நினைவுச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
[[படிமம்:GreatWall 2004 Summer 4.jpg|thumb|200px|சீனப் பெருஞ் சுவர்]]
செயற்பாட்டுக்குரிய அமைப்புக்கள் அவற்றின் பழமை, [[பருமன்]], வரலாற்று முக்கியத்துவம் என்பன காரணமாக நினைவுச் சின்னங்களாகக் கருதப்படுவது உண்டு. [[சீனப் பெருஞ் சுவர்]] அதன் பழமை, அளவு என்பவற்றினால் ஒரு நினைவுச் சின்னமாகப் போற்றப்படுகிறது. [[பிரான்ஸ்|பிரான்சில்]] உள்ள [[ஓராதூர்-சர்-கிளான்ஸ்]] என்னும் ஊர் அங்கு இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுக்காக நினைவுச் சின்னமாகக் கருதப்படுகிறது. வரலாற்று அல்லது அரசியல் தகவல்களை உணர்த்துவதற்காகவும் நினைவுச் சின்னங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இவை சமகால அரசியல் பலத்தின் முதன்மை நிலையை வலுப்படுத்துவதற்கும் பயன்படுவது உண்டு. பல்வேறு வெற்றித் தூண்கள், முன்னாள் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] அமைக்கப்பட்ட [[லெனின்]] சிலைகள் போலப் பல நாடுகளில் அமைக்கப்படும் அரசியல் தலைவர்களது சிலைகள் என்பன இவ்வகையைச் சார்ந்தவை.
 
==நோக்கு வேறுபாடுகள்==
[[Image:thanjavur temple.jpg|thumb|left|150px|இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள 11 ஆம் நூற்றாண்டு இந்துக் கோயிலான தஞ்சைப் பெரிய கோயில்]]
நினவுச் சின்னங்கள் குறித்த சமூகக் கருத்து அல்லது பொருள் சிலவேளைகளில் ஒன்றுபோலவோ, நிலையானதாகவோ அல்லது தெளிவானதாகவோ இருப்பதில்லை. இவை வெவ்வேறு சமூகக் குழுக்களால் வேறு வேறு விதங்களாகப் பார்க்கப்படுவது உண்டு. ஒரு பிரிவினருக்கு [[வெற்றி]]ச் சின்னமாக இருப்பது இன்னொரு பிரிவினருக்கு ஆக்கிரமிப்பின் சின்னமாக இருக்கக்கூடும். ஒரு குழுவினர் [[விடுதலை]]யின் சின்னமாகப் பார்ப்பதை வேறொரு குழுவினர் புது [[அடிமைத்தனம்|அடிமைத்தனத்தின்]] சின்னமாக உணரக்கூடும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பேர்லின் நகரைப் பிரித்து அமைக்கப்பட்ட [[பேர்லின் சுவர்]], [[கிழக்கு ஜேர்மனி]]யின் ஆதரவாளரால், மேற்குலக அரசியல் தத்துவங்களில் இருந்தான ஒரு பாதுகாப்புச் சுவராகப் பார்க்கப்படும் அதேவேளை, [[மேற்கு நாடு]]களின் ஆதரவாளர் அதனை ஒரு பாசிசத்தினதும், [[அடக்குமுறை]]யினதும் சின்னமாகப் பார்க்கின்றனர். பண்டைக்காலத்தின் வியக்கத்தக்க [[கட்டிடக்கலை]]ச் சாதனையின் நினைவுச் சின்னங்களாகக் கருதப்படும் எகிப்தின் பிரமிட்டுகள், [[தஞ்சைப் பெரிய கோயில்]] போன்றவற்றை அக்காலத்து அடிமை முறை, அடக்குமுறை போன்றவற்றின் சாட்சியங்களாகப் பார்க்கும் பிரிவினரும் உள்ளனர்.
 
 
நோக்கு வேறுபாடுகளின் காரணமாக, நாடுகளின் வெற்றி, தோல்வி; அரசியல் அதிகார மாற்றங்கள்; சமயங்களின் எழுச்சி, வீழ்ச்சி; கருத்தியல் மாற்றம் போன்றவை நினைவுச் சின்னங்களையும் பாதிக்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் அதன் தந்தை எனக் கருதப்பட்ட லெனினின் சிலைகள் அழிக்கப்பட்டமை, ஈராக்கில் [[சதாம் ஹுசைன்|சதாம் ஹுசைனின்]] தோல்வியின் பின் அவரது சிலைகள் உடைக்கப்பட்டமை. என்பன அரசியல் அதிகார மாற்றங்கள் தொடர்பானவை. அண்மையில் [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] [[தாலிபான்]]களின் அதிகாரத்தின் கீழ் பல நூற்றாண்டுகள் பழமையான புத்த பண்பாட்டு நினைவுச் சின்னங்கள் [[பீரங்கி]]கள் கொண்டு உடைக்கப்பட்டமை சமயக் கருத்து வேறுபாடுகள் தொடர்பானது. 14 ஆம் 15 ஆம் நூற்றாண்டுகளில் ஆசியப் பகுதிகளைக் கைப்பற்றிய சில ஐரோப்பிய நாட்டினர் தமது மத வேறுபாடுகள் காரணமாகப் பிற சமய நினைவுச் சின்னங்களை அழித்தனர்.
 
[[image:Statue_of_Liberty_frontal_2.jpg|thumb|150px|அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை]]
"https://ta.wikipedia.org/wiki/நினைவுச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது