடம் - பவானி கூடுதுறை</center>]]
மிக குறுகிய அகலமுடைய ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பில்லிகுண்டுவை தாண்டி [[ஒக்கேனக்கல் அருவி|ஒகேனக்கல் அருவியை]] அடைகிறது. பின் காவிரியானது [[மேட்டூர் அணை|மேட்டூர் அணையை]] அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழக காவிரி பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் [[பவானி]] என்னுமிடத்தில் [[பவானி ஆறு]] கலக்கிறது. [[ஈரோடு]] நகரை கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் [[நொய்யல் ஆறு]] கலக்கிறது. அமராவதி ஆறானது [[கரூர்]] அருகேயுள்ள கட்டளை என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்கு பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். [[முசிரிமுசிறி]] & [[குளித்தலை]] நகரங்களை தாண்டிச்செல்லும் காவிரி [[முக்கொம்பு]] என்னும் இடத்தில் [[மேலணை|மேலணையை]] அடைகிறது. இங்கு காவிரி இரண்டு கிளைகளாக பிரிகிறது. ஒரு கிளைக்கு கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்படுகிறது. [[கொள்ளிடம்]] காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம் மற்றும் காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு ([[திருச்சிராப்பள்ளி]]) அருகே [[ஸ்ரீரங்கம்]] (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது [[கல்லணை|கல்லணையை]] அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்கள் & புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை சேர்ந்தவை.
 
==நீர் பங்கீடு ==
"https://ta.wikipedia.org/wiki/காவிரி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது