ஹரிதாஸ் (1944 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39:
அரிதாஸ் (''எம். கே. தியாகராஜ பாகவதர்'') பிராமண குலத்தில் பிறந்த தெய்வபக்தி கொண்ட ஒரு செல்வந்தரின் மகன். தாய்தந்தையருக்கு அடங்காமல் மனைவி லட்சுமியின் (''என். சி. வசந்தகோகிலம்'') சொல்லுக்கு இணங்கி நடப்பவன் போல நடித்துக் கொண்டு, பிற பெண்களுடன் திரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள் நண்பன் ரங்கனின் (''எஸ். ஆர். கிருஷ்ணய்யங்கார்'') உதவியுடன் ரம்பா (''டி. ஆர். ராஜகுமாரி'') என்ற நடன மங்கையை சந்தித்து, வீட்டில் தாய் தந்தையர் இல்லாத நேரத்தில் அவளையும் அவளது குழுவினரையும் வீட்டிற்கு அழைத்து வந்து வெகு விமரிசையாக நடனமாட வைத்தான். மனைவி லட்சுமிக்கு ரம்பா தாசி எனத் தெரிந்து, அவளுடன் வாக்குவாதம் செய்து வெளியே துரத்துகிறாள். இதனால் அவமானமடைந்த ரம்பா தனது துட்ட நண்பர்கள் மூலம் லட்சுமியை ஒரு மரத்தில் கட்டி அடிக்க வைக்கிறாள். அவள் அரியின் தகப்பனாரால் காப்பாற்றப்படுகிறாள். துட்டர்கள் அரிதாசிடம் அவருடைய தந்தைதான் இச்சம்பவத்திற்குக் காரணம் எனச் சொல்ல, அரிதாசும் அவனது பெற்றோர்களை வீட்டைவிட்டு விரட்டுகிறான்.<ref name="sb">{{cite book | title=ஹரிதாஸ் பாட்டுப் புத்தகம் | publisher=நவலட்சுமி பிரசுராலயம் | year=1944 | location=காரைக்குடி}}</ref>
 
ரம்பையுடனான நட்பு நாளுக்கு நாள் அதிகரித்து, அரிதாஸ் குடிப்பழக்கம், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு தனது செல்வம் அனைத்தையும் இழந்து தனது வீட்டை ரம்பைக்கு எழுதிக் கொடுக்கிறான். ரம்பா அரிதாசையும், லட்சுமியையும் வீட்டை விட்டுத் துரத்துகிறாள். இருவரும் காட்டில் தூங்குகையில், அரிதாசுக்கு நித்திரை தெளிந்தபோது, அழகான மூன்று பெண்களைக் கண்டு விசாரிக்க, அதாங்கள்அவர்கள் கங்கா, யமுனா, சரசுவதி என்றும் நாள்தோறும் மகாமுனிவரைக் (''பி. பி. ரெங்காச்சாரி'') கண்டு அவரது ஆசீர்வாதத்தைப் பெற்று வருவதாகவும் அவருடைய மகிமையையும் சொல்கிறார்கள். அரிதாஸ் மகாமுனிவரைக் கண்டு கோபித்து அவரை உதைக்க வர முனிவர் அவனது கால்களைத் துண்டிக்கச் செய்கிறார். அரிதாசுத் தனது தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறான். முனிவரின் உபதேசத்தால், தாய்ந்தந்தையரே தெய்வமென அறிந்து அவர்களைச் சந்தித்து இழந்த கால்களையும் பெறுகிறான்.<ref name="sb"/>
 
==நடிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/ஹரிதாஸ்_(1944_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது