"பல்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,603 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''[[பல்லி]]கள்''' என்பது [[செதிலுடைய ஊர்வன]] [[வரிசை (உயிரியல்)|வரிசையைச்]] சேர்ந்த துணைவரிசை ஆகும். இதில் மொத்தம் 6000 இனங்களுக்கு மேல் உள்ளன. இவை அண்டார்டிகாவை தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் காணப்படுகின்றன.<ref>[http://eduscapes.com/nature/lizard/index2.htm Lizards at eduscape.com]</ref>.
 
பெரும்பாலான பல்லி இனங்கள் நான்கு கால்களைக் கொண்டுள்ளன. மற்ற இனங்கள் பாம்பு போல கால்களற்ற நீளமான உடலைக் கொண்டுள்ளன. காட்டில் வாழும் பறக்கும் பல்லி போன்ற சில இனங்கள் பறக்கும் திறன் பெற்றுள்ளன.
 
கொன்றுண்ணி வகையைச் சேர்ந்த பல்லிகள் காத்திருந்து இரையைப் பிடிக்கின்றன. பல்வேறு சிறு பல்லி இனங்கள் பூச்சிகள் போன்றவற்றை உண்கின்றன. கொமடோ டிராகன் போன்ற சில பெரிய பல்லி இனங்கள் நீர் எருமை போன்ற பாலூட்டிகளைக் கொன்று உண்கின்றன.
 
பல்லிகள் தங்கள் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க நஞ்சு, உருமாறும் திறன், தன்னிச்சையான இரத்தப்போக்கு, இழந்த வாலை மீண்டும் வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தகவமைப்புகளைப் பெற்றுள்ளன.
 
[[படிமம்:Lacertilia cladogram.svg|thumb|left|'''Lacertilia'''-> 2.பல்லிகள் ]]
1,373

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2665228" இருந்து மீள்விக்கப்பட்டது