வெள்ளி (கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
ஒரு.வரி.சேர்த்தல்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 118:
}}
 
'''வெள்ளி''' (''Venus'') [[சூரியக் குடும்பம்|சூரியக்குடும்பத்தில்]] [[சூரியன்|சூரியனிலிருந்து]] இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு [[கோள்|கோளாகும்]]. நம் இரவு வானத்தில் [[நிலா|நிலவுக்கு]] அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது ''காலை நட்சத்திரம்'' , ''விடிவெள்ளி'' மற்றும் ''மாலை நட்சத்திரம்'' என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது கூடுதலான [[பைங்குடில் விளைவு|பைங்குடில் விளைவால்]] ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. வெள்ளி பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் ஆகும்.
 
வெள்ளி [[ஞாயிறு (விண்மீன்)|ஞாயிறை]] ஒவ்வொரு 224.7 [[புவி]] நாட்களில் சுற்றி வருகின்றது.<ref name="nasa_venus">{{cite web | title = Venus: Facts & Figures | publisher = NASA | url = http://sse.jpl.nasa.gov/planets/profile.cfm?Object=Venus&Display=Facts&System=Metric | accessdate = 2015-07-24}}</ref> இக்கோளிற்கு [[இயற்கைத் துணைக்கோள்]] ஏதுமில்லை. ஐரோப்பிய வழக்குகளில் இதற்கு உரோமைத் தொன்மவியலில் அழகிற்கும் காதலுக்குமான பெண்கடவுள் வீனசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்தியத் தொன்மவியலில் அசுரர்களின் குருவான சுக்கிரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியில் இக்கோளின் [[தோற்ற ஒளிப்பொலிவெண்]] −4.6 ஆக உள்ளதால் இதன் ஒளியினால் நிழல்கள் உருவாகும்.<ref>{{cite web|url=http://www.digitalsky.org.uk/venus/shadow-of-venus.html|title=The Shadow of Venus|last=Lawrence|first=Pete|date=2005|accessdate=13 சூன் 2012}}</ref> வெள்ளிக்கோள் புவியிலிருந்து சூரியனை நோக்கிய உட்புறக் கோளாக இருப்பதால் எப்போதுமே சூரியனுக்கு அருகாமையில் இருப்பதாகத் தோன்றுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது