பன்னாட்டுத் துணை மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 1:
'''பன்னாட்டுத் துணை மொழி''' (''international auxiliary language'') என்பது, பொதுவான [[முதல் மொழி]]யைக் கொண்டிராத வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் தொடர்பாடலுக்குப் பயன்படும் மொழியாகும். ஒரு துணை மொழி பெரும்பாலும் [[இரண்டாவது மொழி]]யாக இருக்கக்கூடும்.
 
ஆதிக்கம் பெற்றிருந்த பல சமூகங்களின் மொழிகள் கடந்த காலத்தில் துணை மொழிகளாக இருந்துள்ளன. சில சமயங்களில் இம்மொழிகள் பன்னாட்டு மட்டத்தில் பயன்பட்டன. இலத்தீன், கிரேக்கம், நடுநிலக்கடற்பகுதிப் பொது மொழி என்பன பழங்காலத்தில் துணை மொழிகளாக இருந்துள்ளன. [[அரபு மொழி]], [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு]], [[உருசியம்]], [[எசுப்பானியம்]], [[பொதுச் சீனம்]] போன்றவை அண்மைக் காலத்தில் துணை மொழியாக உலகின் பல நாடுகளில் பேசப்படுகின்றன.<ref name="bodmer_pei">Bodmer, Frederick. ''The loom of language'' and Pei, Mario. ''One language for the world.''</ref> ஆனாலும், இம்மொழிகள் அவற்றின் பண்பாட்டு, அரசியல், பொருளாதார ஆதிக்கத்தின் ஊடாகவே இவ்வாறு பிரபலம் பெற்றிருப்பதால், அவற்றுக்கு எதிர்ப்புக்களும் உள்ளன. இதனால், செயற்கை அல்லது [[உருவாக்கப்பட்ட மொழி]]யொன்று இதற்குத் தீர்வாக அமையக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர்.<ref name="bodmer_pei" />
 
துணை மொழி என்னும் சொல், இது உலக மக்களுக்குக் ஒரு கூடுதலான மொழியேயன்றி அவர்களுடைய தாய் மொழிக்குப் பதிலாகப் பயன்படுத்துவதற்கானது அல்ல என்பதையும் குறிக்கிறது. பன்னாட்டுத் தொடர்பாடலை இலகுவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட [[எசுப்பரான்டோ]], [[இடோ]], [[இன்டர்லிங்குவா]] போன்ற திட்டமிடப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட மொழிகளைக் குறிக்கவும் இச்சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவது உண்டு.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டுத்_துணை_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது