திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 119:
 
புராணங்களின் படி, தேவர்களின் தலைவனான இந்திரன் இடி மின்னல் வடிவில் வந்து இங்குள்ள இறைவனை வழிபாடு செய்வதாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, 1930ம் ஆண்டு நவம்பர் 10ம் நாள் மிகப்பெரிய இடி ஒன்று திருமலைக் கோயில் கலசத்தை தாக்கி அந்த துளை வழியாக கருவறையில் நுழைந்து சிவனை அடைந்ததாகவும், அதனால் உருவான தாங்கமுடியாத வெப்பம் மற்றும் அதிர்வுகளை மறுநாள் கோயில் கதவை திறந்ததும் உணர்ந்ததாகவும் கூறுகின்றனர். இப்பொழுதும் இந்த வழிபாடு நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
 
===சங்குதீர்த்த புஷ்கரணி===
12 வருடங்களுக்கு ஒரு முறை குருபகவான் மகர ராசியிலிருந்து கன்னியாராசிக்கு பிரவேசிக்கும் நேரத்தில் இங்குள்ள சங்குதீர்த்தத்தில் இந்தியாவில் உள்ள புண்ணியநதிகள் சங்கமிப்பதாக ஐதீகம். அதுசமயம் உற்சவர் இங்குள்ள சங்குதீர்த்தத்தில் நீராடுவர். லட்சகணக்கில் பக்தர்கள் அதுசமயம் புனிதநீராடுவார்கள்.
 
===லட்ச தீபம்===
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி லக்னத்தில் நுழையும் நாளன்று மாலையில் லட்சதீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று வீடுகளிலும், கோயில்களிலும், சங்குதீர்த்த குளக்கரையிலும் லடச்க் கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஊர் முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும். இந்த திருவிழாவானது வட இந்தியாவில் கொண்டாடப்படும் புஷ்கரமேளா, கும்பமேளாவிற்கு இணையானது.கடைசியாக 02.08.2016 அன்று லடசதீப பெருவிழா கொண்டாடப்பட்டது.
 
==மேற்கோள்கள்==