ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
ஆண்டியப்பனூர் அணையை சுற்றுலாத்தலமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் ஒன்றாகத் திகழ்கிறது. திருப்பத்தூரில் இருந்து 23 கி.மீ. தொலைவில் இந்த நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. ஜவ்வாது மலையில் இருந்து [[கொட்டாறு]] மற்றும் [[பெரியாறு]] எனும் இரு ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் ஆண்டியப்பனூர் அணையை வந்தடைகிறது. இந்த அணை 112.2 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். அணையின் உயரம் 8 மீட்டர்.
'''[[பயன்பெறும் பகுதிகள்]]'''
ஆண்டியப்பனூர் அணை நிரம்பிய பின் வெளியேறிச் செல்லும் நீர், சின்னசமுத்திரம், வெள்ளேறி, மாடப்பள்ளி ஏரி வழியாகச் சென்று, அங்கிருந்து இரு கிளைகளாகப் பிரிந்து, ஒரு கிளையில் செலந்தம்பள்ளி, கோனேரிக்குப்பம், கம்பளிகுப்பம், முத்தம்பட்டி, ராச்சமங்கலம், பசலிக்குட்டை உள்ளிட்ட ஏரிகள் வழியாகச் சென்று பாம்பாற்றைச் சென்றடைகிறது. அதேபோல், மற்றொரு கிளையாக கணமந்தூர், புதுக்கோட்டை ஏரிகள் வழியாகச் சென்று [[திருப்பத்தூர் பெரிய ஏரி]] நிரம்பி, பின்னர் பாம்பாற்றில் சென்றடைகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த கனமழையில் அனைத்து ஏரிகளும் நிரம்பின. அதேபோல், 2017-18-ஆம் ஆண்டு பெய்த மழையில் திருப்பத்தூர் பெரிய ஏரி ராச்சமங்கலம் ஏரி நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது வாணியம்பாடி வட்டத்துக்கும், திருப்பத்தூர் ஒன்றியத்துக்கும் உள்பட்டதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டியப்பனூர்_ஓடை_நீர்த்தேக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது