படு கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 47:
 
1238 ஆம் ஆண்டின் கோடை காலத்தில் படு கான் கிரிமியத் தீபகற்பத்தைத் தாக்கிக் கடும் சேதம் விளைவித்தார். மோர்டோவியா மற்றும் கிப்சாக்குகளின் கட்டுப்பாட்டில் இருந்த புல்வெளியை வென்றார். 1239 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் செர்னிகோவ் மற்றும் பெரெயஸ்லாவ் ஆகிய பகுதிகளை முற்றுகையிட்டார். பலநாள் முற்றுகைக்குப் பிறகு மங்கோலியர்கள் டிசம்பர் 1240ல் கீவுக்குள் நுழைகின்றனர். ஹலிச்சின் டானிலோ கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தபோதும் படு அந்த நிலப்பரப்பின் 2 முதன்மைத் தலைநகரங்களான ஹலிச் மற்றும் வோலோடிமிர்-வோலின்ஸ் கியி ஆகியவற்றை வென்றார். ருதேனிய குறுநில மன்னர்கள் மங்கோலியப் பேரரசின் கப்பம் கட்டுபவர்களாக ஆகின்றனர்.
 
== நடு ஐரோப்பிய படையெடுப்பு ==
குமன் அகதிகள் ஹங்கேரிய ராஜ்ஜியத்தில் தஞ்சம் அடைகின்றனர். ஹங்கேரியின் மன்னர் நான்காம் பெலாவுக்கு குறைந்தது ஐந்து தூதர்களை படு அனுப்புகிறார் ஆனால் அவர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். கடைசியாக பெலாவை படு குமன்களைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறார். பின்னர் ஒரு எச்சரிக்கையும் விடுக்கிறார்: "உன்னை விட குமன்கள் தப்பிப்பது எளிது... நீ வீடுகளில் வாழ்கிறாய் மற்றும் நிலையான நகரங்கள் மற்றும் கோட்டைகளை கொண்டுள்ளாய், எனவே எப்படி என்னிடம் இருந்து தப்பிப்பாய்"?<ref>Michael Prawdin, Gerard (INT) Chaliand ''The Mongol empire'', p.262</ref> பிறகு "எல்லையில் இருக்கும் கடலை" அடைய படு முடிவு செய்கிறார், அதற்கு மேல் மங்கோலியர்களால் செல்ல முடியாது. எதிர்காலத்தில் தனது பகுதிகளுக்கு ஐரோப்பியர்களால் ஆபத்து வரக்கூடாது என படு நினைத்ததாக தற்கால வரலாற்று ஆசிரியர்கள் ஊகிக்கின்றனர். எனவே தான் தனது படைப்புகளை மேலும் விரிவுபடுத்த முடியும் என்று அவர் நினைத்தார். தனது படைகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திய பிறகு மற்றும் தனது படைகளுடன் தயாரானவுடன் படு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்ற நினைத்தார் என்று பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/படு_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது