கோபுரம் (கோயில்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
[[Image:Gopuram-madurai.jpg|thumb|200px|மதுரையில் உள்ள ஒரு கோபுரம்]]
'''கோபுரம்''' என்பது தற்போதைய பரவலான வழக்கில் இந்துக் கோயில்களின் நுழை வாயில்களில் அமைந்திருக்கும் கட்டிட அமைப்பைக் குறிக்கும். பல்வேறு அளவுகளிலும் காணப்படும் இக் கோபுரங்கள், தென்னிந்திய மாநிலமான [[தமிழ் நாடு|தமிழ் நாட்டிலேயே]] அவற்றின் உச்ச வளர்ச்சியைப் பெற்றுக் காணப்படுகின்றன. ஒரு [[பிரமிடு|பிரமிடைப்]] போல் கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் இந்த அமைப்பு, ஒன்றிமேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்பட்ட தளங்களாகக் காட்சி தருகின்றன. ஒரு தளம் கொண்டவை முதல் 12 தளங்கள் கொண்ட கோபுரங்கள் வரை தமிழ் நாட்டில் உள்ளன. இது போலவே ஒரு [[இந்துக் கோயில்|கோயிலில்]] இருக்கக்கூடிய கோபுரங்களின் எண்ணிக்கையும் பலவாறாகக் காணப்படுகின்றன. ஒரேயொரு கோபுரத்தைக் கொண்ட கோயில்களும், 16 கோபுரங்களைக் கொண்ட கோயில்களும் உள்ளன.
வரி 5 ⟶ 4:
கோயில்களில் பிரமிட் வடிவில் உயர்ந்து நிற்பனவெல்லாம் கோபுரங்கள் அல்ல. வட நாட்டுக் கோயில்களிலும், தமிழ் நாட்டின் ஆறு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிகளில் கட்டப்பட்ட கோயில்களிலும் உள்ள உயர்ந்த பிரமிட் வடிவ அமைப்புக்கள் [[விமானம் (கோயில்)|விமானங்கள்]], அல்லது சிகரங்கள் எனப்படுகின்றன. இவை [[கருவறை]]க்கு மேலேயே கட்டப்பட்டிருக்கும். ஆனால் கோபுரங்கள் கோயிலைச் சூழவுள்ள சுற்று மதில்களில் அமைந்துள்ள வாயில்களில் கட்டப்பட்டிருக்கும். [[தஞ்சைப் பெரிய கோயில்]], [[கங்கை கொண்டசோழபுரம்]] கோயில் ஆகியவற்றில் பெரிய அளவில் காட்சி தருபவை விமானங்கள் ஆகும்.
 
==சொற்பிறப்பு==
[[தமிழ்|தமிழில்]], கோபுரம் என்னும் சொல்லின் தோற்றம் பற்றிப் பல கருத்துக்கள் நிலவுகின்றன. [[தேவநேயப் பாவாணர்]] போன்ற சில அறிஞர்கள் இது ஒரு தூய தமிழ்ச் சொல்லே என்கின்றனர். ஆனால் வேறு சிலரோ இது [[சமஸ்கிருதம்]] அல்லது வேறு பிராகிருத மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது என்கின்றனர். கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்ட [[மகாபாரதம்]] போன்ற சமஸ்கிருத நூல்களில் கோபுரம் என்ற சொல் ஆளப்பட்டிருக்க, [[சங்க காலம்|சங்க காலத்]] தமிழ் நூல்களிலோ அல்லது பிற்பட்ட சிலப்பதிகாரத்திலோ கோபுரம் என்ற சொல் காணப்படவில்லை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்<ref>குடவாயில் பாலசுப்பிரமணியன்; ''கோபுரக்கலை மரபு''; கோயிற் களஞ்சியம்; 2004. பக் 1-13</ref>.
 
 
==குறிப்புகள்==
<References/>
 
[[பகுப்பு:இந்தியக் கட்டிடக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/கோபுரம்_(கோயில்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது