நவ்யா நாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய நடிகை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Navya Nair" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:26, 20 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

நவ்யா நாயர் (Navya Nair) என்ற தனது மேடைப் பெயரால் பரவலாக அறியப்படும் இவரின் இயற்பெயர் தன்யா வீணா. மலையாள , தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். சிறந்த நடிகைக்கான கேரளா மாநில திரைப்பட விருதை இரண்டு முறை மற்றும் கலைமாமணி விருதை வென்றவர்.

நவ்யா நாயர்
படிமம்:Navya Nair.jpg
ஒரு நடன நிகழ்ச்சியில் நவ்யா
பிறப்புதன்யா வீணா
14 அக்டோபர் 1985 (1985-10-14) (அகவை 38)[சான்று தேவை]
கேரளா, இந்தியா
மற்ற பெயர்கள்தன்யா வீணா
பணிநடிகை, நடன கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்பொழுதுவரை
வாழ்க்கைத்
துணை
சந்தோஷ் மேனன் (2010–தற்பொழுது வரை)
பிள்ளைகள்சாய் கிருஷ்ணா

தனிப்பட்ட வாழ்க்கை

நவம்பர் 14, 1985 அன்று, ராஜு மற்றம் வீனா ராஜுவிற்கு, ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடுவிற்கு அருகிலுள்ள ஒரு கிராமமான செப்பாடில் பிறந்தார். திரைப்பட இயக்குனர் கே. மது அவருக்கு மாமா உறவு முறை வரும்.

அவர் 10 ம் வகுப்பு வரை பெத்தானி பாலிகமடம் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் எம்.எஸ்.எம். உயர்நிலைப்பள்ளியில் படித்தார். அங்கு அவரது தாயார் ஆசிரியராக இருந்தார். பின்னர் வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

21 ஜனவரி 2010 இல், மும்பை சார்ந்த தொழிலதிபர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார். [1] இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற ஒரு மகனுண்டு.

திரைப்பட வாழ்க்கை

பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே திலீப் நடிகருடன் கதாநாயகியாக இஷ்டம் என்ற படத்தில் 2001இல் நடித்தார். பின்னர் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.

நந்தவனம் என்ற மழையாளத் திரைப்படத்தில் 'பாலாமணி' என்ற கதாபாத்திரதில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த நடிகைக்கான கௌரவமான பிலிம்பேர் விருதுகள் 2002 ஆம் ஆண்டில் பெற்றார்.[2]மோகன்லால் , மம்மூட்டி , சுரேஷ் கோபி , ஜெயராம் , திலீப் , ப்ரித்விராஜ் மற்றும் ஜெயசூர்யா ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் அழகிய தீயே படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்ற 2009 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ஆடம் கூத்து படம் இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கது.

குறிப்புகள்

  1. "South Indian Beauty Navya Nair Married!". indiglamour. 2010. பார்க்கப்பட்ட நாள் 21 January 2010.
  2. "State film awards presented". The Hindu (Chennai, India). 4 December 2003. http://www.hindu.com/2003/12/04/stories/2003120404870400.htm. பார்த்த நாள்: 26 May 2007. 

வெளி இணைப்புகள்

  • நவ்யா நாயர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்யா_நாயர்&oldid=2679043" இலிருந்து மீள்விக்கப்பட்டது