திராட்சைப்பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
spelling correction
சரியான வார்த்தை
வரிசை 74:
வரலாறு காணாத காலத்திருந்தே திராட்சை மனிதனால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திராட்சை சாற்றிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. பெரும்பாலான திராட்சைகள், ஐரோப்பியத் திராட்சைக் கொடிச் சிற்றினமான ''விட்டிஸ் வினிபேரா'' ''(Vitis vinifera)'' என்பதில் இருந்து கிடைக்கிறது. இது நடுநிலக்கடல் பகுதி மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. அனைத்து வகை திராட்சைகளும் அப்படியே உண்ணத் தக்கவைதான். ஒரு சில வகைகள் உலர் திராட்சை செய்யவும். சாறு எடுக்கவும், பழக்கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானவை ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சக்கைகள் உரம், அசிட்டிக் அமிலம் எண்ணெய் மற்றும் பல பொருள்கள் தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. சிறிய அளவில் திராட்சைகளும், வைன்களும், ''[[விட்டிஸ் லபுருஸ்கா]]'' ''(Vitis labrusca)'', ''[[விட்டிஸ் ரிப்பாரியா]]'' ''(Vitis riparia)'', ''[[விட்டிஸ் ரொட்டுண்டிபோலியா]]'' ''(Vitis rotundifolia)'', ''[[விட்டிஸ் அமுரென்சிஸ்]]'' ''(Vitis amurensis)'' போன்ற சிற்றினங்களில் இருந்தும் கிடைக்கிறது. கிஸ்மிஸ் என்று பெர்சிய மொழியில் குறிப்பிடப்படுகிறது. திராட்சை வெப்பம் மிகுந்த பகுதிகளில் வளமான மணல் பரப்பில் அதிகம் விளைகிறது. பெரும்பாலான திராட்சை பதியன் மூலமும், விதை மூலமும் வளர்க்கப்படுகிறது. கொத்து கொத்தாக மலரும். இதன் பூக்கள் பச்சை நிறத்திலிருக்கும்.
 
== பரவலும் செய்கையும்விளைச்சலும் ==
[[படிமம்:grapevine.jpg|thumb|250px|லெபனானில் உள்ள ஐத்தா அல் பூக்கர் என்னும் ஊரில் உள்ள ஒரு திராட்சைத் தோட்டம்]]
[[படிமம்:GrapeField.jpg|thumb|250px|திராட்சைக் கொடிகள்]]
[[உணவு வேளாண்மை அமைப்பு|உணவு வேளாண்மை அமைப்பின்]] தகவலின்படி, உலகில் 75,866 [[சதுர கிலோமீட்டர்]]களில் திராட்சைச்திராட்சை செய்கைஉற்பத்தி நடைபெறுகிறது. உலகின் மொத்த திராட்சை உற்பத்தியில் 71% வைன் தயாரிப்புக்காகப் பயன்படுகிறது, 27% நேரடியாகப் பழமாக உட்கொள்ளப்படுகிறது, 2% உலர் பழமாக்கப்படுகிறது. திராட்சைத் தோட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட [[நிலம்|நிலங்கள்]] ஆண்டுக்கு 2% என்ற அளவில் அதிகரித்து வருகின்றன.
 
கீழேயுள்ள அட்டவணை திராட்சை வைன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகளையும், அந் நாடுகளில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவும் காட்டப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/திராட்சைப்பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது