பேய்க்கணவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
}}
 
'''சாக்குக்கணவாய்''' அல்லது '''எண்காலி''' (ஆங்கிலம்: ''Octopus'') என்பது மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த கடல்வாழ் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் உள்ள இனங்கள் அனைத்தும் எட்டு கிளை உறுப்புகளைக் கொண்டுள்ளதால் எண்காலிகள் என்று அழைக்கப்படுகின்றன. தலைக்காலிகள் (cephalopod) வகுப்பில், 300 வகையான எண்காலிகள் உள்ளன என்று கண்டறிந்துள்ளனர். இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
 
எண்காலியின் உடலில் எலும்பு இல்லாததால், மிகச் சிறிய இடுக்குகளிலும் அவற்றால் நுழைந்து வெளிவர இயலும். இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு. எண்காலிக்கு மூன்று [[இதயம்|இதயங்கள்]] உண்டு. இதன் [[குருதி|இரத்தம்]] நீல நிறத்தில் இருக்கும். இதன் இரத்தத்தில் [[செப்பு]] உள்ள [[ஈமோசயனின்]] (hemocyanin) என்னும் [[புரதம்|புரதப்]] பொருள் உள்ளதால், [[ஆக்சிசன்|உயிர்வளி]] (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்). எண்காலியின் இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின் [[செதிள்]] அல்லது '''பூ''' (அல்லது '''இணாட்டு''' ) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இறைக்கப் பயன்படுகின்றது. மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப் பயன்படுகின்றது. [[முதுகெலும்பி]]களில் உள்ள இரத்தத்தில் [[சிவப்பணு]]வில் உள்ள [[ஈமோகுளோபின்]] என்னும் [[இரும்பு]]ச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல சிறந்தது என்றாலும், குளிரான கடல் பகுதிகளில், ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில் ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பேய்க்கணவாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது