ஐக்கிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு {{ஜி-20}}
சிNo edit summary
வரிசை 72:
"[[பெரிய பிரித்தானியா]]" அல்லது "பிரித்தானியா" என்பது [[பிரித்தானியத் தீவுகள்|பிரித்தானியத் தீவுகளிலேயே]] மிகப் பெரிதான தீவின் புவியியல் பெயராகும். அரசியல் ரீதியில், பெரிய பிரித்தானியா என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் கூட்டுப் பெயராகும். (அதாவது, வடக்கு அயர்லாந்தைத் தவிர்த்து ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பகுதிகள்). "பெரிய பிரித்தானியாவின் ஐக்கிய இராச்சிய" ஒன்றிய சட்டம் [[1707]] வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்கு, ஸ்காட்லாந்தை "வடக்குப் பிரித்தானியா" என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை "தெற்குப் பிரித்தானியா" என்றும் அழைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இவ்வழக்கம் நாளடைவில் மறைந்து போயிற்று. இன்றைய வழக்கில் "பிரித்தானியா" என்னும் பெயர் சுருக்கமாக மொத்த ஐக்கிய இராச்சியத்தை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், ஐக்கிய இராச்சியம் என்பதற்கு "பெரிய பிரித்தானியா" என்று குறிப்பிடுவது பிழையாகும், ஏனென்றால் இந்தப் பெயர் வடக்கு அயர்லாந்தை உட்படுத்தாது. இது மனவருத்ததை ஏற்படுத்தலாம்.
 
[[பிரித்தானியத் தீவுகள்]] என்பது பெரிய பிரித்தானியத் தீவு மற்றும் [[அயர்லாந்து|அயர்லாந்து தீவு]] மற்றும் அருகிலிருக்கும் ஏனைய தீவுகளான [[கால்வாய் தீவுகள்]], [[ஹீப்ரைட்ஸ்]], [[ஆர்க்னீ]], [[மான் தீவு]], [[Isle of Wight]], [[ஷெட்லாந்து தீவுகள்]] ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. எனினும், பிரித்தானியாவுக்குச் (அதாவது ஐக்கிய இராச்சியத்திற்கு) சொந்தமான தீவுகள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதால், இப் பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது, குறிப்பாக [[அயர்லாந்து|அயர்லாந்தில்]]. இதற்கு மாற்றுப் பெயராக, அதிகார வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்தப் படாவிட்டாலும், ''வடக்கு அட்லாந்தியத் தீவுகள்'' என்ற பெயர் முன்வைக்கப் பட்டிருக்கிறது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது