நினைவுச் சின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''நினைவுச் சின்னம்''' என்பது, ஒருவரை அல்லது ஒரு முக்கியமான நிகழ்வை நேரடியாக [[நினைவு கூர்தல்|நினைவு கூர்வதற்காக]] அமைக்கப்படுகின்ற ஒரு அமைப்பாகவோ அல்லது ஒரு சமூகத்தினருடைய கடந்தகால நிகழ்வுகளின் நினைவுகளாக அமையும் ஒரு அமைப்பாகவோ இருக்கலாம். ஒரு [[நகரம்|நகரத்தின்]] அல்லது ஒரு இடத்தின் அழகை மேம்படுத்துவதற்காக இவை பயன்படுகின்றன. [[வாஷிங்டன் டி. சி.]], [[புதுடில்லி]], [[பிரேசிலியா]] போன்றவை உள்ளிட்ட உலகின் பல நகரங்கள் நினைவுச் சின்னங்களைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. ஜார்ஜ் வாஷிங்டனுடன் தொடர்பு படுத்தப்படுவதற்கு முன்னரே, நகரின் பொது இடங்களை ஒழுங்கமைக்கும் நோக்கில் [[வாஷிங்டன் நினைவுச் சின்னம்|வாஷிங்டன் நினைவுச் சின்னத்தின்]] அமைவிடம் பற்றிய எண்ணம் உருவானது. பழமையான நகரங்களில் நினைவுச் சின்னங்கள் ஏற்கெனவே முக்கியமான இடங்களிலேயே அமைந்திருக்கும். சில வேளைகளில் குறிப்பிட்ட நினைவுச் சின்னங்களைக் குவியமாக வைத்துப் பழைய நகரங்கள் மீள்வடிவமைப்புச் செய்யப்படுவதும் உண்டு. பொதுவாக, நினைவுச் சின்னங்கள் அவற்றின் சூழலில் இருந்து வெளிப்பட்டு நிற்பதற்காக அளவில் பெரியவையாக அமைக்கப்படுவது உண்டு.
 
==நினைவுச் சின்ன உருவாக்கம்==
[[படிமம்:GreatWall 2004 Summer 4.jpg|thumb|200px|சீனப் பெருஞ் சுவர்]]
செயற்பாட்டுக்குரிய அமைப்புக்கள் அவற்றின் பழமை, [[பருமன்]], வரலாற்று முக்கியத்துவம் என்பன காரணமாக நினைவுச் சின்னங்களாகக் கருதப்படுவது உண்டு. [[சீனப் பெருஞ் சுவர்]] அதன் பழமை, அளவு என்பவற்றினால் ஒரு நினைவுச் சின்னமாகப் போற்றப்படுகிறது. [[பிரான்ஸ்|பிரான்சில்]] உள்ள [[ஓராதூர்-சர்-கிளான்ஸ்]] என்னும் ஊர் அங்கு இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுக்காக நினைவுச் சின்னமாகக் கருதப்படுகிறது. வரலாற்று அல்லது அரசியல் தகவல்களை உணர்த்துவதற்காகவும் நினைவுச் சின்னங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இவை சமகால அரசியல் பலத்தின் முதன்மை நிலையை வலுப்படுத்துவதற்கும் பயன்படுவது உண்டு. பல்வேறு வெற்றித் தூண்கள், முன்னாள் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] அமைக்கப்பட்ட [[லெனின்]] சிலைகள் போலப் பல நாடுகளில் அமைக்கப்படும் அரசியல் தலைவர்களது சிலைகள் என்பன இவ்வகையைச் சார்ந்தவை.
"https://ta.wikipedia.org/wiki/நினைவுச்_சின்னம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது