சுன்னி இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Hammadh407ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2600433 Kanags (talk) உடையது. (மின்)
வரிசை 4:
== வரலாறு ==
 
[[இசுலாம்|இஸ்லாம்]] மதத்தை மக்களிடையே பரப்பிய [[முகம்மது நபி]], அதன் பொருட்டு இன்றைய [[சவூதி அரேபியா]]வில் உள்ள [[மதீனா]] நகரை தலைநகராக கொண்டு ஒரு இஸ்லாமியப் பேரரசை நிறுவினார். அந்த பேரரசை மிக திறம்பட ஆட்சி செய்த அவர்கள் 632-ம் ஆண்டு காலமானார். அதன் பிறகு அந்த அரசை யார் நிர்வகிப்பது என்ற கேள்வி எழுந்தது. அப்போது [[அபூபக்கர்]] என்பவர், மற்ற முஸ்லிம்களால் முழுமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் [[முகம்மது நபி|முகம்மது நபிக்கு]] மிகவும் பிரியமான நண்பரும், பெண் கொடுத்த மாமனாரும் ஆவார். மேலும் முகம்மது நபியின் வாழ்நாளிலேயே, அனைத்து இடங்களிலும் அவருக்கு அடுத்த அதிகாரத்தில் இருந்தது இவரே ஆகும். இவரே முஸ்லிம்களின் முதல் [[கலிபா|கலீபா]] ஆவார். இவருக்கு பிறகு மற்றொரு மாமனாரான [[உமர்]] என்பவர் இரண்டாவது [[கலீபா]]வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<br />
[[படிமம்:Map of expansion of Caliphate.svg|375px|left|thumbnail|கலீபாக்களின் கீழ் இஸ்லாமிய பேரரசு{{legend|#a1584e|[[முகம்மது நபி]]யின் கீழ் பேரரசு, 622-632}} {{legend|#ef9070|ராஷிதீன் கலீபாக்கள் கீழ் பேரரசு, 632-661}} {{legend|#fad07d|உமய்யா கலீபாக்கள் கீழ் பேரரசு , 661-750}}]]634-ம் ஆண்டு கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட உமர் அவர்கள், ஒன்பது ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்த நிலையில் 644-ம் ஆண்டு ஆபு லுலுவா என்ற பாரசீகனால் கொல்லப்பட்டார். இதற்கு இடைப்பட்ட அவரது ஆட்சி காலத்தில், அவர் கடைப்பிடித்த கடுமையான சட்டங்களால் அதிருப்தி அடைந்த ஒரு கூட்டத்தினர் இவருக்கு பிறகு முகம்மது நபியின் மருமகன்களில் ஒருவரான [[அலீ]] என்பவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினர். இவர்கள் ஷீஆ அல்-அலி கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர். ஆனால் அலியை விட மூத்தவரான முகம்மது நபியின் மற்றொரு மருமகன் [[உதுமான்]] என்பவர் அடுத்த கலீபாவாக வரவேண்டும் என்று பெரும்பான்மையான முஸ்லிம்கள் விரும்பினர். இதன் பேரில் சிலர் கூடி அலியின் சம்மதத்தோடு உதுமானை மூன்றாவது கலிபாவாக தேர்ந்தெடுத்தனர். பின்பு கடைசியாக உதுமானின் மறைவுக்கு பிறகு அலி நான்காவது கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சுன்னி_இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது