இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 33:
=== உருவாக்கம் ===
1950 இல் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பொது செயலாளர் மற்றும் கட்சியின் உயர்மட்டத்தில் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவருமான பி.டி. ரணதேவ், இடதுசாரி புதுமுயற்சி வேட்டலுக்காக படியிறக்கப்பட்டார்.[[ஜவஹர்லால் நேரு]] தலைமையிலான [[இந்திய தேசிய காங்கிரஸ்]] அரசு, [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துடன்]] நெருக்கமான உறவு மற்றும் கூட்டணியையும் கொண்டது. இதனால் சோவியத் அரசாங்கம் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு பக்கபலமாக இருக்கவேண்டும் என விரும்பியது. இருப்பினும், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் பெரும்பகுதியினர் இந்தியா இன்னும் அரை-[[நிலபிரபுத்துவம்|நிலபிரபுத்துவ]] நாடாக விளங்குவதாகவும், சோவியத்தின் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு கொள்கைகளுக்காக வர்க்க போராட்டத்தை கிடப்பில் போட முடியாது எனவும் வாதிட்டனர். மேலும், இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல் போட்டிகளுக்கு எதிராக பகைமையுணர்வை காட்டியது. 1957இல் இந்தியாவின் ஒரே காங்கிரஸ் அல்லாத மாநில அரசான இ.எம்.எஸ்.நம்பூதரிபாட் அமைச்சரவையை மத்தியஒன்றிய அரசு தலையிட்டு கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது.
 
இதே வேளையில், [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]க்கும் [[சீனா கம்யூனிஸ்ட் கட்சி]]க்குமான உறவு கசந்தது. 1960களின் ஆரம்பத்தில் சீனா கம்யூனிஸ்ட் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர பாதையில் இருந்தும், [[மார்க்சியம்|மார்க்சிய]]-[[லெனினியம்|லெனினிய]]க் கோட்பாடுகளில் இருந்தும் விலகுவதாக குற்றம்சாட்டியது. எல்லை தகராறு ஏற்பட்டு 1962இல் நடந்த [[இந்தியா|இந்திய]]-[[சீனா|சீன]] யுத்தத்தினால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.