யாப்பருங்கலக் காரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
இன்று நமக்குக் கிடைக்கின்ற [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூல்களிலே மிகவும் பழமையான நூலாகிய [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்திலேயே]] யாப்பிலக்கணம் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அதிலே கூறப்பட்டுள்ளவை பல இன்றும் வழக்கில் இருந்துவருகின்றன. இருந்தாலும், பிற்காலத்தில் புழக்கத்துக்கு வந்த [[பாவினம்|பாவினங்களிற்]] சில அக் காலத்தில் இல்லாதிருந்தமையால் தொல்காப்பியத்தில் இவற்றுக்குரிய இலக்கணங்கள் கூறப்படவில்லை. இதனால் பிற்காலத்தில் ஏற்பட்ட [[யாப்பிலக்கணம்|யாப்பிலக்கண]] வளர்ச்சிகளையும் உட்படுத்தி எழுந்த [[யாப்பிலக்கண நூல்கள்|யாப்பிலக்கண நூல்களிலே]] '''யாப்பருங்கலக் காரிகை''' சிறப்பானது.
 
==நூற்பெயர்==
 
இந்நூற் பெயருக்குப் பலர் பல விதமாக விளக்கம் கூறுகின்றனர். [[யாப்பு|யாப்பெனும்]] கடலைக் கடக்கும் [[தோணி]] போன்றது எனப் பொருள்படும் "[[யாப்பருங்கலம்]]" என்னும் நூலுக்கு உரைபோல் அமைந்ததன் காரணமாகவே '''யாப்பருங்கலக் காரிகை''' என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். வேறு சிலர், [[சமண சமயம்]] தொடர்பான [[திரமிள சங்கம்|திரமிள சங்கத்தின்]] உட்பிரிவுகளுள் ஒன்றான அருங்கலான்வயம் எனும் பிரிவைச் சேர்ந்த இந் நூலாசிரியர் தானெழுதிய நூல்களுக்கு யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை எனப் பெயரிட்டிருக்கக் கூடுமெனக் கூறுகின்றனர்கூறுவாரும் உளர்.
 
 
[[பகுப்பு:யாப்பிலக்கணம்]]
"https://ta.wikipedia.org/wiki/யாப்பருங்கலக்_காரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது