அனகாரிக தர்மபால: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: thumb|right|அனகாரிக தர்மபால '''அனகாரிக தர்மபால''' (17 செப்டெம்ப...
 
No edit summary
வரிசை 2:
'''அனகாரிக தர்மபால''' (17 செப்டெம்பர் 1864 - 29 ஏப்ரல் 1933), 20 ஆம் நூற்றாண்டில் புத்த சமயத்தின் இரண்டு முக்கியமான அம்சங்களைத் தொடக்கி வைத்ததில் முன்னணியில் இருந்தவர் ஆவார். இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஏறத்தாழ முற்றாகவே அழிந்த நிலையில் இருந்த புத்த சமயத்துக்கு அங்கே புத்துயிர் அழிப்பதில் முன்னோடியாக இருந்தார். தற்காலத்தில் [[ஆசியா]], [[வட அமெரிக்கா]], [[ஐரோப்பா]] ஆகிய மூன்று கண்டங்களில் புத்த தர்மத்தைப் போதித்த முதல் பௌத்தரும் இவரே.
 
தற்காலத்தில், [[திருமணம்|மணம்]] முடிக்காமல், புத்த சமயத்துக்காக முழுநேரம் உழைக்கும் ஒருவரே ''[[அனகாரிக]]'' என அழைக்கப்படுகிறார். தர்மபாலவே முதலாவது ''அனகாரிக'' ஆவார். இவர் தனது எட்டாம் வயதிலேயே மணம் செய்து கொள்வதில்லை என உறுதி எடுத்துக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்வுறுதி மொழியை அவர் வாழ்நாள் முழுதும் காப்பாற்றினார். இவர் மஞ்சள் உடை தரித்தபோதும், இவர் ஒரு [[பிக்கு]] அல்ல. இவர் தனது தலையை மழித்துக் கொண்டதில்லை. மரபு வழியான துறவற ஒழுங்குகளைப் பின்பற்றுதல் தாம் எடுத்துக் கொண்ட வேலைகளுக்கு, குறிப்பாக, உலகப் பயணங்களின்போது, இடையூறாக இருக்கும் என அவர் கருதினார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அனகாரிக_தர்மபால" இலிருந்து மீள்விக்கப்பட்டது