கோபுரம் (கோயில்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
 
==கோபுரங்களின் தோற்றமும் வளர்ச்சியும்==
[[Image:Sanchi Great Stupa Torana.jpg|thumb|250px|சாஞ்சியில் உள்ள பௌத்த கட்டிடக்கலைக் கூறான தாது கோபுரம் ஒன்றைச் சூழவுள்ள கல் வேலியின் நுழை வாயிலில் அமைந்துள்ள அமைப்பு. வேதகால நுழைவாயில்களின் நேரடி வாரிசாகக் கருதப்படுகிறது.]]
வேலியிடப்பட்ட இடங்களின் வாயில்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கட்டிட அமைப்புக்களை அமைக்கும் வழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகின் பல பகுதிகளிலும் இருந்து வந்துள்ளது. கி.மு 1500 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய எகிப்தில் வாயிற் கட்டிட அமைப்புக்களுடன் கூடிய கோயில்கள் இருந்துள்ளன. இன்றுள்ள அமைப்பில் இந்துக் கோயில் கோபுரங்கள் கி.பி 6 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டவையே எனலாம். எனினும் இவற்றுக்கான கருத்துரு இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்து வருகிறது. வேதகால ஊர்களிலே கோபுரங்களின் கருத்துருவுக்கான அடிப்படைகளை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவ்வாறு வீடுகளிலும், ஊர்களிலும் காணப்பட்ட, மூங்கில் முதலிய இயற்கைப் பொருட்களாலான எளிமையான வாயிற்கட்டிட அமைப்புக்கள், காலப்போக்கில் நீடித்துழைக்கும் கட்டிடப் பொருட்களினால் அளவில் பெரியனவாக உருவாக்கப்பட்டு முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத் தொகுதிகளின் வாயில் அமைப்புக்களாக வளர்ச்சியடைந்தன.
 
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கோபுரம்_(கோயில்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது