தூக்கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 28:
== தூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு? ==
[[படிமம்:BirdBeaksATamilLandscape.svg|thumb|400px|பல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள்]]
ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று பல நூற்றாண்டுகளாக அறிவியலாளர்கள் வியந்து வந்தனர். ஆனால் அண்மையில் இதற்கான விடை கிடைத்துள்ளது. தூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட ''[[தோக்கோ தூக்கான்|ராம்ஃபசுட்டோசு தோக்கோ]]'' (Ramphastos toco) என்னும் பறவையை சில ஆய்வாளர்கள் [[அகச்சிவப்புக் கதிர்]]படம் எடுத்து எப்படித் தன் உடல் வெப்பத்தை அலகின் வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தனர்<ref>Science 325, 468–470 (2009)</ref><ref>[http://news.bbc.co.uk/2/hi/science/nature/8165895.stm Hot secret behind toucan's bill], பிபிசி செய்தி</ref>. இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால், வெப்பம் அதிகரிக்கும்போது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தை அதிகரிப்பதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது. சூழ் வெப்பநிலையைப் பொருத்தும், பறவையின் நடவடிக்கையைப் பொருத்தும் இப்பறவை தன் அலகு வழியாக 5% முதல் 100% நெருக்கமாக வெப்பத்தை வெளியேற்ற வல்லது. தூக்கான் அலகுகளில் உள்ள குருதிக்குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல இதுவரை ஆய்வுக்குள்ளான வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தூக்கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது