விஜயநகரக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
 
இவை தவிர, மதில்களுக்குள் கருவறையைச் சுற்றிய கூரையிடப்பட்ட திருச்சுற்று, [[மகாமண்டபம்]] எனப்படும் தூண்களோடு கூடிய பெரிய மண்டபம், [[கல்யாண மண்டபம் (கோயில்)|கல்யாண மண்டபம்]], [[திருக்குளம்]] என்பனவும் இக் காலக் கோயில்களின் கூறுகள் ஆயின. இக் காலத் தூண்களின் ஒரு புறத்தில், அவற்றோடு ஒட்டியபடி நிமிர்ந்த நிலையில் [[யாளி]]கள், முதுகில் வீரர்கள் இருக்க, இரண்டு கால்களில் பாய்ந்தபடி நிமிர்ந்து நிற்கும் [[குதிரை]]கள் ஆகியவற்றின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தூணின் மறு பக்கங்களில் இந்துப் [[பழங்கதை]]களை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். யாளிகள், குதிரைகள் போன்றவை இல்லாத தூண்கள் சதுர வடிவாக அமைந்து அவற்றில் பழங்கதைகளை அடிப்படையாகக் கொண்ட அழகூட்டல்கள் காணப்படும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[திராவிடக் கட்டிடக்கலை ஒழுங்கு]]
* [[இந்தியக் கட்டிடக்கலை]]
* [[வட இந்தியக் கட்டிடக்கலை]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/விஜயநகரக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது