நினைவுச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
நினவுச் சின்னங்கள் குறித்த சமூகக் கருத்து அல்லது பொருள் சிலவேளைகளில் ஒன்றுபோலவோ, நிலையானதாகவோ அல்லது தெளிவானதாகவோ இருப்பதில்லை. இவை வெவ்வேறு சமூகக் குழுக்களால் வேறு வேறு விதங்களாகப் பார்க்கப்படுவது உண்டு. ஒரு பிரிவினருக்கு [[வெற்றி]]ச் சின்னமாக இருப்பது இன்னொரு பிரிவினருக்கு ஆக்கிரமிப்பின் சின்னமாக இருக்கக்கூடும். ஒரு குழுவினர் [[விடுதலை]]யின் சின்னமாகப் பார்ப்பதை வேறொரு குழுவினர் புது [[அடிமைத்தனம்|அடிமைத்தனத்தின்]] சின்னமாக உணரக்கூடும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பேர்லின் நகரைப் பிரித்து அமைக்கப்பட்ட [[பேர்லின் சுவர்]], [[கிழக்கு ஜேர்மனி]]யின் ஆதரவாளரால், மேற்குலக அரசியல் தத்துவங்களில் இருந்தான ஒரு பாதுகாப்புச் சுவராகப் பார்க்கப்படும் அதேவேளை, [[மேற்கு நாடு]]களின் ஆதரவாளர் அதனை ஒரு பாசிசத்தினதும், [[அடக்குமுறை]]யினதும் சின்னமாகப் பார்க்கின்றனர். பண்டைக்காலத்தின் வியக்கத்தக்க [[கட்டிடக்கலை]]ச் சாதனையின் நினைவுச் சின்னங்களாகக் கருதப்படும் எகிப்தின் பிரமிட்டுகள், [[தஞ்சைப் பெரிய கோயில்]] போன்றவற்றை அக்காலத்து அடிமை முறை, அடக்குமுறை போன்றவற்றின் சாட்சியங்களாகப் பார்க்கும் பிரிவினரும் உள்ளனர்.
 
[[image:Statue_of_Liberty_frontal_2.jpg|thumb|200px|அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை]]
நினைவுச் சின்னங்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே உருவாக்கப்பட்டு வருவதுடன், அவையே நீண்டகாலம் உழைக்கக் கூடியனவாகவும், பண்டைக்காலப் பண்பாடுகளின் புகழ்பெற்ற குறியீடுகளாகவும் விளங்குகின்றன. எகிப்தின் [[பிரமிட்டு]]கள், கிரேக்கப் [[பார்த்தினன்]], தமிழ்நாட்டுக் கோபுரங்கள் என்பன அந்நந்தப் பண்பாடுகளுக்கான குறியீடுகளாகத் திகழ்கின்றன. அண்மைக் காலங்களில், பாரிய அளவு கொண்ட அமைப்புக்களான, அமெரிக்காவின் [[சுதந்திரதேவி சிலை]], பிரன்சின் [[ஈபெல் கோபுரம்]] என்பவை நாடுகளின் குறியீடுகளாக மாறிவிட்டன.
 
"https://ta.wikipedia.org/wiki/நினைவுச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது