ஆர். முத்துராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 25:
=== வாழ்க்கைக் குறிப்பு ===
 
பூர்விகம், மன்னார்குடி சாலையில் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு தான், முத்துராமனின் சொந்த ஊர் ஆகும். அங்குள்ள பள்ளியில்தான் 5-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அப்போது அவரோடு படித்த மாணிக்கம் என்பவர் இன்னும் அந்த ஊரில் இருக்கிறார். அவருக்கு இப்போது 89 வயது ஆகிறது. இவர் முத்துராமனை விடவும் 1 வயது மூத்தவர். முத்துராமனுக்கு பூர்வீகத்தில் 6 ஏக்கர் நஞ்சை நிலமும், ஒரு வீடும் சொந்தமாக இருந்திருக்கிறது. ,முன்னணிக் கதாநாயகனாக பல படங்களில் நடித்தபோதும், தன்னை முன்னிறுத்தாத, கதாநாயகியை முன்னிறுத்தும் பல படங்களில் (கே.ஆர்.[[கே. ஆர். விஜயா|விஜயா]], [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]] ஆகியோருடன்) நடித்துள்ளார். மேலும், அப்போதைய முன்னணி நட்சத்திரங்களாகத் இருந்த [[எம்.ஜி.ஆர்]] ('என் அண்ணன்', 'கண்ணன் என் காதலன்' போன்றவை) மற்றும் [[சிவாஜி கணேசன்]] ('[[பார் மகளே பார்]]', '[[நெஞ்சிருக்கும் வரை]]', '[[சிவந்த மண்]]' போன்றவை) ஆகியோருடன் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தனது காலத்தில் அல்லது தனக்குப்பின் அறிமுகமான ஜெய்சங்கர் ([[கனிமுத்துப் பாப்பா]]), ரவிச்சந்திரன் ('[[காதலிக்க நேரமில்லை]]') ஏவி. எம். ராஜன் ('பதிலுக்குப் பதில்', '[[கொடிமலர்]]') ஆகியோருடன் இரண்டாவது நாயகனாகவும் நடித்துள்ளார். தனது திரைப்படங்கள் பலவற்றிலும் மிகைப்படுத்தாத தன்னம்பிக்கை மிகுந்த நடிப்பிற்காகப் பெயர் பெற்றார்.
 
இவரது இறுதிப்படம் [[ரஜினிகாந்த்]] இரட்டை வேடத்தில் நடித்த போக்கிரி ராஜாவாகும். இதில் வில்லன் வேடம் ஏற்றிருந்த முத்துராமன், ஒரு வெளிப்புறப்படப்பிடிப்பிற்காக [[ஊட்டி]] சென்றிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அச்சமயமே, இவரது மகனான கார்த்திக் கதாநாயகனாக [[பாரதிராஜா]] வின் புகழ்பெற்ற [[அலைகள் ஓய்வதில்லை]] திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகவாகவிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._முத்துராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது