| subdivision_ranks = [[துணையினம்]]
| subdivision =
''Bengalவங்காளப் tigerபுலி''

''Indochineseஇந்தோசீனப் tigerபுலி''

''[[Malayanமலாய்ப் tiger|Panthera tigris jacksoniபுலி]]''

''[[Sumatranசுமாத்திரப் tiger|P. t. sumatraeபுலி]]''

''[[Siberianசைபீரியப் tiger|Panthera tigris altaicaபுலி]]''

''[[தென்சீனப் புலி]]''

''[[South China tiger|Panthera tigris amoyensis]]''

†''[[Baliபாலிப் tiger|P. t. balicaபுலி]]''

†''[[Javanசாவகப் Tiger|P. t. sondaicaபுலி]]''

{{விக்சனரி|வேங்கை}}
'''புலி''' (''Panthera tigris'' ), என்பது [[பூனை|பூனைக் குடும்பத்தில்]] உள்ள இனங்களில் மிகப் பெரியதாகும். இது பெரும்பூனை என்ற பேரினத்தைச் சேர்ந்தது.<ref name="britannica">{{cite web|url=http://www.britannica.com/eb/article-9072439/tiger|title=Encyclopaedia Britannica Online - Tiger (''Panthera tigris'')|dateformat=dmy|accessdate=25 September 2007}}</ref> இதன் உடலானது செங்குத்தான கருப்புக் கோடுகளுடன் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற முடிகளும் வெளிறிய அடிப்பகுதியும் கொண்டு காணப்படும். உச்சநிலைக் கொன்றுண்ணியான புலி, பெரும்பாலும் மான்கள் மற்றும் எருதுகள் ஆகியவற்றைத் தன் இரையாக்கிக் கொள்கின்றது. இது தனக்கென எல்லை வகுத்துக் கொண்டு வாழும் விலங்காகும். இரை தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக இருக்கும் வகையில் பெரும் பரப்பளவு நிறைந்த இடங்களில் வாழ்கின்றது. புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயதுவரை வாழ்கின்றன. பிறகு அவை தாங்கள் வாழ்ந்த இடத்தை விட்டுப் பிரிந்து தங்களுக்கெனத் தனியாக எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன.
புலியானது ஒருகாலத்தில் கிழக்கு அனாத்தோலியப் பகுதி தொடங்கி [[அமுர் ஆறு|அமுர் ஆற்று]] வடிப்பகுதி வரையிலும், தெற்கில் [[இமயமலை]] அடிவாரங்கள் தொடங்கி [[சுந்தா தீவுதீவுகள்|சுந்தா தீவுகளில்]]களில் உள்ள [[பாலி]] வரையிலும் பரவியிருந்தது. புலிகள் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து புலிகள் தங்கள் வாழ்விடத்தில் குறைந்தபட்சம் 93% அளவு வரை இழக்கத் தொடங்கின. நாளடைவில் அவை மேற்கு மற்றும் நடு ஆசியா, [[சாவகம்]] மற்றும் பாலி தீவுகள், தென்கிழக்கு, தென்னாசியா மற்றும் [[சீனா]] ஆகிய பகுதிகளில் குறையத் தொடங்கின. தற்போது அவை [[சைபீரியா|சைபீரிய]] வெப்பக் காடுகள் தொடங்கி [[இந்தியத் துணைக்கண்டம்]] மர்றும் [[சுமாத்திரா]] ஆகிய பகுதிகளில் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலயக் காடுகள் வரை மட்டுமே பரவலாகக் காணப்படுகின்றன. புலியானது, 1986ஆம் ஆண்டில் இருந்து பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக இருந்து வருகிறது. 2015ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் உள்ள காட்டுப் புலிகளின் எண்ணிக்கை 3,062 மற்றும் 3,948 ஆகிய எண்களுக்கு இடையே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 20ஆம் நூற்றாண்டில் இருந்ததை விட ஏறக்குறைய 100,000 எண்கள் குறைவாகும். மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த சில பகுதிகளில் புலிகள் வாழ்வதால் அவை மனிதர்களுடன் குறிப்பிடத்தக்க அளவு பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளன.
உலகில் பரவலாக அறியப்படும் பெருவிலங்குகளில் புலியும் ஒன்று. இது பண்டைய தொன்மவியல் மற்றும் பழங்கதை ஆகியவற்றில் முக்கிய இடம் வகித்தது. தற்போது திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்கள், பல்வேறு கொடிகள், மரபுச் சின்னங்கள், உருவப் பொம்மைகள் ஆகியவற்றிலும் இடம்பெறுகிறது. [[இந்தியா]], [[வங்காளதேசம்]], [[மலேசியா]] மற்றும் [[தென் கொரியா]] ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு புலியாகும்.
== பெயரிடுதலும் சொற்பிறப்பு ==
"டைகர்" என்ற சொல் "''தீகிரிஸ்'' " என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்தக் கிரேக்கச் சொல்லானது [[பாரசீக மொழி|பாரசீக]] மொழியில் அந்த விலங்கின் வேகத்தைக் குறிப்பிடும் வகையில் "அம்பு" எனப் பொருள்படும் சொல்லிலிருந்து பிறந்திருக்கலாம். மேலும் டைகிரிஸ் என்ற நதியின் பெயரிலிருந்தும் பிறந்திருக்கலாம்.<ref name="Liddell">{{cite book | author=[[Henry Liddell|Liddell, Henry George]] and [[Robert Scott (philologist)|Robert Scott]] | year=1980 | title=A Greek-English Lexicon (Abridged Edition) | publisher=Oxford University Press | location=United Kingdom | isbn=0-19-910207-4}}</ref><ref>{{cite web|url=http://www.etymonline.com/index.php?term=tiger |title='Tiger' at the Online Etymology Dictionary |publisher=Etymonline.com |date= |accessdate=2009-03-07}}</ref> அமெரிக்க ஆங்கிலத்தில் "தீகிரிஸ்" என்ற சொல் முதலில் 1611 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. [[கார்ல் லின்னேயஸ்|லின்னேயஸின்]] ''இயற்கையின் அமைப்பு'' என்ற அவரது 18 ஆம் நூற்றாண்டுக் கொள்கையில் விவரிக்கப்படும் பெரும்பாலான இனங்களில் ''ஃபெலிஸ் டைகிரிஸ்'' எனப்படும் இதுவும் ஒன்றாகும்.<ref name="Linn1758">{{cite book
| last = லின்னேயஸ்
| first = Carolus
| authorlink = கரோலஸ் லின்னேயஸ்
| title = Systema naturae per regna tria naturae:secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis.
| publisher = Holmiae (Laurentii Salvii)
| year = 1758
| page = 41
| url = http://www.biodiversitylibrary.org/page/726936
| accessdate = 2008-09-08
| volume = 1
| edition = 10th}}</ref><ref>{{la icon}} {{cite book | last=லின்னேயஸ் | first=C. | authorlink=கரோலஸ் லின்னேயஸ் | title=Systema naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Tomus I. Editio decima, reformata. | publisher=Holmiae. (Laurentii Salvii). |year=1758| page=824 | url=http://dz1.gdz-cms.de/index.php?id=img&no_cache=1&IDDOC=265100}}</ref> அதன் பேரினத்தின் அறிவியல் பெயரான ''பாந்தெரா தீகிரிஸ்'', என்ற சொல் ''பான்-'' ("அனைத்திலும்") மற்றும் ''தெரான்'' ("சிறந்தது") என்ற கிரேக்கச் சொற்களிலிருந்து உருவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இது ஒரு [[இனம் சொற்பிறப்பு|வாய்வழிச் சொல் வரலாறாக]] இருக்கலாம். ''பாந்தெரா'' என்ற சொல்லானது செம்மொழிகளின் வழியாகவே ஆங்கிலத்திற்கு வந்திருந்தாலும் பெரும்பாலும் அது [[கிழக்கு ஆசியா|கிழக்கு ஆசியாவில்]] தோன்றியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதன்படி இச்சொல்லுக்கு "மஞ்சள் நிற விலங்கு" அல்லது "வெளிர் மஞ்சள்" எனப் பொருள்.<ref>{{cite web | url=http://www.etymonline.com/index.php?term=panther | title="Panther" | work=Online Etymology Dictionary | publisher=Douglas Harper | accessdate=2007-07-05}}</ref>
புலிகளைக் குழுவாகக்<ref>{{cite web | url=http://wiki.answers.com/Q/Whats_a_group_of_tigers_called | title="WIKI Answers article on 'Group of tigers'" }}</ref> காண்பது அரிது (கீழே காண்க), ஆனால் அவ்வாறு காணப்படும்போது அவை 'ஸ்ட்ரீக்' அல்லது 'அம்புஷ்' என அழைக்கப்படுகின்றன.