நெகிழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
* [[கேரளா]]வில் மட்கக் கூடிய காகிதப் பைகளில் பால் அடைத்து விற்கப்படுகிறது.
* நெகிழிப்பொருட்களை கண்ட இடங்களில் கொட்டாமல் தவிர்த்து, சேகரித்து, மறுபயன்பாடு செய்யலாம். எக்காரணம் கொண்டும் எரிக்கக்கூடாது.
* நெகிழிக்குப் பதிலியாக தூய [[மணல்|மணலுடன்]] [[மக்னீசியம்]] வேதிவினை புரிந்து உருவாகும் [[சிலிக்கான்]] சேர்மத்தைப் பயன்படுத்தலாம். இவை [[ரப்பர்]] போல் நீளும். மீளும். இளகும். எளிதில் தீப்பற்றாது. நெகிழியின் எல்லா நற்பண்புகளும் பெற்றது. தீய விளைவு இல்லாதது. ஆனால் இவை வ்ணிக ரீதியில் இலாபமில்லாததால் இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுவதில்லை..
 
== பாலித்தீன் ==
பாலித்தீன் என்ற செயற்கை நெகிழி கீழ்க்கண்ட வகையில் உருவாகிறது.
* [[கார்பன்]](C)+இயற்கை வாயு+ [[ஹைட்ரஜன்]] (அ)[[பெட்ரோலியம்]] <big><big>→</big></big>எத்திலீன்
* [[எத்திலீன்]] (பலபடியாக்கம்)<big><big>→</big></big> [[பாலி எத்திலீன்]]
* புரோபிலின் (பலபடியாக்கம்)<big><big>→</big></big> பாலிபுரோபிலின்
=== பாலித்தீன் பயன்பாடு ===
பாலித்தீன் ஆயிரக்கணக்கான [[கார்பன்]] [[அணு]]க்களுடன் உருகிய நிலையில் இருப்பதால் பலவகைப் பொருள்களைச் செய்யலாம். அழுத்திச் சுருட்டித் [[தாள்]]களையும், உருக்கி வ்ளைத்து புட்டிகள் ஆகியவைகளை செய்யாலாம். சமன் பாட்டில் [[ஹைட்ரஜன்|ஹைடரஜனுக்குப்]] பதிலாக [[குளோரின்]] அல்லது [[ஆக்ஸிஜன்]] அல்லது [[நைட்ரஜன்]] பயன்படுத்தியும் பல்வேறு வகைகள் உருவாக்கலாம். குறைந்த அடர்த்தியப் பாலித்தீன்கள், அதிகமாக நெகிழக்கூடிய வகையில் இருப்பதால் சில வேதி மாற்றங்கள் செய்து சிப்பக் கட்டு, லாமினேசன், பைகள் ஆகியவை செய்ய பயன்படுகிறது. சற்று இறுக்கமான நிலையிலுள்ள அதிக அடர்த்தியப் பாலித்தீன்களைக் கொண்டு [[உருளை]], [[கொள்கலன்]], [[குடுவை|குப்பி]], [[வாளி]], [[நாற்காலி]] என்று பல பொருள்கள் செய்ய முடியும். பாலிபுரோபலின் என்ற நெகிழிதான் [[கைப்பெட்டிகள்]] போன்றவை செய்யப் பயன்படுகிறது. இவ்வகை நெகிழிகள் செய்ய பல்வேறு வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. [[நிறம்|வண்ணம்]], [[மணம்]] பளபளப்புக்காகவும் சில வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.
 
== நெகிழி வகை ==
வெப்பத்தால் எற்ற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழிகளில் இரு பிரிவுகள் உண்டு.
# இளகும் வகை
# இறுகும் வகை
 
== இளகும் வகை ==
வெப்பத்தால் இளகி, குளிர்வித்தால் இறுகி பின் இளகி-இறுகி என எத்துனை முறையும் இவ்வாறு மாற்றி மாற்றி செய்யமுடியக்கூடிய நெகிழி இளகும் வகை நெகிழி ஆகும். இவை [[மறு சுழற்சி]] செய்யக் கூடியவை.
கோ பாலிமர் வினார், நைலான், பாலி புரோப்பிலின், பாலிவினைல் குளோரைடு (PVC), பாலி அசிட்டேட் நெகிழி, வினைல்,அக்ரிலிக் நெகிழி,செல்லுலோஸ் அசிட்டேன், செல்லுலாயிட், ஈதைல் செல்லுலோஸ் ஆகியவை இளகும் வகை நெகிழிகள் ஆகும்.
=== கோ பாலிமர் வினார் ===
வெவ்வேறு வகை மூலக்கூறுகள், பாலிமரைசேஷன் மூலம் கிடைக்கும் நெகிழிப் பொருள் கோ பாலிமர் வினார் ஆகும்.
 
=== நைலான் ===
வெவ்வேறு மூலக்கூறுகளைச் சுருக்குதல்(Condensation) மூலம் கிடைக்கும் நெகிழிப் பொருள் நைலான் ஆகும்.
 
=== பாலி புரோப்பிலின் ===
இவை கொதி நீரில் உருமாற்றம் அடையாததால் பால் புட்டிகள், ஆரோக்கியப் பொருள்கள்,குப்பிகள் ஆகியவை செய்யவும், இலேசாகவும் பலமிக்கதாகவும் உள்ளதால் நீர்பாய்ச்சும் குழாய்கள்,கயிறுகள் ஆகியவை செய்யவும் பயன்படுகின்றன.
=== பாலிவினைல் குளோரைடு (PVC) ===
இவை மணமற்ற நிறமற்ற இளகும் நெகிழியாகும். மின்கம்பிகளில் இன்சுலேட்டர்கள், நீரேற்றும் குழாய்கள் ஆகியவை செய்யப் பயன்படுகிறது.
 
=== பாலிவினைல் அசிட்டேட் நெகிழி ===
வண்ணப் பூச்சுகள் ஒட்டும் பசைகள் ஆகியவை பெருமளவில் தயாரிக்கப் பயன்படுகிறது.
 
=== வினைல் ===
டெரிலின் இழை போலவே இதில் இழைகள் தயாரிக்கலாம். இவ்விழைகள் சுருங்காது. தூசி படியாது. அழுக்கை எளிதில் நீக்கலாம். வண்ணமேற்றலாம். இவற்றிலிருந்து ஆடைகள் தயாரிக்கிறார்கள்.
 
=== அக்ரிலிக் நெகிழி ===
இது நிறமற்றது. ஒளிபுகக் கூடியது. கண்ணாடிக்கு மாற்றுப் பொருளாகவும், இயந்திரம், கட்டிடப் பொருள்கள் செய்யவும் பல்வேறு சாதனங்களிலும் பயன்படுகிறது.இதனை நாம் மீன் தொட்டி செய்ய பயன் படுத்தலாம்
 
=== செல்லுலோஸ் அசிட்டேன் ===
இந்நெகிழியுடன் வண்ணம் சேர்த்து பெருமளவில் மோட்டார் தொழிலில் தேவையான பல பொருள்களைச் செய்கின்றனர்.
 
=== செல்லுலாயிட் ===
இதுவே முதன் முதலில் உருவாக்கப்பட்ட நெகிழியாகும். இது எளிதில் தீப்பற்றக் கூடியது. விளையாட்டுப் பொருள்கள், தகடுகள் செய்யவும் பயன்படுகிறது.
=== ஈதைல் செல்லுலோஸ் ===
பொருள்கள் மீது மேல் பூச்சு (Coating)அமைக்கவும், புகைப்படத் தகடுகள் செய்யவும், ஈதைல் செல்லுலோஸ் பயன்படுகிறது.
 
== இறுகும் நெகிழி ==
இளக்கிப் பின் மீண்டும் இறுகிய பின், மீண்டும் வெப்பப்படுத்தி இளக்க முடியாத, மீளாத நெகிழி இறுகும் நெகிழி ஆகும். இது எளிதில் நொறுங்கக் கூடியது. இது இளகும் வகையை விட தரம் குறைந்தவையாகக் கருதப் படுகின்றன.
=== ஆல்கைடு ரெசின் ===
ஆல்கைடு ரெசின் என்ற நெகிழிப் பொருள் வெப்பம், ஈரத்தால் பாதிக்கப்படாதது. உறுதியானது. கடினமானது. வளையக் கூடியது. [[மின்சாரம்]] கடத்தாது. [[ஒளி]] புகும். எளிதில் நிறம் ஏற்கும் எனவே [[விமானம்]], மொட்டார் பாகங்கள், தகடு, குழாய்கள், தண்டுகள், இன்சுலேட்டர்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.
=== மெலமின் ரெசின் ===
இது எளிதில் தேயாது மின்சாதன பாகங்கள் (குறிப்பாக மின்விசிறி) செய்யப் பயன்படுகிறது.
=== பீனாலிக் ரெசின் ===
பீனாலிக் ரெசின்கள் என்னும் பேக்லைட்டு, மலிவு விலை மின்சுவிச்சுகள், பலகைகள், தொலைபேசிகல் செய்யப் பயன்படுகின்றது.
== பிற நெகிழிகள் ==
இளகும் இறுகும் வகைகளுக்கு இடையில் இருக்கும் பாலியெஸ்டர் நூலிழை செயற்கை நெகிழியே ஆகும். பாலியெஸ்டர்,டெரிலின், டெக்ரான் ஆகிய மக்கள் விரும்பி அணியும் இழைத் துணிகள் ஆகியவையும் செயற்கை நெகிழிப் பொருள்களே ஆகும்.
 
== நெகிழிப் பொருள்கள் தயாரிப்பு முறை ==
நெகிழிப் பொருள் தயாரிக்க வேதிப் பொருள்களுடன் மரத்தூள் அல்லது மைக்கா போன்ற நிரப்பிகள், நிறப் பொருள்கள், கற்பூரம் போன்று நெகிழச் செய்வன போன்றவற்றைத் தகுந்த கணித முறையில் கலந்து, அச்சில் இட்டு வார்த்தோ அல்லது நுண்துளைகள் வழியே செலுத்தியோ அல்லது திருகிப் பிழிந்து முறுக்கு போல வார்த்தோ அல்லது தகடுகளாக இழுத்தோ இயந்திரங்கள் மூலமாக பொருள்களை உருவாக்குகின்றனர். செய்யும் பொருள்களில் நெகிழி வேதிவினை தொடர்ந்து நிகழ்ந்து வெடிப்புகளோ, நொறுங்குதலோ ஏற்படாமல் இருக்க சிவப்பு [[சிலிகேட்]], [[காரீயம்]] போன்ற வேதிப் பொருள்களைச் சேர்க்கிறார்கள்.
===நெகிழியின் தீமைகள்===
== பயன்கள் ==
# நெகிழிப் பொருள்களின் விலை மிகவும் மலிவாக இருத்தல்
# அனைவரையும் கவரும் பல வகை நிறங்கள்
# உடையாமல் இருத்தல்
# எடையின்றி இலேசாக இருத்தல்
# காற்று, நீர், ஈரம், சாதாரண வேதிப் பொருள்கள் இவற்றால் பாதிக்கப் படாமல் இருத்தல்
 
# மின்கசிவு ஏற்படாமல் பயன்படுத்தமுடிதல்
இத்தகைய காரணங்களால் நெகிழிப் பொருள்கள் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே உள்ளன. கடன் அட்டைகள் (Credit card), அலங்காரப் பூக்கள், செடிகள், பெவிகால், முகச்சாயம், கைப்பை, குழாய், பசை, காண்டாக்ட் லென்சு, செயற்கைப் பல், தரைப் பூச்சு, [[சமையலறைக்]] கருவிகள், பொம்மைகள், படுக்கை விரிப்புகள், துணி, நாப்கின்கள், மெத்தை, தலையணை, காலணி, கயிறு, பேனா..... ஆகியவை நெகிழியால் செய்யப்படுகின்றன. இளகும் பிளாஸ்டிக் பொருளுடன் தகுந்த அளவு கண்னாடி இழைகள் கலந்து இருக்கும் நெகிழித் தகடு, [எஃகு] போன்று வலுவுள்ளதால், பந்தயக் கார்கள், படகுகள் செய்யப் பயன்படுகின்றன. துணி காகிதம் போன்றவற்றை நெகிழிக் கரைசலில் அடுக்கி, அழுத்தி, ஒட்டிக் கிடைக்கும் தகடுகளை [[மேசை]], [[நாற்காலி]], [[சுவர்]] ஆகியவற்றின் மீது ஒட்டுகின்றனர்.
 
===நெகிழியின் தீமைகள்===
''{{முதன்மைக் கட்டுரை|நெகிழியின் தீமைகள்}}''
* இயற்கை வளங்களைக் கொண்டு உருவாகும் நெகிழிப் பொருள்கள் அதிகம் தீங்கு தரும் வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுவதால் பல்வேறு தீமைகளுக்குக் காரணமாகின்றன.
* நெகிழிப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் மறு சுழற்சி செய்யும் போதும், உருகும்போதும் வெளியேறும் வாயுக்கள் நத்
வரி 101 ⟶ 36:
== அகற்றும் முறை ==
நெகிழிப் பொருட்களில் 10% பொருள்களே 'மீண்டும் பயன்படுத்த' பயன்படுகின்றன. 90% பொருட்கள் எரிக்கப்பட்டுவிடுகின்றன. மருத்துவமனைகளில் சேரும் நோய் பரப்பும் கழிவுப் பொருளான பஞ்சு போன்றவற்றை எரிக்கப்பயன்படும் 'இன்சினரேசன்' என்ற சாம்பலாக்கும் கருவி இப்போது நெகிழிக் குப்பைகளை எரிக்கப் பயன்படுகிறது. அவையும் டையாக்சின் என்ற நச்சுப் புகையைத்தான் கூடுதல் தீமையாகத் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன.
 
== படத்தொகுப்பு ==
<gallery>
படிமம்:Pot,plastic,Tamil Nadu491.jpg|தமிழகத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் நெகிழிக்[[குடம்]]
படிமம்:A VIEW OF GARBAGE.jpg|சேலம் கண்ணங்குறிச்சி ஏரியின் அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பை மேடு
படிமம்:A VIEW OF GARBAGE 1.jpg|குப்பைகளைக் கொட்டுதல்
படிமம்:A VIEW OF GARBAGE2.jpg|குப்பைகள்
படிமம்:A VIEW OF GARBAGE3.jpg|குப்பைகளில் கலந்துள்ள நெகிழிப்பொருட்கள்
</gallery>
 
== உசாத்துணை ==
டி.பாலகுமார் 'எழுதிய பிளாஸ்டிக் யுகம் நல்லதா? கெட்டதா? என்ற கட்டுரை',அறிவியல் ஒளி,
பிப்ரவரி 2008 இதழ்
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.scientificamerican.com/article.cfm?id=a-brief-history-of-plastic-world-conquest நெகிழிகள் எவ்வாறு உலகில் பரவி ஆட்கொண்டது என்று விளக்கும் 'சயன்ட்டிபிக் அமெரிக்கன்' இதழ் கட்டுரை, மே 29, 2011]
== மேற்கோள் ==
<references>
 
[[பகுப்பு:மூலப்பொருள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நெகிழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது